சமையல்ங்கறது
உண்மையிலேயே ஒரு கலைதான். ஒரு சின்ன விஷயம் தவறாகப் போனால் கூட ஒட்டுமொத்த
உழைப்பும் வீணாப் போகும். இந்த விஷயத்தை வீட்டில் இருக்கும்வரை புரிந்து
கொண்டதில்லை. கொஞ்சமா உப்பு பத்தலைன்னா கூட ‘என்னம்மா பண்ணிருக்க? ஒண்ணுமே நல்லா
இல்லை’ன்னு திட்டிட்டு அதுக்கப்புறமாதான் உப்பு போட்டு சாப்பிடுவேன்.
அப்பெல்லாம்
அம்மா ‘நாளைக்கு பொண்டாட்டி வந்து ஆக்கிப் போடறப்ப உப்பு ஒறப்பே இல்லைன்னாலும்
ஒண்ணும் சொல்லாம சாப்பிடுவல்ல, அப்ப தெரியும்டா என் சமையலோட அருமையைப் பத்தி’ன்னு சொல்லுவாங்க.
ஆனால் அவ்வளவு நாள் வெயிட் பண்ண தேவை
இருக்கவில்லை. காலேஜ் நண்பர்கள் 7 பேர் எங்கள் ஊர் தேர் திருவிழாவிற்கு
திடீர்னு வீட்டுக்கு வந்துட்டாங்க, வீட்ல நானும் என் அப்பா மட்டும் தான் இருந்தோம்,
அம்மா ஊருக்கு போய்டாங்க மதிய சாப்பாட்டு நேரம் சரி நமக்கு தெருஞ்சமாதிரி ஏதாவது
சமைக்கலாம்னு சமையலறை போய் பார்த்தேன், சரி அரிசியும்பருப்பு செய்ய முடிவு
பண்ணினேன்.
7 பேர்க்கு சமைக்கிறது எனக்கு ரொம்ப பெரிய
சாவால் தான்.
தக்காளி, வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு,
கறிவேப்பிலை, கொத்தமல்லியை நன்றாக வெட்டி பொடியாகினேன், 4 உருளைக்கிழங்கு வெட்டிவைதேன், குக்கரில் எண்ணை
ஊற்றி கடுகு பொரிந்ததும், நறுக்கி வைத்த தக்காளி, வெங்காயம், மிளகாய், இஞ்சி,
பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு நன்றாக வதக்கி, பின் தண்ணீர் ஊற்றி
மஞ்சள்பொடி, மிளகாய் தூள் சேர்த்து, வெட்டிய உருளைக்கிழங்கு, அரிசி மற்றும் தேவரம்பருப்பை
போட்டு குக்கரை மூடினேன். ஒரு கால் மணி நேரத்தில சமையல் முடிஞ்சுது. 3 குக்கர்
விசில் வந்ததும் மனதுக்குள் ஒரே ஆனந்தம்.
குக்கரை திறந்ததும் நல்ல மனம், தட்டு நிறைய அரிசியும்பருப்பு
போட்டு நண்பர்களை சாப்பிட கூப்பிட்டேன், அனைவரும் சாப்பிடும் இடையில் தொட்டுக்க
ஊறுகா இருந்தா நல்ல இருக்கும்னு கேட்டாங்க நல்ல வேல மாங்க ஊறுகா ஒரு பாட்டில்
முழுசா இருந்துச்சு, எல்லாரும் உருகாய எடுத்தாங்க. நான் சமையலறை போய் குக்கரில்
இருந்த கொஞ்ச சாப்பாட்ட சாப்டேன்.
ஆனால் கூட
இருக்கிறவன் எல்லாம் ஆஹா ஒஹோன்னு சொல்லிட்டு சாப்பிட்டுட்டு இருந்தானுங்க. என்னடா
இது நமக்கு மட்டும்தான் இப்படி தோணுது போல நல்லா இல்லைன்னு சொன்னால் நம்ம லூசுன்னு
சொல்லிடுவாங்கன்னு முடிவு பண்ணி நானும் அவனுங்கக் கூட்டத்தில சேர்ந்துட்டேன்.
ஒருவழியா
சாப்பிட்டு முடிச்சு எல்லாத்தையும் எடுத்து வைக்கும் போதுதான் தெரிஞ்சது ஆஹா
இதுக்கு தான் ஊறுகா கேட்டாங்கள.”சாப்பாட்டுக்கு
உப்பு போடா மறந்துட்டேன்”
வாழ்க்கையிலேயே
அவ்வளவு கஷ்டப்பட்டு எப்பவும் சாப்ப்ட்டதில்ல. சாப்பிடவே முடியாத ஒரு விஷயத்தை
சூப்பரா இருக்குன்னு புகழ்ந்து கொண்டே சாப்பிடறது எவ்வளவு கஷ்டம்ன்னு அதை
அனுபவிச்சவங்களுக்குத் தான் தெரியும்.
அப்புறம்
ஏண்டா சப்பாடு சூப்பரா இருக்குன்னு சொன்னீங்கன்னு கேட்டப்பதான், நண்பன் சொன்னான் “நாங்க
சும்மா சாப்பாடு ரெடியாடானு சொன்னதுக்கு இல்லைன்னு சொல்லாம உனக்கு தெரியாத ஒன்ன
எங்களுக்காக செஞ்சு கொடுக்கும்போது அத எப்படிடா நால்லா இல்லனு சொல்ல முடியும்”னு சொன்னான்.
கருத்துரையிடுக