நேற்று நானும் என் நண்பன் சாமியும் திருச்சி கோவை பிரதான சாலையில் இருந்த ஒரு மீன் கடையை அடைந்து மீன் கடைக்காரரிடம் சாமி கேட்டார்"
அண்ணெ கடல் மீனா , டேம் மீனா ????
கடல் மீன் மீது அவருக்கு எப்பொழுதுமே ஒரு அலாதி உண்டு...
அந்த கடல் மீனை வாங்கி நாங்கள் சாப்பிடும்போது, தொலைக்காட்சியில் ஓடியது ஒரு செய்தி.....
தமிழக மீனவர்கள் கரை சேர்ந்தனர்......
அதன் பிறகு ஏனோ அந்த மீன் அந்த அளவு சுவையாக அமையவில்லை...
அந்த மூன்று நாள் அவனை சுற்றியும் தண்ணீர் இருந்திருக்கும் , ஆனால் ஒரு சொட்டு கூட அவனால் குடித்திருக்க முடியாது.....
அவன் எதிரே பல மீன்கள் துள்ளி குதித்திருக்கும் , ஆனால் ஒன்றை கூட அவனால் சுவைத்திருக்க முடியாது....
துப்பாக்கி குண்டாக இருந்தாலும் சரி , அந்த புயலாக இருந்தாலும் சரி முதலில் குறி பார்ப்பது அவனைத்தான்....
அவனைத்தாண்டியே புயலால் கூட நம்மை தொட முடியும்...
அந்த விவசாயி தன்னிடம் உள்ள நிலத்தை விற்றால் ஓரளவு நன்றாக வாழ முடியும் , மீனவன் தன் படகை விற்றால்...????
அவன் கடலுக்கு செல்லும்போதே , அங்கே அவளின் தாலிக்கு உத்திரவாதம் இல்லை
ஒருபுறம் இலங்கை கடற்படை , ஒரு புறம் கடல் சீற்றம் மறு புறம் இந்திய கடற்படை என்ன செய்வான் அவன்....
தட்டில் உள்ள மீனில் முள்ளிற்கு பதில் தோட்டாக்கள் தெரிவதில் ஆச்சரியமில்லை....
கருத்துரையிடுக