0

காலையில் அவளை முத்தமிட்டு எழுப்பி ஒரு கப் காஃபி கொடுத்தால் போதும், 

இரவு நான் உறங்கும் வரை எனக்குத் தேவையானதைச் செய்ய பம்பரமாய் சுழல்வாள்.

பின்னிருந்து அணைத்தபடியே அவளுக்கு சமையல் கற்றுக் கொடுக்கிறேன்,

என் ஆசையெல்லாம் அவள் கற்றுக்கொள்ளக் கூடாது என்பதுதான்.!!

பசிக்கிறது என்று நான் சொன்னதும் என்னை அவள் முத்தமிடுகிறாள் என்றால், 

இன்னும் சமையல் தயாராகவில்லை என்று அர்த்தம்..!!

சமைத்ததை கையில் கொடுத்து ருசி பார்க்கச் சொல்லியிருந்தால் உப்பில்லை என்று சொல்லியிருப்பேன்,

ஊட்டிவிட்டுக் கேட்கும் அவளிடம் எப்படிச் சொல்வது ..?

தோட்டத்தில் நீ நின்றிருந்த போது உன்னை உரசிச் சென்ற வண்டு ,

மற்றொரு வண்டிடம் கேட்டது.... வாசனை புதிதாய் இருக்கிறதே இது என்ன பூ என்று !!!

மழைக்காக அவளும் இடிக்காக நானும் காத்திருக்கிறோம்,

இதோ மின்னல் தென்படுகிறது,.. அவள் என்னைத் தழுவிக்கொள்ள இன்னும் சில விநாடிகளே உள்ளது.!!

என் போர்வையைத் துவைக்கும்போது மட்டும் ஏன் இவ்வளவு அக்கறை என்றேன்,

என் இடத்தை நிரப்பும் அனைத்தின் மீதும் அப்படித்தான் என்கிறாள் !!!.

உன் குரல் கேட்காத நாட்களில்,

நான் கேட்ட எதுவும் என் நினைவில் இருப்பதில்லை ..!!

என்னை வீழ்த்த அம்பு செலுத்த தேவையில்லை,

அன்பு செலுத்தினால் போதும் அன்பே...

நீ என் வாழ்க்கையில் வந்தபின்பு எனக்கு தினமும் வசந்த காலம் தான்.....

கனவில்கூட நீ காதலுடன் தெரிகின்றாய்!

மனம் நிறைய பாசம், மாற்றமில்லா நேசம் உனக்கு என்ன விலை தர முடியும்...

மரணம்வரை என்னைத் தவிர...

கருத்துரையிடுக

 
Top