0
Image result for பருவ பெண்கள் ஓவியம்

இதை கேட்டதும் பலருக்கு முகம் சுளித்துக் கொண்டு  ஏதோ தேசிய பிரச்சனை மாதிரி பார்பார்கள். பெண்களுக்கு அந்த மூன்றுநாள் அது ஒரு பிரச்சனையே இல்லை. அது பெண்மையின் மிகபெரிய வரம் தாய்மையின் வரம். ஒரு பெண் கருவை வளர்க்க தயார் என்பதற்கான வரம்...

ஒவ்வொரு மாதமும் அதற்கான கருமுட்டைகள் தயாராய் இருந்து பின் அவை காலாவதியான நிலையில் அவை வெளியேறும் காலம் தான் மாதவிடாய் காலம்.




மூன்றில் இருந்து ஐந்து நாட்கள் ரணமான அடிவயிற்று வலியுடன் உதிரமுடன்கலந்து வெளியேரும் காலம்.

பத்துமாதம் மட்டும் ஒரு தாய் குழந்தையை சுமப்பதில்லை. அக்குழந்தைக்காக அவள் பருவமடைந்த காலத்திலிருந்து முதுமையடையும் வரை ஒவ்வொரு மாதமும் இந்த ரணத்தினை (வரத்தினை) அனுபவித்திட வேண்டும்...

தயவு செய்து இதனை அனைத்து ஆண்களும் உணர்வு பூர்வமாக உணர்ந்து பெண்களிடம் அன்பாக நடந்திடவேண்டும்...

இப்போ விஷயத்துக்கு வருவோம். பெண்களுக்கான பொருளை விற்பனை செய்ய கீழ்த்தரமான விளம்பர ஐடியாக்களை கையாள்வதை விட்டு விடுவது நல்லது. நான் பள்ளிநாட்களில் டிவி விளம்பரத்தில் இது போன்றுதான் ஆனால் சொல்லியும் சொல்லாமலும் புரிந்தும் பிரியாததுமாக இருக்கும் முழுதும் புரியாத ஆனால் ஏதோ பெண்கள் விஷயமென யோசிக்கும் பருவம். இது நம் சகோதரிகள், தாயார், தோழிகள் மற்றும் மனைவியும் அனுபவிக்கும் இயல்பான நிலை தான் .

அந்த காலத்தில் இயற்கையான உணவு, மஞ்சள் பூச்சு, தனிமையான ஓய்வு என எதிர்கொண்டு எந்த எதிர்விளைவுகளும் இல்லாமல் சமாளித்தனர். ஆனால் இப்போ அதிலும் கெமிக்கல் மருந்து யுக்திகளால் அதிக பக்க விளைவும் அதை போக்க அதற்கும் கெமிக்கல் வைத்தியம் தேடுகிறோம். கிராமத்து பாட்டிகளிடம் கேளுங்கள் வலியில்லாமல் அந்நாளைகடத்திட ஆயிரம் ஐடியாக்கள் வைத்திருப்பார்கள்.

ஒரு பையன் இதை எழுதுவதை தவறான வழியில் நினைக்காமல் கிராமத்தில் பெண் பூப்பெய்தியதை விழாவாக கொண்டாடியது அவளது தாய்மையை போற்றும் விதமாகவேயன்றி. அவளை தலைகுணிய செய்யும் இந்த நாகரீக விளம்பரங்கள் போலில்லை.

Image result for whisper tv ad 

சமீபத்திய டிவி விளம்பரம் ஒன்று ஸ்கர்ட் போட்ட ஸ்கூல் பெண்கள் 7வதில் இருந்து 9வது வகுப்பு பிள்ளைகள் போன்ற தோற்றம், திரும்பி திரும்பி செக் பண்ணனும்னு அதற்கு அந்த க்ளாஸ் டீச்சர் அவர்களுக்கு சானிடரிநாப்கின் கொடுப்பார் உங்களோட ஒரு பொருளை விற்பனை செய்ய இவ்வளவு மனவருத்தம் கொள்ளும் அளவிற்கான ஒரு விளம்பரம். இது விழிப்புணர்வைதாண்டி பெண்களை ஊனமானவர்கள் போன்று வர்ணிக்கப்படும் ஒரு ஐடியாவாக தோன்றுகிறது. இதை எல்லாம் தட்டி கேட்க  அந்த சங்கம் வராதே...

கருத்துரையிடுக

 
Top