0
Related image
நான் எப்படி கரி விருந்துல செம்ம கட்டு கட்டுவேன்னு சொல்லுறேன் நல்ல கேட்டுக்குங்கோ!!

கறிவிருந்துக்கு போறதுக்கு முதல்நாளே என்னை தயார்படுத்தி கொள்ளவேன். முதல் நாள் இரவு சீக்கிரம் ஜீரனமாக கூடிய இட்லி, தோசை உணவுகளை தேர்வு செய்வேன். ஆயில் பூட் அறவே கூடாது  இல்லையெனில் அது நமக்கு அஜீரன கோளாறு ஏற்பட்டு காரியம் கெட்டுடேபோகும்.

விருந்துக்கு போகும்போது டைட்டான ஜீன்ஸ் பேன்டுகள், டைட்டான சர்டுகளை கட்டாயம் போடக்கூடாது.

தொள தொளவென இருக்கும் பேன்டுகள் காற்றோட்டமான சட்டைகளே சிறப்பு. புல் கட்டு கட்டிவிடுட்டு வரும்போது லூசான சட்டைகள் முன்னோக்கி தள்ளிய தொப்பைகளை காட்டிகொடுக்காது .

பந்திக்கு முந்து படைக்கு பிந்துனு சொல்லுறமாதிரி எந்த காரணத்தை கொண்டும் முதல் பந்தியை தவற விட்டு விடக்கூடாது.

முதல் பந்தியில் மட்டுமே அத்தனை ஐயிட்டங்கலும் கிடைக்கும், சில சப்ளையருக்கு அளவும் தெரியாது அடித்த அத்த பந்திகளில் வெகுவாக அளவுகளை குறைத்து விடுவார்கள்.

பந்தியில் அமரும் போது வயதான பெரியவர்கள் அல்லது சிறுவர்கள் இடையே அமர்வது புத்திசாலித் தனம். ஏன்னா  அவங்கதான் மென்று சாப்பிட அதிக நேரம் எடுத்துகுவாங்க. இளசுகள் சட்டுனு இடத்தை காலி செய்துவிடுவதால் தனியாக அமர்ந்து சாப்பிடும் சங்கடமா இருக்கும்..

சப்ளையரை தல, பாஸ். ஜீ என்று கெத்தான வார்த்தைகளால் அழைப்பது கூடுதல் லாபம். 

பறிமாறும் போது 'போதும் போதும்' என்ற வார்தையை சௌன்டாகவும், 'சாப்பிட்டுட்டு வாங்கிகிறேன்' என்பதை சைலன்டாகவும் சொல்லவேன்டும் .

'ஏம்பா தாத்தவுக்கு கொஞ்சம் கறி வை' என்று சத்தமாக சொல்லிவிட்டு விட்டு, நம்ம பக்கத்துல வந்தவுடன் 'அப்டியே இங்கயும் கொஞ்சம் கவனிங்க பாஸ்னு' சைலன்டாக சொல்லனும். 

கறி வைத்தவுடன் போருக்கு போற மாதிரி அவசரமா லபக் லபக் என சாப்பிடகூடாது. திகட்ட கூடிய கொழுப்புகளையும், எலும்புகளையும் தனி தனியாக பிரித்து நின்னு நிதானமாக மேய வேண்டும்.

சாப்பிட்ட பிறகு வெதுவெதுப்பான சுடுநீரை குடித்தால் எளிதில் உணவு செரிமானமாகும். 

வெத்தலை கூட சாப்பிடலாம் ஆனா என் அனுபவத்தில் அடுத்த நாள் வரைக்கும் எந்த ருசியும் தெரிய மாட்டிங்குது எதோ காம்பினேசன் மிஸ்டேக் இருக்கு.

கருத்துரையிடுக

 
Top