இன்று மதியம் என் நண்பரோடு ஜல்லிக்கட்டு பற்றி பேசிக்கொண்டிருந்தேன், என் தரப்பு ஆதங்கத்தையும் அவர் தரப்பு ஆதங்கமும் போனது, முடிவில் மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மக்கள் நடந்து கொண்ட நல்ல சம்பவம்மான மக்கள் ஒற்றுமை, சகோதர சகோதரியாக நடந்துகொண்டது, உணவு, தண்ணீர், மருத்துவ உதவிகள் செய்தது, தாங்கள் போடப்பட்ட குப்பைகளை தாங்களே சுத்தம் செய்தது, வாகனங்களுக்கு இடையூறு இன்றி சாலை ஓரம் போராடியது, அம்புலன்ஸ் வண்டிக்கு ஒட்டு மொத்த நெரிசலும் வழிவிட்டது போன்றவை மெய்சிலிர்க்க வைத்து விட்டது.
நான் எழுத நினைப்பது சாலை விதிகளையும் நாம் அதை எப்படி மதிக்கின்றோம் என்பதையும்.
நான் எழுத நினைப்பது சாலை விதிகளையும் நாம் அதை எப்படி மதிக்கின்றோம் என்பதையும்.
பொதுவாக இடது பக்கமாகவே செல்ல வேண்டும், ஆனால் நம்மில் எத்தனை பேர் ஒரு 300, 400 மீட்டர் செல்ல வேண்டும் என்பதற்க்காக எதிர் திசையில் வண்டி ஒட்டுகின்றோம், யோசித்து பாருங்கள் இது நன்றா?
நிறுத்த கோட்டிற்கு முன்னால் வண்டியை நிறுத்த வேண்டும், எனக்கு தெரிந்து கோயமுத்தூர், திருப்பூர் சாலைகளில் அப்படி ஒரு பழக்கம் இருப்பதாக தெரியவில்லை, குத்து மதிப்பாக சிக்னல் முன் நிறுத்துவார்கள் பின்னர் இன்ச் இன்சாக நகர்ந்து (சில நேரங்களில் அடி அடியாக ) பாதி தூரம் சென்று விடுவார்கள். யோசியுங்கள்!!
சாலை சந்திப்பில் உள்ள சிக்னல், நம்மில் பாதி பேர் மதிப்பது அங்கு போக்குவரத்து காவலர் நிற்பதால், ஏன்னுங்க இன்னும் கொஞ்சம் பேர் முன்னாடி நிக்கறவன் நின்னா நிப்பாங்க.
இதெயெல்லாம் செய்வது படிக்காத பாமரன் இல்லை அனைவரும் இல்லை இல்லை பெரும்பாலும் படித்தவர்கள் மட்டுமே, லைசென்ஸ் வாங்க அடிப்படை கல்வி தகுதி பத்தாம் வகுப்பு என்று மாற்றம் கொண்டு வந்தாயிற்று அதனால் கண்டிப்பாக வண்டி ஓட்டும் அனைவரும் இனி படித்து இருபபர்.
ரோட்டில் போக்குவரத்து அதிகம் இல்லை என்றால் சிக்னலை மதிப்பது இல்லை, உன்னை பார்த்து பின்னால் வரும் வண்டிகளும் அப்படியே செல்வார்கள் இதுவே நீ நின்று பார் கண்டிப்பாக உன் பின்னால் வருபவர்கள் நிறுத்துவார்கள்.
போக்குவரத்து காவலர்கல் ஏன் இப்படி கடுகடுப்பாகவே பெரும்பாலும் இருகிறார்கள் என்று தெரியுமா , அவர் இருக்கும் இடத்தில் நீங்கள் ஒருநாள் நின்று பாருங்கள், தினமும் 8 மணிநேரம் பணி, அதுவும் ரோட்டில்தான், காலை மற்றும் மாலை நேரத்தில் இந்த புகையில் நின்று பாருங்கள் அதும் போக்குவரத்தை ஒழுங்கு செய்து பாருங்கள். இதில் சாலையை கடப்பவர்க்கு கண்டிப்பாக போக்குவரத்தை ஒதுக்க வேண்டும் என்பது காவலர்கல் அனைவருக்கும் மனதில் இருக்கும் ஆனால் அதற்குள் இரண்டு நிமிடம் காத்திருக்காமல் வாகனங்கள் செல்லும்போது கடப்பவர்கள் எத்தனைபேர், அனைவரும் படித்தவர், அப்போது அவர்கள் கோபப்படுவது தப்பாக தெரிகிறதா. நம்மவர்கள் வண்டி ஓடும் லட்சணத்தில் எங்கே காவலர்கல் நிம்மதியாய் இருப்பது, காவலாளி இல்லை என்றால் பத்தில் 6 பேர் சிக்னல் மதிப்பது இல்லை.
நண்பர்களே சிந்தியுங்கள், வெளி நாட்டில் இருப்போர் அங்கு உள்ள வெளிநாட்டினர் நம்ம நாட்டு போக்குவரத்தை பற்றி என்ன நினைக்கின்றனர் என கேட்டு பாருங்கள் பின்னர் முடிவெடுங்கள்.
நன்றி
கருத்துரையிடுக