0
Related image
எல்லோருக்கும் ரொம்ப சிக்கலான தருணம் என்றால் வாகனம் ஓட்டுறதுதான். அதுவும் நெரிசல் அதிகமாக இருக்கும் சாலை என்றால், அதில் இருசக்கர வாகணங்கள் கண்ணா பின்னான்னு வந்தால் நமக்கு வரும் கோபத்திற்கு வரையறை இருக்காது. இந்தநிலையில் யாரவது வண்டி நம்ம வண்டில லேசா முட்டுனாலும் அவன் காலி அவன் தோல்சீவி பஜ்ஜி போட்டுருவோம்.
    
ஒருமுறை என் நண்பருடன் பைக்கில் ஹோப்ச்சிளிருந்து சிங்காநல்லூர் வழியாக வந்து கொண்டிருந்தோம் அந்த சாலை கொஞ்சம் நெரிசல் அதிகமாகவே இருந்தது, எங்களுக்கு முன் சென்ற ஒரு பைக் திடிரென இன்டிகேடர் எதுவும் போடாமல் ரைட் சைடு திரும்ப நாங்கள் சடன் ப்ரேக் போட்டும் அவர் பைக்கில் முட்டியது இருவர் வண்டிகளுக்கு எந்த சேதமும் இல்லை. தவறு அவர் மீது என்றாலும் அந்த பைக் ஓட்டிவந்தவர் எங்களை திட்ட என் நண்பன் பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டி வண்டியை ஓட்டினார்.

Image result for singanallur traffic

அவர் அப்படி செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்தது.“ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல என்று … அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..?” என் நான் கேட்க என் நண்பன் சொன்னது தான் ‘குப்பை வண்டி விதி’.

ஆங்கிலத்தில் இதை ‘The Law of the Garbage Truck’ என்பார்கள். “இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர். பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள். மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்குக்ம்.
Related image
அது போன்ற குப்பைகள் சேரச் சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அதை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும்.

அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது. நம்ம பேர் தான் நாறிப்போகும்…!!” என்று சொல்ல, எனக்கோ வியப்பாக இருந்தது.

இதில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பைவண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள் என்பது தான்.

Related image

அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ,  அல்லது கொடுமைகளை செய்தாலும் பதிலுக்கு நீங்களும் தாக்குதல் நடத்த வேண்டாம், வார்த்தை யுத்தத்திலும் இறங்காது ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள்.

நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம். அப்படி நடத்தாதவர்களுக்காக நாம் ஒரு புன்னகையை விட்டு செல்வோம். இது ஒன்றே நாம் செய்யவேண்டியது.

வாழ்க்கை என்பது 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொருத்தது. 90% நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொருத்தது.

கருத்துரையிடுக

 
Top