0
Image result for evolution of video game
கண்டிப்பா இந்த வார்த்தைகள் எல்லோருடைய வாழ்விலும் என்றாவது எட்டிப்பார்திருக்கும், நம்மில் பலருக்கு ரொம்ப பிடித்தவையாகவும் சிலருக்கு ஒரு காலத்தில் பிடித்தவையாகவும் மேலும் சிலருக்கு ஒரு காலத்தில் ஏக்கம் கொடுத்தவையாகவும் இருந்து இருக்கும்.

Related image
செங்கல் விளையாட்டுகள் (பிரிக் கேம்)
நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது எனது அப்பா சபரிமலை சென்று வரும்பொழுது பிரிக் கேம் வாங்கி வந்தார். அதில் பிரிக்க பில்ட் மற்றும் பிரிக் ரேஸ் விளையாட்டுக்கள் இருக்கும். எனக்கும் என் தங்கைக்கும் எப்போதும் இதில் சண்டையாக தான் இருக்கும்.

கம்ப்யூட்டர் கேம்ஸ்:
எட்டாம் வகுப்பு முலாண்டு விடுமுறையில் எனது பெரியப்பா வீட்டுக்கு சென்றேன் அங்கு நானும் என் பெரியப்பா மகன் நரேந்திர குமாரும் கம்ப்யூட்டர் கிளாஸ்ல் சேர்ந்தோம். வாரம் முழுவதும் கணினி வகுப்பு ஞாயிறு மட்டும் கம்ப்யூட்டர் கேம் இருக்கும். 

Image result for dave game for windows 7
நான் முதன் முதலில் விளையாடிய கேம் "Dave".  அந்த குள்ள மனிதனை பலவித தடைகளைத்தாண்டி இறுதிப்பக்கம் எடுத்து செல்ல வேண்டும். எனக்கு தெரிந்து நம்மில் பலர் முதன்முதலில் விளையாடிய கேம் இதுவாகத்தான் இருக்கும். அதுவும் அதில் இருக்கும் பல குறுக்கு வழிகளைகண்டு பிடித்து செல்வது மிகவும் ஆச்சரியமாய் இருக்கும். அப்போதெலாம் கம்ப்யூட்டர் மானிட்டர் எல்லாம் கருப்பு வெள்ளை மட்டுமே அந்த சென்டரில் ஒரு கம்ப்யூட்டர் மட்டுமே கலர் மானிட்டர் கொண்டது அதில் விளையாட பசங்க சண்டைபோட்டுக்கொண்டு இருப்பாங்க.  

Image result for prince of persia game

இந்த டேஞ்சிரஸ் டேவ் போரடிக்க ஆரம்பிச்சப்ப மற்றொரு  கேம் அறிமுகம் ஆச்சு அதான் "பிரின்ஸ் ஒப் பெர்சியா"  எனக்கு அது அறிமுகம் ஆனது 1998 ஆம் ஆண்டு அன்றில் இருந்து இன்று வரை சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கிறது. ஆனால் எனக்கு அந்த அளவுக்கு புடிக்கவில்லை இந்த கேம். இருந்தும் foxpro வில் cheat code  போட்டு அடுத்த லெவல் போவது எல்லாம்  அப்போதே கண்டுபிடித்தாயிற்று.

Image result for hocus pocus game

அடுத்த் அறிமுகம் ஆனது "Hocus Pogus", "Grand Prix Circuit"   என்ற கேம், நான் முதன் முதலில் கலர் மானிட்டரில் விளையாடிய கேம், அதனாலேயோ என்னவோ மிகவும் பிடித்து போய்விட்டது.

அந்த மூன்று மாதங்கள் நான் படித்த basic programming, Forpro, Dos  விட இந்த கம்ப்யூட்டர் கேம் தான் நன்றாக நினைவில் உள்ளது.  

Image result for 8 bit tv game
 
டிவியில் இணைத்து விளையாடும் வீடியோ கேம்:
எனக்கு டீவி வீடியோ கேம் அறிமுகம் ஆனது நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது, அரையாண்டு பள்ளி விடுமுறைக்கு விடுதியில் இருந்து நண்பர்களுடன் வீட்டுக்கு கிளம்பினேன். பொள்ளாச்சிக்கு அருகில் எனது நண்பன் வீட்டில் தான் நான் முதல் டீவி விடியோகேமை பார்த்தேன். அப்போதே அதன்மேல் ஆர்வம் ஆனால் அதை வீட்டில் கேட்டு வாங்குவது மிக கடுமையான ஒன்றுதான். ஏன்னா அப்பா கிட்ட பேச ரொம்ப பயம்.
Image result for 8 bit popular games

அரையாண்டு விடுமுறை முடிந்து விடுதிக்கு வந்ததும் வீடியோ கேம் பற்றித்தான் ஆர்வம் அதிகரித்தது. வீட்டுக்கு கடிதம் எழுதினேன் அதில் டீவி வீடியோ கேம் பற்றி குறிப்பாக எழுதினேன். அந்தக்கடிதம் விடுதி வாடனிடம் மாட்டிக்கொண்டது. நல்லவேளை அந்த கடிதத்தில் விடுதி வாடனைப் பற்றி எதுவும் நான் எலுதவில்லை.

இரண்டு வாரம் முடிந்து என் அம்மா என்னை பார்க்க விடுதிக்கு வந்தார்கள், விடுவனா டீவி வீடியோ கேம் பற்றி பேச்சை ஆரம்பித்தேன், வாரங்கள் ஓடின மீண்டும் வீட்டுக்கு கடிதம் எழுதினேன். மூன்றாம் இடைத் தேர்வு விடுமுறைக்கு வீட்டிக்கு சென்ற நான் வீட்டில் நான் ஒரு மௌன போராட்டம் நடத்தினேன் விடுமுறை ஒருவாரம் யாரிடமும் பேசவில்லை அம்மா பலமுறை எதற்கு மௌனம் என்று பலமுறை கேட்டும் நான் எதுவும் பேசவில்லை. விடுமுறை முடிந்து விடுதி திரும்பினேன். மீண்டும் வீட்டுக்கு கடிதம் எழுதினேன். முலாண்டு விடுமுறைக்கு எனக்கு டீவி வீடியோ கேம் வேண்டும் அதனுடன் பிளாக் கேசட்டும் வேண்டும் என்று எழுதினேன். முலாண்டு விடுமுறையும் வந்தந்து ஒருவழியாக டீவி வீடியோ கேம் வீட்டுக்கு வந்துருச்சு.
Image result for tv video game cassette set
மஞ்சள், நீளம், பச்சை, ஊதா என பல வண்ண கேம் கேசட் இருந்தாலும் கருப்பு கேசட் தான் ரொம்ப பிரபலம் அதில்  "Contra" கேம் பிரபலம், அதில் இரண்டுபேர் விளையாடலாம் ஆனால் ஒருவர் வேகமாய் விளையாண்டாலும் மற்றவர் காலி அதனால்  சொல்லி வைத்துகொண்டு விளையாட வேண்டும். பலவித லெவல் எல்லாம் உண்டு.
Related image 
Image result for mario game start

மரியோ கேம் அடுத்து, குதித்து குதித்து விளையாடும் அந்த கேம் எல்லோருக்கும் பிடிக்கும். அதை அடுத்து பல கேம் விளையாண்டேன், கார் ரேஸ் , பேக் மேன், டக் ஹண்ட், டாங்கி காங், மர்தல் காம்பாக்ட் உட்பட. இருந்தாலும் கிராபிக்ஸ் எல்லாம் கொஞ்சம் மொக்கையாய் இருந்ததால் கொஞ்ச காலத்திலேயே அதன் மேல் இருந்த விருப்பம் குறைய துவங்கியது.


கம்ப்யூட்டர் கேம்ஸ்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்து விடுமுறைக்கு வீடு திரும்பினேன் ஒரு வாரத்தில் எனது அப்பா அலுவலகத்துக்கு ஒரு புதிய கம்ப்யூட்டர் வாங்கினார் அது தான் ஹ.சி.எல் பிஸிபீ 17" வண்ணத்திரை 40GB ROM நினையும் 125எம்.பி  RAM நினையும் 5 மணிநேர மின் சேமிப்பானுடன் விண்டோஸ் 95 இயக்கம் இருந்தது. முதலில் நமது தேசிய கொடிதான் வரைந்தேன். எனது மச்சான் சில EA கேம் சீடி கொடுத்திட்டார் FIFA World Cup, NBA, Alien Fires.
Image result for commando game 
 
இப்படி போகும்போது எதேட்சையாக ஒரு சிஸ்டத்தில் கமாண்டோ என்று ஒரு கேம் கண்டுபுடிதேன். யாரோ இன்ஸ்டால் செய்துவிட்டு போயிருக்க  நான் விளையாட ஆரம்பித்தேன். எதோ ஒரு லெவெலில் இருந்து ஆரம்பிக்கும், ஒரு ரயில்வே ஸ்டேசனில் தீவிரவாதிகளை சுட்டு புடிக்க வேண்டும். அப்போது தான் கம்ப்யூட்டர் கேம் மற்றும் அதன் கிராபிக்ஸ் பிடிக்க ஆரம்பித்தது. பின்னர் "F1 ரேஸ்", "MOTO GP  ரேஸ்", "Road Rash","Alien Shooter" என்று களை  கட்டியது கொஞ்ச நாள்.  அதுவும் கொஞ்ச நாள் தான். ஆனால் கம்ப்யூட்டர், கேம் எல்லாம் நன்றாக கற்றுக்கொண்ட நேரம் அது.
Image result for Age of the empiresImage result for Alien Shooter
 
பதினோராம் வகுப்புகள் தொடங்கின எனக்கு பிடித்த கம்ப்யூட்டர் பாடமும் இருந்தது, அப்போது அறிமுகமான "Age of the Empires" ரொம்ப பிரபலம். முதல் நிலை கடினம் மொக்கையாக இருந்தாலும் அடுத்த கட்டம் மிக விறுவிறுப்பாக இருக்கும். உணவு, மரம், தங்கம் சேர்த்து போர் படை தயார் செய்து சண்டை போடுவது இறுதியாக ஒரு கோவில் இருக்கும் அதை கைப்பற்றினால் வெற்றி.   
Image result for nfs under ground 
 
கல்லூரி கம்ப்யூட்டர் பிரிவும் கிடைத்தது முதலில் மொக்கையாய் போனது இரண்டு மாதங்களில் கல்லூரி விடுதி செட்டாக பிளாப்பி டிஸ்க்கில் கேம்ஸ் வைத்து கல்லூரி லேபிள் விளையாடினேன். Project IGI  கேம் மற்றும் NFS2 என சுருக்கமா கூறப்படும் "Need for Speed அண்டர் கிரௌண்ட்"  கேம் மறக்க முடியாதது, ராஜேஷ், க்ரிஷன் மற்றும் நான் இணைந்து இந்த விளையாட்டு விளையாடினோம். Need for Speed Pro Street, Hot Pursuit, Under Cover, Carbon, Shift  என பல முன்னேற்றம் வந்தாலும் என்னால் மறக்க முடிய கேம் NFS Under Ground.  அதிலும் அதில் வரும் மகளாரன் கார். நானும் நண்பன் ராஜேஷ், கிருஸ்ணனும் அதில் பெரிய ஆட்கள்.
Image result for nfs underground mclaren car
கல்லூரி முடித்த நாட்களில் வீடியோ கேம் விளையாண்ட என்னை சின்ன பையன் என்று சொல்கிறார்கள் ஆனால் எனக்கு நன் சின்ன பையனாகவே இருக்க விரும்புகிறேன், வயசு ஆனாலும் எனக்கு வீடியோ கேம் மேல் உள்ள பிடிப்பு குறைய வில்லை.

Image result for nfs most wanted mitsubishi fully upgraded
 
முதுநிலை MBA சேர்ந்தேன், கல்லூரியில் கட்டாயம் லேப்டாப் வாங்க வேண்டும் என்று சொன்னார்கள். கிராபிக் கார்டு இருக்கும் ACER மடிக்கணிணி வாங்கினேன் காரணம் அப்போதுதான் கேம் விளையாட முடியும் அதிலும் "Need for Speed Most Wanted" கணினியின் பேட்டரி கூட கொதிக்கும் அந்த அளவு இரவு பகல் பார்க்காமல் விளையாடினேன். எனக்கு மிட்சுபிஷி கார் தான் ரொம்ப பிடிக்கும். 

Image result for Grand Theft Auto vice city
"Grand Theft Auto" அடுத்த மாஸ் விளையாட்டு. கார்களை திருடுவது, மக்களை கொள்ளவது, ரேஸ், டார்கெட் முடிப்பது, போலீஸிடம் தப்புவது, வாகன வித்தை காட்டுவது என பல அம்சங்கள் கொண்டது. இந்த விளையாட்டுக்கு cheet  code  ஒரு புத்தகம் எழுதலாம் அவ்வளவு இருக்கும். அதில் என்னக்கு பிடித்த code bigbang - எல்லா கார்களையும் கொளுத்துவது,  panzer - ஒரு ராணுவ டேங்கர் வாகனம், getthereamazinglyfast - ஒரு பந்தியை கார்.  

இப்படி கேம் பைத்தியம் தொடர்ந்தது.

Image result for cityville logo

2010ல அடுச்சு பிடிசு ஒரு வேலை கெடச்சுருகிச்சு. நம்ம சும்மா இருந்தாலும் பக்கத்துல இருக்குறவங்க சும்மா இருக்குறது இல்ல. என் பக்கத்து சீட்ல இருக்குறது மார்க்கெட்டிங் துறை ஹேமா. காலை அலுவலகம் வந்ததும் முதல் வேலை ஆன்லைன் "Cityville" கேம் தான். காலைல நெட் இல்லனா அந்த நாள் இனிய நாள் இல்ல.

Image result for hill climb

2015ல canwas4 ஸ்மார்ட் போன் வாங்கியாச்சு "Hill Climb", "Temple Run", "Angry Bird", "Subway Surf" போய்கிட்டே இருந்தது வீடியோ கேம் மேல் இருந்த தாகம் . ஒரு வருசத்துல அந்த மொபைல் ஆப் வச்சுருச்சு. 2016ல moto g turbo வந்தது. வீடியோ கேம்  பைத்தியத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வச்சாச்சு. எல்லா கேமையும் அழுச்சாச்சு.   

Image result for future video games 
 
இன்னும் ஏதாவது ஒரு புது தொழில்நுட்பத்தில் இந்த வீடியோ கேம் வரும்.  முற்றுப்புள்ளியம் ஒருநாள் ஆச்சரியக்குறியாக மாறலாம் மீண்டும் நான் பிறப்பேன் வீடியோ கேம் குழந்தையாக .

 நமது பதிவுலக நண்பர்களில் எதனை பேர் என்னைப்போல் வீடியோ கேம் பிரியர்கள் என தெரியவில்லை

கருத்துரையிடுக

 
Top