குழந்தைகளுக்குத் தாய்ப்பால் முக்கியமான
உணவாகும். ஒரு தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்போது அது
இருவருக் குள்ளும் ஒரு நெருக்கத்தை உருவாக்குகிறது. இந்த நெருக்கமில்லாத
குழந்தைகளே அதிகமாக விரல் சூப்பும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன.
புட்டிப்பால் குடிக்கும் குழந்தைக்கு இப்படியான பழக்கம் அதிகம் உள்ளது.
குழந்தை விரல் சூப்புவதற்கு மிக முக்கியமான காரணமே தனக்கு முழுமையான
பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதுதான் என்கிறார்கள் சில உளவியல்
நிபுணர்கள். சிந்தனை அதிகமுடைய குழந்தைகளிடம்தான் விரல் சூப்பும் பழக்கம்
இருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள்.
பெற்றோரிடம் தேவையான அன்பு, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவை கிடைக்காத
சூழலில்தான் குழந்தைகளிடம் விரல் சூப்பும் பழக்கம் நீடிக்கிறது.
பெற்றோர்களிடம் நிரந்தர சண்டை இருந்தால் அவர்களின் குழந்தைகளிடம் விரல்
சூப்பும் பழக்கம் உறுதியாக இருக்கும் என்கிறார்கள்.
குழந்தைகளுக்கு
ஏதாவது ஒரு வழியில் மன அழுத்தம் ஏற்படும் போது அவை விரல் சூப்புவதைத் தான்
விரும்புகிறது. சில குழந்தைகள் ஓய்வுக்காகவும், தூக்கம் நன்றாக
வருவதற்காகவும், சில சமயம் பசிக்காகவும் கூட விரல்களைச் சூப்பு கின்றன.
என்னடா இவன் கையூட்டுனு தலைப்ப வச்சுட்டு கைசூப்புரத சொல்லுரானேனு நினைக்க வேண்டாம். அந்த இரண்டிற்கும் சம்பந்தம் இருக்கு எப்படி ஒரு குழந்தைக்கு அதன் தாயிடம் இருந்து காரியம்(அன்பு, பராமரிப்பு, பாதுகாப்பு) நடக்கலையோ அதற்கு பதிலாக லஞ்சம் என்னும் தன் விரல் கொண்டு ஆதாயத்தை பெற்றுக்கொள்கிறது.
ஒரு சான்றிதலோ அல்லது கையொப்பமோ வாங்க அரசு அலுவலகம் சென்றால் நாம் அவருக்காக காத்திருந்து காத்திருந்து எப்படி நமக்கு ஒரு மன அழுத்தம் ஏற்படும் அதை தவிர்க்க குழந்தை விரல் போன்ற சில காந்தி காகிதங்கள் தேவைப்படும்.
எது
ஊழல் என்று கேட்டால் பெரும்பாலானோர் கையூட்டு (இலஞ்சம்) வாங்குறது தான்
ஊழல்னு சொல்லுவாங்க. கையூட்டு ஊழலின் ஒரு வகை தான். நம் நாட்ல பலவகைகளில்
புதுசு புதுசாக ஊழல்கள் நடக்கின்றன. ஐம்பது வருஷம் முன்னர் நடந்த ஊழல்கள்
நேரடியானதாகவும், மக்களும் எளிதாக புரியக்கூடியதாகவும் இருந்தது. ஆனால்
இப்போ நடக்கும் ஊழல்கள் ரொம்ப சிக்கலானாதாகவும், இரகசியமாகவும் மக்களுக்கு
அனிமேசன் விடியோல விளக்கினால் கூட புரிந்து கொள்ளவோ நம்பவோ முடியாத
வகைகளில் நடக்கின்றது.
வெளி நாடுகளில் ஊழல்களை பல வகைகளாக பிரித்து
அதன் ஒழிப்பு முறைகள் பற்றி விரிவாக ஆராய்கின்றனர். நாம் பொதுவாக ஊழல்
என்று குறிப்பிடுவதை அவர்கள் குறிப்பாக பல்வேறு வார்த்தைகளில்
சொல்லுகின்றனர்; எடுத்துக்காட்டிற்கு - graft, bribery, port barreling,
embezzlement, nepotism, cronyism, extortion …..
ஊழல்களைப்
பற்றியும் அதற்கான அடிப்படை காரணங்களைப் பற்றியும் தெளிவாக
புரிந்துகொள்ளாமல் ஊழலை எதிர்க்கப் போராடுவது பயனற்றது. நமது தெளிவற்ற
நிலையை அரசியல்வாதிகள் வசதியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
ஆனால் வணிக நிறுவனங்கள் அரசின் சேவைக்காக அணுகும் பொழுது நடக்கும் ஊழல்கள் மிகப் பெரிய அளவினதாகவும், பல நேரங்களில் நாட்டிற்கே கேடு விளைவிப்பதாகவும் நடக்கின்றன. 2G ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல் போன்றவைகளை நினைத்துப் பாருங்கள். நம் மாவட்டத்தில் அனைத்து அதிகாரிகளும் பத்து வருடங்களுக்கு மேலாக பல மக்களிடம் இருந்து வாங்கிய கையூட்டை விட மிக அதிகமாக ஒரே ஒப்பந்தத்தில் டில்லி அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பெற்று விடுகின்றனர். இவற்றில் பெரும்பாலான ஊழல்கள் அரசு விதிமுறைகளை தளர்த்துவதற்கும், சட்டத்திற்கு புறம்பாக அரசு சேவைகளை அடைவதற்கும் நடத்தபடுபவைகளே. பெரிய நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமான சட்டங்களை இயற்றுவதற்கும் ஊழல்களில் ஈடுபடுகின்றன.
உதாரணம் சமிபத்திய அந்நிய முதலீடு சட்ட மசோதா.
பல ஊழல்கள் உடனடி பலனை எதிர்பாராமல் நீண்ட கால பலனின் அடிப்படையில் நடக்கின்றன. பத்திரிக்கைகளுக்கு அரசு விளம்பரங்கள் வழங்குவது அல்லது வேண்டும் என்று வழங்காமல் நிறுத்துவது போன்ற ஊழல்கள் இவ்வகையில் அடங்கும்.
நம் நாட்டில் சட்டத்திற்கு புறம்பானவைகள் மட்டும் தான் ஊழல்கள் என்று வரையறுக்க முடியாது. சட்டப்படி அனைத்து விதிமுறைகளை பின்பற்றியுமே பல ஊழல்கள் தினம் நடக்கின்றன. வீட்டு வசதி வாரியத்தின் நூற்றுகணக்கான வீடுகள் அரசியல்வாதிகளாலும், உயர் அதிகாரிகளாலும் குறைந்த விலையில் சட்டப்படி கொள்ளை அடிக்கபடுவதை அனைவரும் பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றோம்.
பல வல்லுனர்கள் பொது மக்கள் நலனிற்கு எதிரானவைகள் அனைத்தும் ஊழல்கள் என்று வரையறுக்கிறார்கள். ஆனால் பல ஊழல்கள் இந்த வரையறைக்குள்ளும் சிக்குவதில்லை. உதாரணத்திற்கு அமெரிக்காவை ஆட்டிப்படைத்த வாட்டர்கேட் (Watergate) ஊழலால் எந்த பொதுமக்களும் பாதிக்கப்படவில்லை. ஆயினும் அந்த ஊழலால் அமெரிக்க அதிபர் நிக்சன் பதவி விலக வேண்டிவந்தது. இன்றும் உலகெங்கும் நடக்கும் பெரிய ஊழல்களை இதன் நினைவாக கேட் என்று அடைமொழி சேர்த்து அழைக்கிறார்கள்
பல நேரங்களில் சட்டமீறலோ, மக்கள் நலனோ நிர்ணயிப்பதை விட மக்களின் அபிப்பிராயங்களே பல செயல்களை ஊழலா? இல்லையா என்று நிர்ணயிக்கின்றன. ஆனால் மக்களின் அபிப்பிராயங்கள் சரியானதாகவோ நிலையானதாகவோ ஒரே மாதிரியானதாகவோ இருப்பதில்லை. இதை சமிபத்தில் டில்லி மாணவி கற்பழிப்புக் கொலை விவகாரத்தில் கூட தெளிவாகக் காண முடியும். இந்தியாவில் தினம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழித்துக் கொலை செய்யபடுகையில், டில்லி மாணவியின் கொலைக்கு மட்டும் மக்கள் கொதித்தெழுந்து நாடாழுமன்றத்தை முடக்கிவிட்டனர். அதே போன்று பல பெரிய ஊழல்
இதயம் சிறுத்தவர்கள்
இயற்க்கை சிதைத்தவர்கள் ,
பூமியைப் பிளந்தவர்கள்
பூகம்பம் விதைத்தவர்கள் !
நீர் நிலைகளெல்லாம்
நிரவி விட்டவர்கள் -அதில்
மாடி வீடு கட்ட
மணல் கொள்ளை இட்டவர்கள் !
அதிகார வர்க்கங்களாய்
அவனியில் நின்றவர்கள்
சதிகார கூட்டணியில்
சங்கமம் ஆனவர்கள் !
மரம் மரமாய் வெட்டிச்
சாய்த்தவர்கள் -மழை
வரமாய் கேட்டு
ஓய்ந்தவர்கள் !
அணுவைப் பிளந்து
அறிவைப் பதித்தவர்கள் ,
மனுவைக் குளைத்து
மண்ணில் புதைப்பவர்கள் !
சாதியின் பெயராலே
சமூக அவல த்தை ,
சாதனைப் பட்டியலில்
சமத்தாய் சேர்த்தவர்கள் !
கலாச் சாரத்தை
காலில் மிதித்தபடி ,
உ லகத் தரத்தை
ஓடிப் பிடித்தவர்கள் !
காலச் சக்கரத்தை
கணினி மயமாக்கி ,
கடவுளே வந்தாலும்
கையூட்டு கேட்பார்கள்
இயற்க்கை சிதைத்தவர்கள் ,
பூமியைப் பிளந்தவர்கள்
பூகம்பம் விதைத்தவர்கள் !
நீர் நிலைகளெல்லாம்
நிரவி விட்டவர்கள் -அதில்
மாடி வீடு கட்ட
மணல் கொள்ளை இட்டவர்கள் !
அதிகார வர்க்கங்களாய்
அவனியில் நின்றவர்கள்
சதிகார கூட்டணியில்
சங்கமம் ஆனவர்கள் !
மரம் மரமாய் வெட்டிச்
சாய்த்தவர்கள் -மழை
வரமாய் கேட்டு
ஓய்ந்தவர்கள் !
அணுவைப் பிளந்து
அறிவைப் பதித்தவர்கள் ,
மனுவைக் குளைத்து
மண்ணில் புதைப்பவர்கள் !
சாதியின் பெயராலே
சமூக அவல த்தை ,
சாதனைப் பட்டியலில்
சமத்தாய் சேர்த்தவர்கள் !
கலாச் சாரத்தை
காலில் மிதித்தபடி ,
உ லகத் தரத்தை
ஓடிப் பிடித்தவர்கள் !
காலச் சக்கரத்தை
கணினி மயமாக்கி ,
கடவுளே வந்தாலும்
கையூட்டு கேட்பார்கள்
கருத்துரையிடுக