கேள்வி ஒன்று- ஹோட்டலுக்கு பைக்லயொ கார்லயோ போறோம், சாப்பிடறோம்.... பார்க்கிங்குக்கு காசு கொடுக்கிறோமா?
ஜவுளிக்கடைகளுக்கு துணி எடுக்கப் போறோம், பார்க்கிங்குக்குக் காசு கொடுக்கிறோமா??
பார்க்கிங் வசதி என்பது ஒரு வால்யூ ஆடட் சர்வீஸ்... அதற்குக் கட்டணம் வசூலிப்பது என்பது தவறானது....
ஆனால், சினிமா தியேட்டர்களிலும், ஷாப்பிங் மால்களிலும் எதற்காக கேள்வியே கேட்காமல் பார்க்கிங்குக்கு தண்டம் அழுகிறோம்?
பத்தாதற்கு இப்போ கோவில்களிலும் தொடங்கீட்டாங்க எங்க ஊர் கோவிலில் வாகன நிறுத்த கட்டண ரசித்து கொடுக்கும் பையன் ஆறாம் வகுப்பு தான் படிப்பான். கோவில்னா குழந்தை தொழிலாளர் வச்சுக்கலாமா.. சரி இத பத்தி இன்னொரு பதிவில் பாக்கலாம்...
எப்படியும் உங்கள் உடைமைகளுக்கு நாங்கள் பொறுப்பில்லைன்னு தான் சொல்றாங்க... அதுக்கு எதுக்கு காசு கொடுக்கணும்....
சட்டம் என்ன சொல்லுச்சு.....
For the regulation of exhibition in the screening of cinematograph in
the State of Tamil Nadu, the Tamil Nadu Cinemas (Regulation) Act, 1955,
hereinafter called 'the Act', has been enacted. Section 10 of the Act
gives power to then Government to make Rules to carry out the purpose of
the Act. Admittedly, before introducing section 10(2)(1) of the Act,
there is no provision under section 10 of the Act giving power to make
Rules to fix the fees for the parking of vehicles in the premises of
cinema theatres. But, there are provisions to establish parking place
for the vehicles. Rule 102-A of the Rules compels the licensee to
provide suitable cycle stand and to make arrangements for the safety of
the cycles. Condition No.16 of form-C which also forms part of then
Rules directed the licensee, apart from cycle stand, to provide
arrangement to look after the cars, scooters and motor-vehicles which
are brought to the licensed premises.
இந்த சட்டத்த எதுக்கு திரையரங்கு அதிபர்களுக்கு ஆதரவாக திருத்தி எழுதினாங்க
ஆனா இப்ப சட்டம் என்ன சொல்லுது
the Government of Tamil Nadu introduced a provision viz.,
Rule 91-B by issuing G.O.Ms.No.678, Home (Cinemas -II) Department dated
18.5.1999, which was published in the gazette and brought into effect on
and from 20.5.1999. The said Rule 91-B reads as follows:-
"91-B:- The licensee of a cinema theatre may collect a
fee for parking vehicles in the premises of the cinema theatre as
specified in the table
கேள்வி ரெண்டு - சினிமா தியேட்டர்களுக்கு நாம சினிமா பார்க்கத்தான் போறோம்... அங்கே இருக்கும் புட்கோர்ட்டுக்கும் நமக்கும் சம்பந்தம் கிடையாது.... அப்படி இருக்கும்போது நாம என்ன சாப்பிடணும்னு அவர்கள் முடிவு செய்வது சரியா?

சினிமா பார்க்க நாம டிக்கட் எடுத்துட்டோம்.... அரங்கினுள்ளே உணவுப்பொருட்கள் அனுமதி கிடையாதுன்னு சொல்றதுக்கு இவங்க யாரு?
அப்படி உணவுப்பொருட்கள் அனுமதி இல்லைன்னா, தியேட்டருக்குள் எதற்கு புட்கோர்ட்?
கேள்வி மூணு - எங்கே உணவுப்பொருட்கள் விற்பனை செய்தாலும், அங்கே, உணவுடன் குடிக்கத் தண்ணீர் கொடுக்க வேண்டியது அவர்கள் கடமை... ஆனால், தியேட்டருக்குள் எங்கேயாவது தண்ணீர் தருகிறார்களா? அதை ஏன் எந்த அதிகாரியும் கவனிப்பதில்லை?
நாலாவது கேள்வி - சட்டப்படி, மாநகரங்களில் தியேட்டர்களின் குறைந்த பட்சக் கட்டணம் 10 ரூபாயும், உச்சவரம்பு கட்டணம் 90 ரூபாயும், சிறு நகரங்களில் அது 80 ரூபாயும் இது போல படிப்படியாக இடத்தைப் பொறுத்து படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது...
சிறப்பு அனுமதியின் பெயரில் மட்டுமே டிக்கெட் விலை மாறுபடும்...
ஆனால், இன்று எல்லா தியேட்டர்களிலும் குறைந்த பட்சக் கட்டணமே 120 ரூபாய் தான்...
அதுவும் வெளிப்படையாக அவர்கள் வெப்சைட்டிலேயே காணலாம்...
இவர்கள் எல்லாரும் அந்த சிறப்பு அனுமதி பெற்றவர்களா? ஆம் என்றால் அதைக் கண்காணிப்பவர்கள் யார்?
இரண்டு பேர் ஒரு படம் பார்க்க ஆகும் செலவு 1000 ரூபாய். வெளியே 10 ரூபாய்க்குக் கிடைக்கும் பப்ஸ் உள்ளே 70 ரூபாய்... ஏன் நான் வெளியே இருந்து வாங்கிகொண்டு செல்ல முடிவதில்லை? தெரிந்தே 60 ரூபாய் எதற்காக அதிகமாகக் கொடுக்க வேண்டும்...
திரையரங்குகளில் கூடுதல் நுழைவுக்கட்டணம் வசூலிப்பது தொடர்பாக
பொதுமக்களிடம் இருந்து பெறும் புகார்களின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள
கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 0424-2260211 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு
திரையரங்குகளில் கூடுதல் நுழைவுக்கட்டணம் வசூலிப்பது குறித்த தங்களது
புகார்களை தெரிவிக்கலாம். மேலும் 7806917007 என்ற எண்ணுக்கு புகார்
குறித்து எஸ்எம்எஸ் மூலம் அனுப்பலாம். விதி மீறல் கண்டுபிடிக்கப்பட்டால்
சம்மந்தப்பட்ட திரையரங்குகள் மீது தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறை சட்டம்
மற்றும் விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.
உணவகங்களிலும், திரையரங்குகளிலும் அத்தியாவசியத் தேவையான தண்ணீரை இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்பது சட்டம். இந்த சட்ட விதிமுறைக்கு உட்படுவதாக வாக்குறுதி கொடுத்துதான் உணவகங்களும், திரையரங்குகளும் செயல்பட தொடங்குகிறது.
கருத்துரையிடுக