தினமும் நாம ஓடிப்போய் பாக்குறது தின நாட்காட்டி அதுதாங்க டெய்லி காலண்டர் அடுத்தது அதுல பாக்குறது இன்றைய ராசி ஏப்படினு. ஏப்படியோ நேத்து இருந்தது இன்னைக்கு இருக்காது.சந்தேகம் வந்து டிவிய பாத்தீங்கன்னா பட்டைய போட்டுட்டு ஒருத்தர் சொல்லுவாரு இன்னிக்கு நீங்க அதிகம் பேச கூடாதுனு. ஆபீஸ் போனதும் சார் இன்னிக்கு இத்தன பேரு வேலைக்கு வரலைன்னு ஒரு லிஸ்டு வரும். நாம பேசாம இருந்தோம்னா நம்ம டவுசர் கலண்டரும்.
நம் மக்கள் வாழ்க்கைல ஒரு நாளாவது இத நெனச்சு கோவப்படாம இருந்தது இல்ல. சமீப காலமாக எனக்கு ஒரு சந்தேகம், ஆமா சந்தேகமெல்லாம் நமக்கு எப்ப வரும்? நாம ஏதாது ஒன்னுன்னால பாதிக்கப்பட்டா மட்டும் தான் வரும்.
அது ஏன்னனு தெரியல் நம்ம ஊர் ஆளுங்களுக்கு மட்டும் தொட்டதுக்கெல்லாம் ஏன் ஜாதகம் பாக்கறாங்கன்னு. பிறக்கும் போது இருந்து இறக்கும்போது வரை நம்ம ஊர் மக்கள் வாழ்க்கைல அழுகையுடன் ஜாதகமும் கூடவே வருகிறது. ஆனா அதனால எந்த ஒரு நன்மையாவது நடந்து இருக்கா என்று தான் தெரியவில்லை.
சனினா எல்லாருக்கும் ஒரு சந்தோசம் ஏன்னா ஞாயிறு விடுமுறை ஆனா இன்னொரு சனி இருக்கு அதுதான் ஏழரை சனி ஒன்னு இல்ல இரண்டு இல்ல ஏழரை வருஷம் உன்ன வாட்டி எடுக்கும்னு சொல்லிடுவாங்க.
குழந்தை பிறந்து பெயர் வைப்பதில் இருந்து ஆரம்பித்து விடுகிறது, நேமாலஜி அதுதாங்க இந்த எழுத்தில் தான் வைக்க வேண்டும் என ஆரம்பித்து நுமராலஜி இத்தனை எழுத்து தான் இருக்கணும், இத்தனை நம்பர் தான் இருக்கணும் என்று எல்லாம் கண்டிசன் போட்டு ஒரு வழிய நல்ல வாயில நுழையற வாழைப்பழம் என்னும் பெயரையே vaazhaaippaahaam என்று வைத்துக்கூப்பிடும் அளவுக்கு ஆகிப்போச்சு.
நான் பிறந்ததும் எனக்கு பிரபுனு பெயர் வச்சு கூப்பிட்டாங்க, பள்ளிக்கூடம் சேர்த்தும்போது ந.ஆனந்னு(N.ANAND) பெயர் வெச்சாங்க அப்புறம் பெயர் ரொம்ப சிறுசா இருக்குனு ந.ஆனந்தகுமார்னு N.ANANDAKUMAR பெயரை மாத்துனாங்க. அப்புறம் ஆரம்பம் ஆனது ஜாதகத்துல ஏழரை சனினு தூரமா ஒரு பள்ளி விடுதியில சேத்துனாங்க அப்பவாச்சும் விட்டார்களா என் பேருக்கு முன்னாடி ஊர் பேர் வரணும்னு பு.ந.ஆனந்தகுமார்னு P.N.ANANDAKUMAR மாத்துனாங்க, பத்தாவுது படிப்பு முடிச்சு வீட்டு பக்கம் ஒரு பள்ளியில சேத்தும்போது எதுக்கு ஊர் பெயர் முன்னாடின்னு புவ தூக்கிட்டாங்க. கல்லுரி சேரும்போது விட்டார்களா நுமராலஜினு N.AANANTHKUMARனு மாத்துங்க கல்லூரி முடுஞ்சதும் ஒரு ட்விஸ்ட், கடைசியா அந்தர் பல்டிய எங்க அப்பா அவர் பெயரை மாத்திட்டாரு இப்போ என் பேரு M.AANANTHKUMAR
கொழந்தைக்கு பேர் வைக்கணுமா? மொட்டை போடணுமா? காது குத்தணுமா? பள்ளிக்கூடம் சேர்க்கனுமா? அட நீங்க வேற பள்ளிக்கூடம் சேர்க்க பையனுக்கு ஜாதகம் பார்த்தா பரவால்ல பள்ளிக்கூடத்துக்கே ஜாதகம் பார்க்கறவங்க எல்லாம் இருக்காங்க. இப்படி எல்லாம் பார்த்து கொழந்தைய படிக்க வச்சா, அது படிப்புல கொஞ்சம் கம்மியா மார்க் வாங்கிட்டா போதும் அவனுக்கு ஜாதகத்துல கிரகம் சரி இல்ல ரெண்டு வருசத்துக்கு அப்படித்தான்னு சொல்லி விடுதி இருக்குற பள்ளிக்கூடமா பாத்து சேத்திவிடருது இப்படி எல்லா தப்பையும் ஜாதகத்து மேல போட்டு சமாதானம் ஆகிடுவாங்க.
நான் ஒன்னு கேட்க்கிறேன், இது வரைஜாதகம் பார்த்து எந்த ஜாதகக்காரனாது நாம எடுக்க முடிவ ஆமாம் இதான் சரின்னு சொல்லி இருக்கானா??. நீங்க ஒரு முடிவெடுத்து வீடு கட்டலாம்னு போனா கிரகம் சரியா இல்ல ரெண்டு வருசத்துக்கு ஒன்னும் பண்ண முடியாது அப்படிம்பான்.
சின்ன முடிவு பெரிய முடிவு ரெண்டையும் நம்ம மேல நம்பிக்க வச்சு எடுக்கறத விட்டுட்டு எவனோ ஒருத்தன் ஜாதகம் பாக்கறான்னு சொல்லி அவன்கிட்ட போய் முடிவெடுக்க அலைஞ்சு தன்னம்பிக்கையே இல்லாத தமிழனா நம்மை நாமே மாத்திக்கிட்டோம்.
முக்கியமான பகுதி இப்பதான் தொடங்குது, என்ன பாக்குறவங்க என்கிட்ட பேச எதுவும் இல்லைனா உடனே எப்போ கல்யாண சாப்பாடு போடப்போறிங்கனுதா கேக்குறாங்க.
கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்தா பொண்ண புடிச்சுருக்கானு பையன்கிட்ட கேட்க்காம ஜாதகம் பாக்கரவன்கிட்ட கேட்கறது எந்த விதத்துல நியாயம்னு எனக்கு தெரியல. இதுவரைக்கும் நம்ம வாழ்க்கைல ஜாதகம் பார்த்து என்ன வளமா இருந்து இருக்கு, ஜாதகம் பார்க்காம இருந்து என்னதான் நடக்கல?? எல்லாத்துக்கும் மனசுதான் காரணம் ஆனா இத யாரும் புரிஞ்சுக்கற நிலைமைல இல்ல.
என் ஜாதகம் பார்த்திட்டு ரசத்துல ராசி இல்ல, கொலம்புல கேது வருது, சட்டினிய இட்லி பாக்குது சொல்லுறாங்க.
எனது அப்பா பல வருசமா இந்த ஜாதகத்த நம்புறாரு. ஒரு பெரிய பிரச்சனைல இருந்து மீண்டு வர போராடிக்கிட்டு இருந்தார், ஆனா அவர் அதுக்கு பதிலா இன்னொரு பிரச்சனையான ஜாதகத்துல மூழ்கிவிட்டார். ஜாதகத்த ரொம்ப நம்பி தான் அதுல நிறைய தெரிஞ்சுகிட்டதாகவும் மேலும் அவரை விட யாருக்கும் பெரிய பிரச்னை எதுவும் இல்லை என்றும் சொல்லி எனக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பித்து விட்டார்.
உனக்கு தைரியம்னா என்னனு கூட தெரியலை என்று எனக்கு தலை சுத்தற அளவுக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பித்து விட்டார். நான் ஒன்னு கேட்கறேன், தைரியம்னா என்னன்னு எல்லோருக்கும் அவரவர் அகராதில ஒரு அர்த்தம் இருக்கும், நீங்க ஏன் உங்களோட அகராதில இருக்க அர்த்தத்தையே எல்லோரும் படிக்கணும் என்று நெனைக்கறீங்க??
மொத்ததுல ஜாதகத்தை நம்பினோர் எலோரும் தங்களோட தைரியத்தை, தெளிவான சிந்தனையை கைவிட்டுவிடுகின்றனர். அப்படி ஜாதகம் எல்லோருக்கும் இருக்கு என்றால் நம்ம ஊரைத்தாண்டி ஏன் வெளிநாட்டில் எல்லாம் என்ன இருக்கா? இல்லை ஜாதகத்தைபார்த்து சொல்லும் எல்லோரும் ஒரே மாதிரியாத்தான் சொல்றாங்களா? படிச்சவன் படிக்காதவன் என்று விதிவிலக்கு இல்லாம ஏன் போய் இதில் விழறாங்கன்னு எனக்கு தெரியல.
நான்கூட ஒரு காலத்துல ஜாதகத்தை நம்பிக்கிட்டு இருந்தவன்தான் ஆனா இப்ப எல்லாம் அதுல நம்பிக்க சுத்தமா இல்லாம போய்டுச்சு. கஷ்டம் வரும்போதுதான் மறுபடியும் ஜாதகத்தை எடுக்கணும் என்று தோணும் போல ஆனா இனி முடிவெடுத்துவிட்டேன், கஷ்டம் வந்தா ஜாதகத்தை நம்பாம என்னை நம்புவது என்று...
கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்தா பொண்ண புடிச்சுருக்கானு பையன்கிட்ட கேட்க்காம ஜாதகம் பாக்கரவன்கிட்ட கேட்கறது எந்த விதத்துல நியாயம்னு எனக்கு தெரியல. இதுவரைக்கும் நம்ம வாழ்க்கைல ஜாதகம் பார்த்து என்ன வளமா இருந்து இருக்கு, ஜாதகம் பார்க்காம இருந்து என்னதான் நடக்கல?? எல்லாத்துக்கும் மனசுதான் காரணம் ஆனா இத யாரும் புரிஞ்சுக்கற நிலைமைல இல்ல.
கருத்துரையிடுக