3
Image result for it company pay funny
எம்.எஸ் ஆபீஸ் வாங்கறதுக்கு, புளியம்பட்டி சந்தைல மாடு வாங்குற மாதிரி கிளைன்ட் கிட்ட பேரம் பேசி வாங்கும் சாப்ட்வேர் கம்பெனிகளே.....

நாலு பேர் வேல செய்யற ப்ரோஜெக்டுக்கு, டீம் லீடர், டீம் மேனேஜர், மாடுயுள் லீட், ப்ராஜெக்ட் லீட், ப்ராஜெக்ட் மேனேஜர், டெலிவரி மேனேஜர், ஹுமன் ரிசோர்ஸ், இப்படி ஏழு லீட்கள போட்டுட்டு, காஸ்ட் கட்டிங் பண்றன்னு டாய்லட்  திஸ்ஸு பேப்பர் சைசுக்கு குறைக்கும் சாப்ட்வேர் கம்பெனிகளே ....
Image result for software company funny

10 மாசத்துல ப்ராஜெக்ட் டெலிவரி பண்றன்னு சொல்லிட்டு, 3, 4 வருஷம் ஆனாலும், ஒரு சிசேரியன் பண்ணாக்கூட டெலிவரி பண்ண முடியாத மாதிரி ப்ரோஜெக்ட்ட கற்பழிசிருக்கும் சாப்ட்வேர் கம்பெனிகளே....

Image result for software company funny

பீ.ஈ முடிச்சு, காம்பசில் வேலை வாங்கி, கழுத்தில் ஐடி கார்டு மாட்டிக்கிட்டு, உழைக்கும் ஒரு ரிசோர்ஸ் (உங்கள் பாசையில்) எழுதிக்கொள்வது....

ஒரு நாளைக்கு 8 மணிநேரம் வேலை செஞ்சோம்.... ஒரு நாள், ரெசிசன் வந்துருச்சு, இனிமே 10 மணி நேரம் வேலை செய்னு சொன்னீங்க, அதையும் நாங்க செஞ்சோம்.... ரெசிசன் முடுஞ்சு அடுத்த ரெசிசன் கூட வர போகுது ஆனால் 8 மணி நேரமா குறைக்கல....

Image result for software company funny

10 மணி நேரம் ஆபீஸ்ல இருக்கற மாதிரி ஐடி கார்டு  சுவைப் பண்ணலன்னா சம்பளத்த குறச்சிருவோம்னு 'அங்காடி தெரு அண்ணாச்சி' மாதிறி மெரட்டுநீங்க .... காலைல லேட்டா வந்தாலும் சம்பளத்த கொறைகிரிங்க....

'அரசாங்கம்' கரண்ட் தரமாட்டேங்கறாங்கனு சொல்லி இப்போ ஏ.சி யையும் 5 மணிக்கு மேல ஆப் பண்ணிடுறீங்க....

ஏ.சி இல்லாத கம்பெனில இன்னும் கொடுமை பண்றீங்க ..!!!

Image result for watch pron in prliment

அவனவன் பார்லிமெண்டில்லேயே XXX பாக்குறான், எங்கள ஒரு சினிமா வெப்சைட் ஆவது பாக்க விடுறீங்களா?? அட்லீஸ்ட் ஒரு பர்சனல் மெயில் செக் பண்ண விடுறிங்களா?? அதையும் பையர்வால் போட்டு ப்ளாக் பண்ணி வெச்சுடறீங்க....

எங்க ஊர்ல ஒரு மளிகை கடைக்காரர், ஒரு நாள் அதிகமா 2000 ருபாய் லாபம் வந்ததுக்காகக கடைல வேல செய்யற எம்ப்லாய்சுக்கு கோட்டர் வாங்கி தர்றார்....ஆனா, ஒரு கோட்டருக்கு பல கோடி லாபம் சம்பாதிக்கற நீங்க, employees க்கு வாட்டர் packet ஆவது எம்ப்லாய்சுக்கு வாங்கி தந்தீங்களா?
Image result for software company funny

ஏன் உனக்கு ஏ.சி ரூம்ல உக்காரவெச்சு, ஆயிர கணக்குல சம்பளம் குடுக்கரோமே பத்தாதா???? அப்டின்னு நீங்க கேக்கலாம்....

ஆயிர கணக்குல சம்பளம் தர்றீங்க, ஆனா பீ.எப், பணிக்கொடை, நிறுவனத்தின் நல நிதி, வருமான வரி, தொழில் வரி, மருத்துவ காப்பீடு, அப்டின்னு எதேதோ சொல்லி, முக்கால்வாசி புடுங்கிடுறீங்க,

காலேஜ்ல ஒரே ஜீன்ச ஒரு வாரம் போட்டவன புடிச்சு, வீக் டேஸ்ல  பார்மல் சட்டை, பார்மல் சூ, சனிக்கிழமைனா, கேசுவல் சட்டை, கேசுவல் சூ, கிள்ளைன்ட் மீடிங்னா  டை, கோட்சூட், ஆபீஸ் ஜிம் போகனும்னா ஸ்போட் சூ, டீ சட்டை தான் போடணும்னு "டிரஸ் கோடு"னு ஒன்ன உருவாக்கி காசை கரைக்கறீங்க.....
Image result for software company funny

அப்பப்ப ஏதாவது எச்கேலேசன் மெயில் போட்டு கடுப்பேத்தி சரக்கடிக்க வெச்சு, கொஞ்சம் காச போக வெச்சர்றீங்க....

மிச்ச காச இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெற்றோலியம், இல்லன்னா மெட்ரோ ரயில் நிறுவனம் புடுங்கிடுறான்.... இவன் மட்டும் இல்லாம ஏற்டெல், வோடபோன்  காரனுங்க கால் பேச ஒரு பிளான் , மெசேஜ்க்கு ஒரு பிளான், நெட்டுக்கு ஒரு பிளான், பாட்டுக்கு ஒரு ப்ளான்னு எல்லாத்தையும் புடுங்கிகிறான் ...

இல்ல நீங்க மிச்ச கம்பெனி மாதிரி, தீபாவளி பொங்கலுக்கு போனஸ் தான் குடுக்கறீங்களா???

பத்து வருஷத்துக்கு முன்னாடி சாப்ட்வேர் இஞ்சினீர்''னு சொன்னா, ஒரு மதிப்பாவது இருந்துது.... இப்பல்லாம் 'சாப்ட்வேர் இஞ்சினீர்'ங்கறது, எதோ 'கம்ப்யூட்டர் சாம்பராணி' மாதிரி கேசுவல் ஆயிருச்சு, பொண்ணு கூட தரமாட்டேங்குராணுக .....
Image result for software company funny

சரி, ஹைக் குடுப்பீங்கன்னு பாத்தா, கம்பனி ஷேர் மதிப்பு குறையுது , டாலர் மதிப்பு குறையுது, யூரோ மதிப்பு குறையுது, பீரோ மதிப்பு குறையுது'ன்னு ஏதாவது காரணத்த சொல்லி 'பருப்பு சட்டிய வழிச்சு நக்கு'ங்கறீங்க .... ஆனா டிவி நியூஸ்ல வந்து' இந்த வருஷம் நாங்க 50,000 பிரச்சர்ஸ்  ரெக்ரூட்  பண்ண போறோம்னு ' பல்ல இளிச்சுட்டே சொல்றீங்க....

அப்படியே ஹைக்னு ஒன்னு கொடுத்தாலும், அப்ரைசல்னு ஒரு கான்செப்ட் வெச்சுருக்கீங்க,

ரொம்ப மோசமா வொர்க் பண்ணுனா 'ஈ'

சுமாரா வொர்க் பண்ணுனா 'டி'

எல்லா வேலையையும் கரெக்டா செஞ்சா 'சி'

150 பெர்சென்ட் வேல செஞ்சா 'பி'

200 பெர்சென்ட் வேல செஞ்சா 'எ' (அதெப்படி 200 % வேல செய்யறதுன்னு தெரிலப்பா....)
Image result for appraisal funny
இப்படி 'கண்ணாடிய திருப்புனா ஆட்டோ ஓடும்'ங்கற அளவு லாஜிக் கூட இல்லாத அப்ரைசல் பிராசஸ் வெச்சு வர்ற ஹைகையும் கொரச்சறீங்க ....

இவனுங்க படிச்சவனுக, கண்டிப்பா ஒண்ணா சேந்து ஒரு யூனியன் என்ன, ஒரு ஆனியன் கூட உருவாக்க மாட்டானுக.... ஸ்டிரைக்கும் பன்னமாட்டாணுகற நம்பிக்கைல ஓவரா போய்ட்டு இருக்கீங்க....ஒரு நாள் நாங்க ஒண்ணாசேந்து ஸ்டிரைக் பண்ணத்தான் போறோம் வெள்ளைக்காரன் மட்டும் இல்ல இங்க இருக்கற கிளைன்ட்ங்க கூட கம்பிய காச்சி பின்னாடி குத்தப்போறான், அப்ப தான்யா தெரியும் எங்க அருமை.....

ஏதாவது செய்யணும் சார் ....

கருத்துரையிடுக

 
Top