0








ராயல் என்ஃபீல்டுனு சொன்னதும் எல்லோர் மனதிலும் வருவது அதன் கம்பீரத்துக்கும் "டப டப" கர்ஜனையும் தான். பல வண்டிக வந்தும் இதுக்கு முன்னாடி மத்த வண்டிக கொஞ்சம் சைலெண்டா தான் இருக்கணும். இந்த புல்லட் ஓட்டுறவங்களுக்கு அந்த ரோட்டையே விலைக்கு வாங்குன மாதிரி ஒரு மிதப்பு ! ராஜநடை கொண்ட ராயல் என்ஃபீல்டு பிராண்டின் பூர்வீகம் இங்கிலாந்து நாடாக இருந்தாலும் அதன் ராஜ்ஜியம் கொடிகட்டி பறக்கவிட்டது இந்தியாதான் அதிலேயும் சென்னைல தான் தொழிற்சாலையே  இருக்கு. இந்தியாவுக்கு ராஜாவாகி போனது என்றால் மறுப்பதற்கு இல்லை..!


நான் சின்ன பையனாக இருக்கும்பொழுது என் அப்பா பெற்றோல் புல்லட் வச்சிருந்தார் அப்போதெல்லாம் புல்லட்டை ஸ்டார்ட் பண்ண பலமுறை முயற்சித்தும் பலனிருக்காது. என் சின்ன மாமா டீசல் புல்லட் வைத்திருந்தார் அரைகிலோமீட்டர் தொலைவு வரும்பொழுதே அவர் புல்லட் கர்ஜனை வந்துவிடும். காலம் ஓட என் அப்பா புல்லட்டை விற்றுவிட்டார். நானும் ஒருநாள் புல்லட் ஓட்டனும் என்ற கணவு ஓடியது. சரி இவ்ளோ பில்டப் கொடுக்குற இந்த புல்லட் வரலாறு என்னனு பாத்தா அது கொஞ்சம் பெருசாதான் இருக்குது.

உலக மோட்டார்சைக்கிள் வரலாற்றில் ரொம்ப வருஷம் கடந்தும் எண்ணற்ற ரசிகர்களை கொண்டு இருக்கிறது ராயல் என்ஃபீலடு நிறுவனம் ரொம்ப சக்திவாய்ந்த பிராண்டாக இருக்கிறது.


இந்தியாவில் பலரது கனவு வாகனமாக இருக்கும் ராயல் என்ஃபீல்டு என் கனவாகவும் இருந்தது. பல தடைகளை தாண்டி 28/04/2017 அன்று எனக்கும் ஒன்று  சொந்தமானது. நான் புல்லட் வாங்குவதற்கு முழு காரணமாகவும் முழு முயர்சி செய்த என் நண்பன் கிருஷ்ணாவையே சேரும்.

இதிலிருக்கும் சில மேன்பாடுகள்:
பாதுகாப்பு  - 80KM வேகத்திற்கு மேல வண்டிய ஓட்ட முடியாது மீறி நீங்க ஓட்டுனா பைக் பார்ட்ஸ் அடுதோ இல்லையோ உங்க எல்லா பார்ட்சும் ஆடும்.

சின்ன சந்து, U வளைவுகளில் அவ்வளவு எழிதாக வேகமாகவும் போகமுடியாது. பாத்து சூதானமா தான் போகணும்.

வண்டி நிறுத்தும்போது நம்ம வண்டிக்கு பாதுகாப்பு தேவை இல்லை சைடு லாக் மட்டும் போதும். அடுத்தவன் நம்ம வண்டி பக்கம் நிறுத்தினா திரும்ப வண்டி எடுக்கும்போது பாத்து தான் எடுக்கணும். 

இழுவைதிறனும் (Torque)  -28Nm @ 4000 rpm  4 வினாடிகளில் 60KM/H வேகத்தை தொட்டுவிடும்.

அதிர்வு - BS IIIஐ காட்டிலும் BS IV அதிர்வு குறைவுதான். 60KM/H 70KM/H வரை அதிர்வு அதிகம் இருக்காது. 

என்ஜின் (Engine) - Single Cylinder, 4 stroke, Twinspark, Air cooled

எரிபொருள் சப்ளை சிஸ்டம் (Fuel Delivery System) - UCAL 29mm, Constant Vacuum Carburettor.

சத்தம் - சுத்தமா இல்ல. புல்லட் மதிப்பே அதன் சத்தம் தான் அதவே தூக்கிட்டாங்க.

 இதிலிருக்கும் சில குறைபாடுகள்:
அதிர்வு - என்ன தான் 350CC திறன் எஞ்ஜின் இருந்தாலும் 80KM வேகத்துக்கு மேல போக முடியாது.

Image result for AHO royal enfield
OHA (Automatic Headlamp On) - நம்ம ஊருக்கு தேவையில்லாத ஒன்னு. எங்கையா லைட் சுவிட்ச காணோம். வண்டி வெளில ஓட்டிட்டு போனா ரோட்ல போற பூற பயலும் லைட்ட ஆப் பண்ண சொல்லலி ஒரே தொல்லையா இருக்கு நான் என்ன வச்சுகுட்டா வஞ்சகம் பண்ணுறேன்.  

 திறன் - 19.8 bhp @ 5250 rpm அதிக பட்ச வேகமாக 130KM/H போனதாக சொல்கிறார்கள். புது வண்டி கொஞ்ச நாள் போகட்டும் பிறகு இதன் முழு ஆற்றலையும் சோதித்து விடலாம். நான் 100CC பேசன் பிளஸ்சில் 95KM/H வரை முயற்சி செய்துவிட்டேன். 

Image result for fuel injection royal enfield classic 350
எரிபொருள் மீட்டர் - வண்டில எவ்வளவு பெற்றோல் இருக்குனு தெரியாது. 13.5லிட்டர் கொள்ளளவு அதில் 3.5 லிட்டர் ரிசர்வு. கையில் எப்பொழுதும் 200 ருபாய் இருப்பது நல்லது.

ஆன்டி லாக் ப்ரேக் (ABS) - இல்லை 

எடை - 187 கிலோ தவறி கூட புல்லட கீழ சாச்சிடாதீங்க அப்புறம் பப்ளிக்ல பல்புதான்.   
 Image result for digital meter royal enfield classic 350
டிஜிட்டல் மீட்டார் - இல்லை. RPM, Fuel, Odometer, Speedometer, Gear indication, Time, Temperature, Oil இது எல்லாம் இருந்தா இன்னும் நல்லா இருக்கும்.
 Untouched halogen light bulb
விளக்கு - 12V, H4-60/55W (Halogen) வெளுச்சம் நல்லாத்தான் இருக்கு ஆனா அதிக சூடு மற்றும் அதிக மின் சக்தி தேவைப்படும். 
 
சரி வாங்க அப்படியே  ராயல் என்ஃபீல்டு வரலாறையும் கொஞ்சம் தெருஞ்சுக்கலாம்.       

  • 1891 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் அமைந்துள்ள ரெட்டிச் என்ற பகுதியில் தொடங்கப்பட்ட என்ஃபீலடு நிறுவனம் ஆரம்பத்தில் புல் வெட்டும் இயந்திரங்களை தயாரிக்க தொடங்கியது.
  • 1900 ஆம் ஆண்டு வரை குவாட்ரிசைக்கிள் , ட்ரைசைக்கிள் போன்ற வாகனங்களை தயாரித்து வந்தது.
  •  “மேட் லைக் ஏ கன்” என்ற கோஷத்தை நீங்கள் ராயல் என்ஃபீல்டு புல்லட்களில் கண்டிருப்பீர்கள், உண்மையில் இந்த கோஷம் என்ஃபீலடு நிறுவனத்தின் வர்த்தக முத்திரையாக பதிவு செய்யப்பட்ட 1893 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது.
  • 1901 ஆம் ஆண்டில் முதல் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் உருவாக்கப்பட்டது.
  • என்ஃபீல்டு புல்லட்களை மட்டுமல்ல கார்களையும் தயாரிக்க தொடங்கியது.
  • 1904 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து ஆட்டோ ஷோவில் 2.5 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் என்ஜினை பொருத்திய மோட்டார் சைக்கிளை காட்சிப்படுத்தியது.
  • அதன் பிறகு பல்வேறு சிறிய அளவிலான மோட்டார் சைக்கிள் உற்பத்தியை தொடங்கியிருந்தது.
  • 1914 ஆம் ஆண்டில் தொடங்கிய முதல் உலகயுத்தத்தில் அரசுகளுக்கு மோட்டார் சைக்கிள் அனுப்பி வைக்க தொடங்கியது.
  • 1916 ஆம் ஆண்டில் துப்பாக்கி பொருத்தப்பட்ட மோட்டார்சைக்கிளை என்ஃபீல்டு அறிமுகம் செய்தது.
  • 1921 ஆம் ஆண்டில் 976 சிசி கொண்ட பைக்குகளை அறிமுகம் செய்யப்பட்டது.
  • 1931 ஆம் ஆண்டு புல்லட் என்ற பெயரில் சைக்கிளை அறிமுகம் செய்தது.
  • 1932 ஆம் ஆண்டில் முதன்முதலாக புல்லட் மோட்டார் சைக்கிள் வெளிவந்தது.
  • 1939 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய இரண்டாம் உலகயுத்தத்தில் 125cc, 250cc, 350cc, 570cc ஆகிய சிசி கொண்ட பைக்குகளை பிரிட்டிஷ் படைக்கு வழங்கியது.
  • இந்த போரில் FLYING FLEA என்ற பைக்கை அறிமுகம் செய்தது.
  • 1951 ஆம் ஆண்டு உலகின் முதல் சூப்பர் பைக் மாடலை அறிமுகம் செய்தது.
  • 1953 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு லோகோ இன்றைக்கும் சிறிய மாறுதலுடன் புல்லட டேங்கில் இடம்பெற்றிருக்கின்றது.
 இந்தியாவில் களமிறங்கிய ராயல் என்ஃபீல்டு



  • 1954 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்திற்கு 800 புல்லட் ohv singles மோட்டார் சைக்கிள்கள் இந்திய எல்லை பாதுகாப்பு பணிக்காக வாங்கப்பட்டது.
  • 1955 ஆம் ஆண்டு மெட்ராஸ் மோட்டார் நிறுவனம், இங்கிலாந்தின் என்ஃபீல்டு நிறுவனத்துடன் இணைந்து பாகங்களை தருவித்து ஒருங்கினைத்து விற்பனை செய்ய அனுமதியை பெற்றது.
  • அதன்பிறகு, புல்லட் 350 புல்லட் 500  மோட்டார் சைக்கிள்கள் இந்திய சந்தையை வந்தடைந்தது.
  • 1956 ஆம் ஆண்டில் திருவொற்றியூரில் 2.96 ஏக்கர் பரப்பளவில் ராயல் என்ஃபீலடு நிறுவனம் தொடங்கப்பட்டு முதல் வருடத்தில் 163 பைக்குகளை தயாரித்தது.

ராயல் என்ஃபீல்டு இந்தியா
1953 ஆம் ஆண்டு மெட்ராஸ் மோட்டார் என்ற நிறுவனம் என்ஃபீல்டு இங்கிலாந்து நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தம் வாயிலாக இந்திய சந்தையில் என்ஃபீல்டு பைக்குள் களமறிங்கியது. அதன் பிறகு எவ்வாறு இந்தியா தாயகமானது என இனி பார்க்கலாம்…!
முன்பாக வரலாற்றை படிக்க இங்கே செல்லவும் – இங்கிலாந்து என்ஃபீல்டு நிறுவனம்

1954 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய வர்த்தக ரீதியான நடவடிக்கையை தொடர்ந்து என்ஃபீல்டு இந்தியா லிமிடேட் என்ற பெயரில் என்ஃபீல்டு பைக்குகள் இந்தியாவில் உற்பத்தியை தொடங்கியது.
1956 ஆம் ஆண்டில் திருவொற்றியூரில் 2.96 ஏக்கர் பரப்பளவில் ராயல் என்ஃபீலடு நிறுவனம் தொடங்கப்பட்டு முதல் வருடத்தில் 163 பைக்குகளை தயாரித்தது.

1959 ஆம் ஆண்டில் முதல் முதல் UCE 250cc எஞ்சின் உருவாக்கப்பட்டது.
1962 ஆம் ஆண்டு இந்திய சந்தையில் ராயல் என்ஃபீல்டு ஃபேன்டாபிளஸ் என்ற ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.
Related image

1963 முதல் கஃபே ரேஸர் கான்டினென்டினல் ஜிடி மாடல் வெளியடப்பட்டது.
1966 இங்கிலாந்து நாட்டில் உள்ள ரெட்டிச் தொழிற்சாலையை என்ஃபீல்டு நிறுவனத்தின் தொழிற்சாலையை மூடியது.

1970 ஆம் ஆண்டு என்ஃபீல்டு இங்கிலாந்து நிறுவனம் சந்தையிலிருந்து முழுமையான தனது சேவையை நீக்கி கொண்டது. ஆனால் இந்தியா என்ஃபீலடு நிறுவனம் மெட்ராஸ் மோட்டார் நிறுவனத்தால் தொடர்ந்து இயக்கப்பட்டு வந்தது.

1973 ஆம் ஆண்டில் இரண்டு ஸ்டோர்க் கொண்ட க்ரூஸேடர் பைக் அறிமுகம் செய்யப்பட்டது.

1980 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து முதல் மினி புல்லட் 200சிசி வில்லயர்ஸ் எஞ்சின் பொருத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது.

1984 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து இங்கிலாந்து நோக்கி பயணத்தை புல்லட்கள் ஏற்றுமதி வாயிலாக தொடங்கியது.

1988 ஆம் ஆண்டு ஜன்டாப் நிறுவனத்துடன் இணைந்து என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்களை தயாரிக்க தொடங்கியது. ஃப்யூரி (163cc), எக்ஸ்புளோர் (50cc) மற்றும் சில்வர் ப்ளஸ் (50cc) போன்ற மாடல்களை தயாரித்தது. இந்தியாவின் முதல் டிஸ்க் பிரேக் பெற்ற மாடலாக எக்ஸ்புளோர் வெளிவந்தது.

1989 ஆம் ஆண்டு மோஃபா என்ற பெயரில் மொபட் மாடலை அறிமுகம் செய்தது.

1991 ஆம் ஆண்டு உலக மோட்டார் சைக்கிள் வராலாற்றில் முதன்முறையாக 321 சிசி கொண்ட 3.5 பிஹெச்பி பவரை வெளிப்படுத்தும் டீசல் எஞ்சின் கொண்ட முதல் டாரஸ் புல்லட்டை அறிமுகம் செய்தது.

1993 ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் உற்பத்தி செய்யப்பட்ட 500 சிசி புல்லட் மாடல் விற்பனைக்கு வெளியானது.

1994 ஆம் ஆண்டு ஐஷர் நிறுவனம் என்ஃபீல்டு இந்தியா நிறுவனத்தை வாங்கி மீண்டும் ராயல் என்ஃபீல்டு என பெயர் சூட்டியது.

1996 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் க்ரூஸர் ரக லைட்டனிங் 553 அறிமுகம் செய்யப்பட்டது.

1997 ஆம் ஆண்டில் 40 மோட்டார் சைக்கிள்கள் உலகின் மிக உயரமான மோட்டார் சைலை என அழைக்கப்படும் கர்டுங்கலா பகுதிக்கு டெல்லியில் இருந்து பயணித்தது. இதன் தொடக்கமே Himalayan Odyssey உருவானது.

2000 த்தில்  ராயல் என்ஃபீல்டு இணையதளம் தொடங்கப்பட்டது.

2001 ல் முதல் எலக்ட்ரிக் இக்னிஷன் கொண்ட எலக்ட்ரா புல்லட்கள் விற்பனைக்கு வந்தது.

2002ல்  தன்டர்பேர்ட் அறிமுகம் செய்யப்பட்டது.

2005 ராயல்எனஃபீலடு நிறுவனத்தின் 50வது ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.

2008ல் கிளாசிக் 500 அறிமுகம் செய்யப்பட்டு ஜெர்மனியில் விற்பனைக்கு வெளியிடப்பட்டது.

2009ல் கிளாசிக் 500 மற்றும் கிளாசிக் 350 இந்தியாவில் வெளியானது.

2011ல் இரண்டாவது ஆலையை ஒரகடம் அருகில் 50 ஏக்கர் பரப்பளவில் நிறுவியது.

2012ல் தன்டர்பேர்ட் 500 வெளியானது.

2013 ல் கான்டினென்ட்டில் GT  விற்பனைக்கு வெளியானது.

2014ல் ராயல் என்ஃபீல்டு புதிய லோகோ வடிவமைக்கப்பட்டு வெளியானது.

2015 முதல் உலகப்போரை நினைவை வெளிப்படுத்தும் வகையில் டெஸ்பேட்ச் ரைடர் சிறப்பு எடிசன் அறிமுகம் செய்யப்பட்டது.

2016ல் அட்வென்ச்சர் ரக மாடலாக ஆர்இ ஹிமாலயன் பைக் வெளிவந்தது.

2016ல் தனது பூர்வீகத்தை போற்றும் வகையில் ரெட்டிச் சிறப்பு மாடலை அறிமுகம் செய்தது.

2016 வருடம் இறுதியில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் முதன்முறையாக 750சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட கான்டினென்ட்டில் 750 ஜிடி மாடலை வெளியிடது.

2017 பி.எஸ்-IV ரக ராயல் என்ஃபீல்டு  பைக்குகள்  வெளியிடப்பட்டது.




கருத்துரையிடுக

 
Top