0
Image result for ஜாதகம்
எனக்கு இந்த ஜோதிடத்தின் மீது எப்பவுமே நம்பிக்கை இருந்ததில்லை அத பத்தி ஒரு பதிவும் போட்டேன் அதை பார்க்க  "ஜாதகம் எல்லாருக்கும் ஒரு வேதகம்". செய்தித்தாள்களில் வரும் ராசிபலன்களை விளையாட்டுக்கு மட்டுமே படித்திருக்கிறேன். செய்தித்தாள்களிலோ பத்திரிக்கைகளிலோ வரும் ராசிபலன் மற்றும் வருடபலன் கணிப்புகளைப் போன்ற ஏமாத்துவேலை  ஏதும் இருக்காது.

இப்ப எல்லாம் காலைல எந்த தொலைகாட்சிய போட்டாலும் அதுல வர்றது இன்றைய ராசிபலன்கள் தான். 


ஏன் இப்ப இதபத்தி எழுதவேண்டும் என்கிற கேள்வி உங்களுக்கு வந்தால், ரொம்ப நாலா எழுதவேண்டும் என்று நினைத்தது இப்பதான் நேரம் கிடைத்தது அப்படீன்னும் சொல்லலாம் இப்பதான் என் ஜாதகம் அடிக்கடி என் பார்வையில் படுகிறது(எனக்கு ஒரு பெண்ண தேடுறாங்கன்னு அர்த்தம்).


ஆண்டு தொடங்கியவுடன் வருட பலன்களையும் ஜாதகங்களையும் தோஷ நிவர்த்திகளையும் தேடி ஓடுபவர்களைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது. இதில் நேராக நானே பாதிக்கபட்டடென் "மணப்பெண் வாழையும் ஒரு தலை காதலனும்" இதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் வீட்டுல இருக்குறவங்க சும்மாவா இருப்பாங்க, எல்லா நிவர்த்தியையும் நம்மை செய்ய வைப்பாங்க இதை எல்லாம் ஏன் சகித்துக் கொள்கிறோம் என்றால் நம்மக்கு சோறு முக்கியம்.

ஒரு ஜாதகரின் பிறந்த நட்சத்திரத்தின் அதிபதியின் திசைதான் துவக்க திசைனு சொல்லுறாங்க. தசா புத்திகளின் கால அளவுனு ஒன்ன வச்சிருகுறாங்க


சூரிய தசை - 6 ஆண்டுகள் 
சந்திர தசை - 10 ஆண்டுகள் 
செவ்வாய் தசை - 7 ஆண்டுகள்
 ராகு தசை - 18 ஆண்டுகள்
குரு தசை - 16 ஆண்டுகள் 
சனி தசை - 19 ஆண்டுகள்
 புதன் தசை - 17 ஆண்டுகள்
 கேது தசை - 7 ஆண்டுகள் 
சுக்கிர தசை - 20 ஆண்டுகள்

மொத்தம் 120 ஆண்டுகள் நம்ம இத்தனை வருஷம் இருபோமானு தெரியல. எனக்கு தெரிஞ்ச திசை எல்லாம் கொஞ்சம் சொல்லுறேன். 

1) உன்னை நீ கெடுத்துக் கொண்டால் அதுதான் ராகு திசை...


2) பிறரை நீ கெடுக்க நினைத்தால் அதுதான் கேது திசை...


3) பிறரை நீ பழிவாங்க நினைத்தால் அதுதான் சனி திசை...


4) உன் செல்வாக்கு உயர்ந்திட்டால் அதுதான் செவ்வாய் திசை...


5) உனக்கு நல்புத்தி வந்துவிட்டால் அதுதான் புதன் திசை...


6) நிலையான முயற்சி செய்தால் அதுதான் சூரிய திசை...


7) நிலையற்ற செயல்களென்றால் அதுதான் சந்திர திசை...


8) உனக்காக நீ புண்ணியம் செய்தால் அதுதான் சுக்ர திசை...


9) உலகிலுள்ள அனைவருக்காகவும் நீ புண்ணியம் செய்தால் உனக்கு குரு திசை...


நேர்மையாக வாழ்பவருக்கு அனைத்தும் சாதகம், பாவம் செய்தவருக்கே ஜாதகம்.

உங்ககிட்ட வந்து யாராவது ஜோதிடைத்த பத்தி சொல்லவராங்கனா அவங்க உங்க கிட்ட இருந்து எதோ ஒன்ன எதிர்பாக்குராங்கனு அர்த்தம். உங்களை ஏமாத்த அவுக ரெடி. உங்ககிட்ட இருந்து லம்பா ஒரு தொகையை ஆட்டைய போடணும்னா முதல்ல உங்க ஆசைய தூண்டனும் இல்லைனா ஜாதகத்தை கலைக்க வேண்டும்.


Related image
ஜோதிடம் என்பது என்ன?
நச்சத்திர கூட்ட அமைப்பை வைத்தே ஜோதிடம் கணிக்கிறார்கள். உலகம் முழுக்க ஜோதிடத்தில் நிறைய வகைகள் இருக்கின்றன. அது நாடு மொழி இனத்தை தகுந்தவாறு மாறுபடுகிறது. நம்ம உலகத்தில் எத்தன விதமா ஜோதிடம் இருக்குனு உங்களுக்கு தெரியுமா.

பர்மிய ஜோதிடம்,
சீன ஜோதிடம்,
மின்னணு ஜோதிடம்,
ஹொரரி ஜோதிடம்,
ஜாதகம் ஜோதிடம்,
நடால் ஜோதிடம்,
இந்திய ஜோதிடம்,(இதில் பலவகை உண்டு)
நட்சத்திர சோதிடம்,
இலங்கை ஜோதிடம் (சிங்களம் ஜோதிடம்),
திபெத்திய ஜோதிடம்,
மேற்கு ஜோதிடம்,
வெப்ப மண்டல ஜோதிடம்,
கிரக ஜோதிடம்,
காதல் ஜோதிடம்,
விவசாய ஜோதிடம்,
அரபு மற்றும் பெர்சிய ஜோதிடம்,
இஸ்லாமிய ஜோதிடம்,
பாபிலோனிய ஜோதிடம்
செல்டிக் ஜோதிடம்
எகிப்திய ஜோதிடம்
ஹெலனிஸ்டிக் ஜோதிடம்
இந்து ஜோதிடம்
நீதி ஜோதிடம்
கேதார்ச்சிக் ஜோதிடம்
மாயன் ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
வளிமண்டல ஜோதிடம்
முன்னர் ஜோதிடம்
நடி ஜோதிடம்
அரசியல் ஜோதிடம்
நிதி ஜோதிடம்
ஹம்பர்க் ஜோதிடம்
ஹெலசியெசினரிக் ஜோதிடம்
ஹூபர் ஜோதிடம்
உள்ளூர் ஜோதிடம்
உளவியல் ஜோதிடம்
சந்திரன் ஜோதிடம்
ஜோதிடவியல் ஜோதிடம்
ரசவாதம் ஜோதிடம்
ஜோதிடம்  பாரம்பரிய கூறுகள்
கைரேகை சாஸ்திரம்
கிறிஸ்தவம் ஜோதிடம்
எஸோதரிக் ஜோதிடம்
கைப்பிடி மண்ணை எறிந்து அது கொண்டு குறி கூறல்
கபாலியல் ஜோதிடம்
கணித ஜோதிடம்
சாமுத்திரிகா
மண்டைஓட்டு வடிவமைப்பியல்
நான் சிங்
அதிர்ஷ்டம் புரிதல்,
கிரகநிலை ஜோதிடம்னு இன்னும் பெரிய லிஸ்ட் இருக்கு.

கணிப்புகள் 
சிலர் ஜென்ம ராசி சக்கரத்தில் சந்திரனின் நிலையைக் கொண்டு கணிக்கிறார்கள். சிலர் சூரியனின் நிலையைக் கொண்டு கணிக்கிறார்கள். சிலர் ஜோதிடம் கணிப்பதற்கு பிறந்த நேரம் மிக முக்கியம் என்கிறார்கள். சிலர் பிறந்த மாதம் முக்கியம் என்கிறார்கள். இன்னும் பலப் பல வகை. இவர்கள் வைத்திருக்கும் வகைகள் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை மொத்தமாக மிஞ்சிவிடும் போல இருக்கிறது. சீனர்கள் கரு உருவான நேரத்தை வைத்து அவர்கள் ஜாதகம் கணிக்கிறார்கள். மொத்தத்தில் ஜோதிடம் கணிக்கும் எல்லாரும் ஒரே ஒரு அனுமானத்தில் தான் வேலை செய்கிறார்கள், அதுதான் அண்டத்திலிருந்து ஏதோ ஒரு சக்தி பூமியில் இருக்கும் நம் எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது என்பது தான்.


இந்த சக்திக்கு பலர் பல அறிவியல் விளக்கங்கள் அளிக்கிறார்கள். புவி ஈர்ப்பு சக்தி என்கிறார்கள். மின்காந்த சக்தி என்கிறார்கள். இன்னும் சிலர் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்றும் அதை அளக்க முடியாது என்றும் விவரிக்க முடியாது என்றும் சொல்கிறார்கள். ஆனால் கடைசியில் பார்த்தீங்கனா  இந்த சக்திகள் எல்லாம் நட்சத்திரங்களையும் கிரகங்களையும் அவை நம் மீது செலுத்தும் சக்தியையுமே குறிக்கின்றன.

கிரகங்களின் சக்தி என்று ஒன்று இருப்பது உண்மையானால் அதை அளக்க முடியும். தனிமனிதன் மீதிருக்கும் அதன் சக்தியை அளக்க முடியவில்லை என்றாலும் ஒரு கும்பல் மீதிருக்கும் சக்தியையாவது அளக்க முடிய வேண்டும் இல்லையா? இன்றிலிருந்து சரியாக இன்னும் பத்து வருடங்களுக்குப் பிறகு வெப்பநிலை எப்படி இருக்கும் என்பதை துல்லியமாகச் சொல்ல முடியாது ஆனால் வெயிலடிக்கும் என்று தோராயமாகச் சொல்ல முடியும். ஆனால் இதையும் ஸ்டாட்டிஸ்டிக்ஸைப் பயன்படுத்தி சோதிக்க முடியும். இந்த கணிப்பைக் கூடச் சரிபார்க்க முடியும் இல்லியா?

முதலில் ஜோதிடர்கள் சொல்வது போல கிரகங்களும் நட்சத்திரங்களும் நம்மைப் பாதிக்குமா என்பதைப் பற்றிப் பார்ப்போம். பிறகு அவர்கள் சொல்வது போல எந்த சக்தியும் இல்லை இருக்கவும் முடியாது என்பதைப் பற்றிப் பார்ப்போம். பிறகு ஜோதிடர்கள் அந்த சக்தியை அளக்க முடியும் என்று சொல்வது உண்மைதானா என்று பார்ப்போம் (ஒரு க்ளு தருகிறேன்: அவர்கள் சொல்வது பொய்!) அப்புறம் ஜோதிடம் எப்படி மக்களை தெளிவாக சிந்திக்க விடாமல் தடுக்கிறது என்பதையும் பார்க்கலாம்.

கொஞ்ச நேரத்துக்கு சும்மானாச்சுக்கும் கிரகங்களின் ஏதோ ஒரு சக்தி பூமியில் இருக்கும் நம்மைப் பாதிக்கிறது என்று வைத்துக் கொள்வோம், அந்த சக்தி என்னவாக இருக்க முடியும்?

மூளையைத் திறந்து வைத்துக் கொண்டு யோசிப்போம். நமக்கு இருக்கும் சாய்ஸ் ரொம்பவும் கம்மி.
Image result for four fundamental force


கிரகங்கள் பனிக்கட்டிகள், பாறைகள், உலோகங்களால் மற்றும் இன்னபிறவற்றால் ஆனவை. அவை நம்மைப் பாதிக்கக்கூடிய சாத்தியம் மிக மிக மிக மிக குறைவு ஏனென்றால் அவை பூமியிலிருந்து தொலைதூரத்தில் இருக்கின்றன. அடிப்படை இயற்பியல்.


தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால் அடிப்படையில் மொத்தம் நான்கு சக்திகளே இருக்கின்றன. அவை புவி ஈர்ப்பு சக்தி, மின் காந்த சக்தி, பிறகு கடின சக்தி (strong force) மற்றும் சன்ன சக்தி(week force). இதில் கடைசி இரண்டு சக்திகள் அணு அளவில் மட்டுமே வேலைசெய்யும். அதுவும் இந்த கடினசக்தி என்பது தூரத்தைப்பொருத்து மாறுபடும். கொஞ்ச பில்லியன் மீட்டர்கள் வந்துவிட்டீர்கள் என்றால் இந்த சக்தி காணாமலே போய்விடும்.


நமக்கும் கிரகங்களுக்குமிடையேயான தூரம் பில்லியன் மீட்டர்ஸைத் அசாத்தியமாகத் தாண்டுவதால் கடைசி இரண்டு சக்திகளும் இங்கு செல்லாது செல்லாது.

எனவே நமக்கு இப்பொழுது புவி ஈர்ப்பு சக்தியும் மின்காந்த சக்தியும் மட்டுமே இருக்கின்றன.

 
புவி ஈர்ப்பு சக்தி மிகப்பெரிய அளவில் (சூரிய மண்டலம்) எப்படி வேலை செய்கிறது என்பது நமக்குத் தெரியும்.அடிப்படையில் புவி ஈர்ப்பு சக்தி இரண்டு விசயங்களைச் சார்ந்தது. ஒரு பொருளின் எடை மற்றும் அது எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பது.பொருளின் எடை அதிகரிக்க அதிகரிக்க அதன் புவி ஈர்ப்பு விசை அதிகமாகும். அதேபோல நீங்கள் அந்த பொருளுக்கு பக்கத்தில் போகப் போக அதன் புவி ஈர்ப்பு விசை அதிகரிக்கும்.

 
சரி தான் ஆனால் இதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள கொஞ்சம் எண்களை உபயோகிப்போம். ஜூப்பிடர் சந்திரனை விட 25,000 மடங்கு எடை அதிகம் கொண்டது. உண்மையில் இது ரொம்ப அதிகம். ஆனால் அதே சமையத்தில் ஜூப்பிடர் சந்திரனை விட 1500 மடங்கு அதிக தூரத்தில் இருக்கிறது. இப்பொழுது புவிஈர்ப்பு விசை யாருக்கு அதிகம் இருக்கும்? சந்திரனுக்குத் தான், தூரம் அதிகமாக அதிகமாக புவி ஈர்ப்பு விசை மிகவும் குறைந்து விடும்.

 
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவனையில் கிரகங்களின் புவி ஈர்ப்பு சக்தி கொடுக்கப்பட்டிருக்கிறது. இது சந்திரனுடன் ஒப்பிடப்பட்டது. சந்திரனின் சக்தி ஒன்று என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்பொழுது மற்ற கிரகங்களின் சக்தி எவ்வளவு இருக்கும் என்பதை தெளிவாக விளக்குகிறது கீழிருக்கும் அட்டவணை.

Image result for Planet Mass(10^22 kg) Distance Gravity(Moon=1) Tides(Moon=1) 
 

பார்த்தீர்களா? கிரகங்கள் நம்மீது செலுத்தும் புவி ஈர்ப்பு சக்தி மிக மிக குறைவு. புவி ஈர்ப்பு விசை தான் ஜோதிடர்களின் கணிப்புக்கு உதவியாக இருக்கிறது என்றால் சந்திரன் தானே எல்லா கிரகக்களை விடவும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும்? இல்லையே!

நிலவே செயற்கையானதுனு ஒரு ஆய்வு சொல்லுது..


இதையே பிடித்துக் கொண்டு சந்திரனுக்குத்தன் சக்தி இருக்கிறதே, அதை வைத்தும் நாங்கள் ஜோதிடம் கணிப்போம் என்று சொல்லாதீர்கள். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவனை ஒப்பிட்டுப்பார்ப்பதற்குத்தான். உண்மையில் சந்திரனின் சக்தியும் மிகவும் குறைவுதான்.

எனவே புவி ஈர்ப்பு விசை இல்லை. மின் காந்த சக்தியாக இருக்குமோ?ஒருவேளை அப்படி இருக்குமோ?

 
புவி ஈர்ப்பு விசை எடையையும் தூரத்தையும் பொருத்தது என்றால் மின் காந்த சக்தி மின் சக்தியையும் தூரத்தையும் பொருத்து மாறுபடும். பிரச்சனை என்னவென்றால் இந்த மிகப்பெரிய பொருள்களான கிரகங்களுக்கு மின் சக்தியே இல்லை என்பது தான்.மின் சக்தி எல்க்ட்ரான்களிடமிருந்தும் ப்ரோட்டான்களிடமிருந்தும் வருகிறது. எதிர் சக்திகள் ஒன்றை ஒன்று ஈர்த்துக்கொள்ளும்; எனவெ ஒன்று இல்லாமல் இன்னொன்றைப் பார்ப்பது என்பது முடியாத காரியம். எனவே கிரகங்கள் நியூட்ரல் சார்ஜ் கொண்டவை. அவைக்கு மின்சக்தியே கிடையாது.

சிற்சில காரணங்களால் சில கிரகங்களுக்கு காந்த சக்தி இருப்பதுண்டு. ஆனால் மீண்டும் இதுவும் தூரத்தைப் பொருத்து மாறும்.ஜூப்பிடரின் காந்த சக்தி மிக அதிகம். ஆனால் அது பூமியிலிருந்து மிகவும் தூரமாக இருக்கிறது. எனவே நம்மீது எந்தவித பாதிப்பையும் அதனால் உண்டுபண்ண முடியாது.மேலும் சூரிய குடும்பத்தில் சூரியனுக்குத்தான் அதிக காந்த சக்தி இருக்கிறது. சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் வெடிப்புகளால் மின் சக்தி கொண்ட அணுக்கள் மிக அதிகமாக வெளிப்படும் பொழுது அவை பூமியின் காந்த சக்தியை பாதிக்கக்கூடும்.1989இல் இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது.
எப்படிப்பார்த்தாலும் மற்ற கிரகங்களின் காந்த சக்தி சூரியனின் காந்த சக்தியோடு ஒப்பிடும் பொழுது மிக மிகக் குறைவு. சூரியனுக்கல்லவா முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்? ஆனால் ஜோதிடத்தில் சூரியனை விட மற்ற கிரகங்களுக்கு தானே முக்கியத்துவம் அதிகம் இருக்கிறது?

மிஸ்டர் சூரியனார் இதில் ஏதோ சதி இருக்கிறது!

நமக்கு கொஞ்சமாவது பக்கத்தில் இருக்கும் கிரகங்களே நமக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பொழுது பல லட்சம் ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்கள்? சுத்தம். ஒளியாண்டு என்பது ஒளி ஒரு ஆண்டில் கடக்கும் தூரம். அடிப்படை இயற்பியலின் படி ஒளியின் வேகத்தை எந்தப்பொருளாலும் எட்ட முடியாது. ஒளி ஒரு ஆண்டுக்குக் கடக்கும் தூரம் எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை பத்து ட்ரில்லியன் கிலோமீட்டருக்கு சற்றே குறைவு. நமக்கு மிக அருகே இருக்கிற நட்சத்திரம் ப்ராக்ஸிமா செந்தௌரி 4.3 ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறது. அவைகளிலிருந்து எந்த சக்தியும் நம்மை வந்தடையாது.


புவி ஈர்ப்பு விசை என்றால் சந்திரன் தான் எல்லா கிரகங்களை விடவும் முக்கியமானதாக இருக்கவேண்டும். மின்காந்த சக்தி என்றால் சூரியன் தான் மற்ற கிரகங்களை விடவும் முக்கியமானதாக இருக்கவேண்டும்.

இரண்டுமே இல்லையே.

பிறகு எந்த சக்தி? நமக்கு மீதமிருக்கும் சக்திகள் குறைந்து கொண்டே வருகின்றன.

ஜோதிடர்களின் நம்பிக்கை என்னவென்றால் இவை தவிர அறிவியலுக்கு தெரியாத ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பது தான். ஆனால் அந்த நம்பிக்கையும் பிரகாசமாக இல்லை.

எல்லா சக்திகளும் தூரத்தைப் பொருத்து மாறுபடும். இது அடிப்படை அறிவியல். ஒரு பொருள் நமக்குத் தூரமாக இருக்கிறது என்றால் அது நமக்குப் பக்கத்தில் இருக்கும் பொருளைவிட மிகவும் கம்மியான பாதிப்பையே ஏற்படுத்தும். ஆனால் ஜோதிடர்கள் எல்லா கிரகங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பாதிப்பையே ஏற்படுத்துகின்றன என்கின்றனர். எனவே ப்ளூடோவும் வீனஸ¤ம் ஒரே மாதிரியான பாதிப்பையே ஏற்படுத்தும். ஜோதிடர்களின் கூற்றுப்படி கிரகங்கள் ஏற்படுத்தும் பாதிப்புக்கும் அவைகளின் தூரத்துக்கும் சம்பந்தமேயில்லை. அதே போல் கிரகங்களின் எடையும் ஒரு பொருட்டே இல்லை. இல்லை யென்றால் ஜூப்பிடர் அல்லவா சக்திவாய்ந்தாக இருக்க வேண்டும். மெர்க்குரி எல்லாம் ஆட்டைக்கே வராது!


இது சரியாகப்படவில்லையே! விண்கற்கள்? விண்கற்கள் பாறைகளாலும் உலோகங்களாலும் ஆனவை. அவை மற்ற கிரகங்களுடன் சேர்ந்து சூரியனைச் சுற்றி வருகின்றன. இவற்றுள் பெரும்பாலனவை மற்ற கிரகங்களை விட பூமிக்குத்தான் மிக அருகில் இருக்கின்றன. எனவே அவைகளும் நம்மைப் பாதிக்கவேண்டுமே? பிரச்சனை என்னவென்றால் விண்கற்கள் நிறைய-மிக நிறைய இருக்கின்றன. 100 மீட்டர் அகலமுள்ள விண்கற்கள் நம் சூரியகுடும்பத்தில் மட்டும் எவ்வளவு இருக்கின்றன தெரியுமா? கிட்டத்தட்ட ஒரு பில்லியன். இவை மிக மிக அதிகம். பல கிரகங்களுக்குச் சமம். ஜோதிடர்கள் இவைகளையும் ஏன் சேர்த்துக் கொள்ளக்கூடாது? கன்ஸிடர் பண்ணுங்கப்பா.


வான் ஆராய்ச்சியாளர்கள் பிற நட்சத்திரங்களைச் சுற்றிவரும் 150 புதிய கிரகங்களைக் கண்டுபிடித்திருக்கின்றனர். நிச்சயம் அவை ரொம்ப தூரத்தில் இருக்கின்றன. ஆனால் ஜோதிடர்களுக்குத்தான் தூரம் ஒரு பிரச்சனையில்லியே? எனவே இந்த கிரகங்களும் நம்மீது பாதிப்பை உண்டு பண்ண வேண்டும்.150 கிரகங்கள் என்பது இது வரை கண்டுபிடிக்கப்பட்டவை. இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் நம் பால்வெளியில் மட்டும் மொத்தம் பில்லியன் கிரகங்கள் இருக்கின்றன. கிரகங்கள் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து இருக்கின்றன. அவைகளையும் ஏன் ஜோதிடர்கள் சேர்த்துக்கொள்ளக்கூடாது?

இப்படி யோசியுங்கள். கிரகம் தங்களது தாய் நட்சத்திரத்தை சுற்றி வரவேண்டும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிவார்கள். எனவே அவர்கள் வைத்திருக்கும் டேட்டாவை வைத்து இங்கே ஒரு கிரகம் இருக்க வேண்டுமே என்று கணிக்கிறார்கள். பின் நாளில் அது உண்மையுமாகிறது. 50 வருடங்களுக்கு முன் வரை ஏன் ஒரு ஜோதிடர் கூட "அடடா இப்பத்தான் மைன்ட்ல ஸ்ட்ரைக் ஆச்சு.. இங்கே ஒரு கிரகம் இருக்க வேண்டுமே" என்று கணிக்கவில்லை? ஏனென்றால் அவர்களால் முடியாது. அவர்கள் வைத்திருக்கும் டேட்டா ஒன்றுக்கும் ஆகாதது. அதற்கு அர்த்தமேயில்லை.

ஜோதிடர்களின் விதிப்படி (தூரமும் எடையும் பொருட்டே அல்ல) இந்த கண்டுபிடிக்கப்படாத பில்லியன் கிரகங்களின் பாதிப்பு எல்லாம் சேர்ந்தால் அது நமது சூரிய குடும்பத்தின் கிரகக்களின் பாதிப்புகளை சும்மா ஊதித் தள்ளிவிட வேண்டும். ஒரு அணுகுண்டு வெடிக்கும் பொழுது அது எப்படி ஊசி விழும் சத்தத்தை விழுங்கி விடுகிறதோ அது போல.

எனவே நாம் கீழ்க்கண்ட ஒரு முடிவுக்கு வரலாம்.

1. நமக்குத் தெரிந்த சக்தி இருக்கிறது, ஆனால் அது ஜோதிடத்துக்கு உதவாது.

2. நமக்குத் தெரியாத சக்தி ஒன்று இருக்கிறது அது இயற்பியலின் எல்லா விதிகளையும் மீறிவிடுகிறது. அப்படியானால் பில்லியன் விண்கற்களும் இன்னும் கண்டுபிடிக்கப்படாத (ஆனால் உண்மையில் இருக்கின்ற) பில்லியன் கிரகங்களும் ஜோதிடத்தில் இருக்கவேண்டும். இவை சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்கள் ஏற்படுத்தும் பாதிப்பை ஊதித்தள்ளிவிட வேண்டும். ஆனால் (இப்பொழுது) ஜோதிடத்தில் இது இல்லை.

எனவே தெரிந்த சக்தியும் இல்லை தெரியாத சக்தியும் இல்லை.

பிறகு ஜோதிடம் என்பது என்ன? பொய் ஏமாற்று வேலையா.

கருத்துரையிடுக

 
Top