0
Image result for corporate slave


நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தை கூட விடை சொல்லிவிடும். ஆனால், குடியரசு தினம் பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் விழிப்பர்.

முந்நூறு வருடங்கள் பிரிட்டீஷ்காரர்களிடம் நாம் அடிமைகளாய் இருந்தோம். அந்த முந்நூறு வருடங்களுக்கு முன்பு நம் நாடு எப்படி இருந்தது? அப்போது மன்னர்கள் பலர் ஆண்டனர். மக்களுக்குச் சுதந்திரம் பற்றி எந்த விழிப்புணர்வும் வரவில்லை. மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்று வாழ்ந்தனர்.
மன்னனின் ஆட்சி என்பது முடியாட்சி. அவன் வைத்ததே சட்டம். இதில் மக்கள் சுயமாய் சிந்திக்க, சுதந்திரம் பற்றி நினைக்கவும் வழி கிடையாது.

மன்னனின் வாரிசுகள் அடுத்து அரியணை ஏறுவர். அவர்களின் கொடுங்கோலாட்சியை எதிர்க்கும் சிலரில் வீரமும், துணிவும் உள்ளவன் எப்போதாவது ஆட்சியைக் கைப்பற்றுவது உண்டு.

குடியரசு என்பதற்கு நேரடிப் பொருள் குடிமக்களின் அரசு. அதாவது மக்களாட்சி. மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் மூலம் தங்களுடைய தலைவனைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசுநாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பது தான் அரசியல் அமைப்புச் சட்டம். மேதைகள் பலர் சேர்ந்து உருவாக்கிய நமது அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொண்ட நாள் 1950 ஜனவரி 26.

சுதந்திர தினத்தை விட, குடியரசு தினம்தான் முக்கியமானது. ஏனென்றால் மக்களின் விருப்பதற்கு ஏற்ப தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சரியான ஆட்சி இல்லையெனில் தேர்ந்தெடுத்தவரை நீக்கிவிட்டு வேறொரு நல்ல தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

குடியரசு தினத்தை  கொண்டாடும் வேளையில், நம்மில் எத்தனை பேர் உண்மையான குடிமக்களாக இருக்கிறோம் என்பதை ஒரு கணம் எண்ணிப்பார்க்க வேண்டும். நாட்டில் சுமார் 60 முதல் 70 சதவிகிதம் வரையிலான மக்களே உண்மையான குடிமக்களாக இருக்கின்றனர் என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். காரணம், இவர்கள் மட்டுமே தங்களது வாக்குகளைத் தேர்தல்களின் பதிவு செய்கின்றனர். ஏனையோர் அந்த நாளை விடுமுறையாக கருதி உல்லாசமாக கழிப்பதிலேயே நாட்டம் காட்டுகின்றனர்.

தேர்தல்களை எவரெல்லாம் உதாசீனப்படுத்துகிறார்கள் என்று பார்ப்போமானால், கல்வியறவு கிடைக்கப் பெறாத, வறுமைக் கோட்டுக்கும் கீழேயுள்ள ஏழைகள் அல்ல; மாறாக, கற்றறிந்த சான்றோர் என்று பேச்சளவில் சொல்லிக்கொள்ளும் பணக்கார வர்க்கத்தினரே என்பது மிகவும் வேதனையான விஷயம்.

நாம் சிறுவயதில் இருந்து நம் பாடப் புத்தகத்தில் படித்தது நம் இந்தியா ஒரு விவசாய நாடு, விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பான துறை என்பதைத்தான் அதை யாராலும் மறுக்கவும் முடியாது. இதனை முன்னிட்டுதான் விவசாயத்தில் குறைந்த பட்ச GDP(Gross Domestic Product) வளர்ச்சியில்லையெனில் இந்தியாவின் GDP இலக்கை அடைய முடியாது என்று அலறுகிறார்கள் பெரும் பணந்தின்னிகள்.

Related image

இருந்தாலும், இந்த அலறலை மக்கள் மீதான அன்பால் ஏற்ப்பட்ட அலறல் என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம். ஏன்னா? உண்மையில் இந்திய விவசாயத்தை வளர்க்க அதில் முதலாளித்துவ பாணி உற்பத்தி முறைகளை கொண்டு வர வேண்டும். ஆனால் இதனை செய்யும் தைரியமும் இல்லை. 


அது என்ன முதலாளித்துவ பாணி உற்பத்தி முறை?

மிகப் பெரிய அளவில், ஒரே இடத்தில், மையப்படுத்தப்பட்ட முறையில் நவீன கருவிகள் உதவியுடன், பெரும் எண்ணிக்கையில் விஞ்ஞான முறைகளின் துணையுடன் செய்யப்படும் உற்பத்தி முறைதான் முதலாளித்துவ உற்பத்தி முறை. இதனை மேலைநாடுகளில் பார்த்திருக்கலாம். பல லட்சம் ஏக்கருக்கு ஒரே ஒரு பயிர்தான். விமானம் மூலம் உரம்-பூச்சி மருந்துகள், நீர் பாய்ச்சுவது மையப்படுத்தப்பட்டிருக்கும், ஒரு குறிப்பிட்ட பெரிய சந்தையை மனதில் கொண்டு திட்டமிடப்பட்ட உற்பத்தி, அதி நவீன ராட்சச யந்திரங்கள் மூலம் அறுவடை. இப்படி ஒரு தொழிற்சாலை போலவே அங்கு விவசாயம் நடைபெறுகிறது. இன்னும் சொன்னால் அங்கு விவசாய முதலாளியும், தொழிலாளியும்தான் உண்டு. கூலித்தொளிலாயியோ அல்லது பண்ணையாரோ கிடையாது.

Image result for காண்ட்ராக்ட் Farming

ஆனால் இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் பின்னிபிணைந்துள்ள விவசாயமோ இன்னும் சிதறிய சிறுவீத உற்பத்தி எனும் நிலபிரபுத்துவ முறையையே பின்பற்றி வருகிறது. அதிலிருந்து மேலேறி அடுத்தக் கட்டத்திற்கு வரவிடாமல் இந்தியாவின் பொருளாதாரம் ஏகாதிபத்திய முடக்கு வாதத்தால் அவதியுறுகிறது. இதைத்தான் நாம்அரைக்காலனியம், அரை நிலபிரபுத்துவம் என்கிறோம்.


இதற்கு தீர்வும்  நம் முனோர்கள் நமக்கு விட்டு சென்றுவிட்டனர் அது தான் அங்காளி பங்காளி உறவுகள். சிறு விவசாயிகள் சேர்ந்து பொது கிணறு தோண்டி அதில் கிடைக்கும் நீரை பகிர்ந்து விவசாயம் செய்தோம். ஆனால் இன்றோ அங்காளி பங்காளி என்றால் எதோ விரோதிகள் போல மாறிவிட்டார்கல். போட்டிகளும் பொறாமைகளும் வேரூன்றி தலைத்து வருகிறது.     

ஏன் நம் அரசால் விவசாயத்தை வளர்க்க முடியவில்லை:

Related image

விவசாயத்தை அடுத்தக் கட்டத்திற்க்கு கொண்டு வரும் முயற்சிகள் பெரும் நிலவுடமையாளர்களுக்கும், விவசாய உற்பத்தி பொருட்களின் விற்பனை பிரிவு, சந்தை பிரிவுகளில் ஆதிக்கம் செலுத்தும் புரோக்கர் கும்பல்களுக்கு பெரும் ஆபத்தாக இருக்கும் என்பதால்தான் இந்த அரசு அத்தகைய நிலச் சீர்திருத்தம், விவசாய சீர்திருத்த நடவடிக்கைகளை செய்வதில்லை. இது பிரச்சனையின் ஒரு பகுதி மட்டுமே.


Related image


உலகமயத்திற்க்கு பின் மேலே சொன்ன முதல் நிலவுடைமையாளர் மற்றும் விற்பனை மற்றும் சந்தை பிரிவுகளும் கூட MNC, தரகு முதலாளிகளுக்கு திறந்து விடப் படுவதுதான்.

Image result for indian mnc agri products
இந்திய விவசாயத்தை இப்படி அரை நிலபிரபுத்துவமாக வைத்திருப்பதில் ஏகாதிபத்திய நாடுகளுக்கு என்ன அரசியல் இருக்க முடியும்?
Image result for corporate slave

மூன்று நோக்கங்கள்,

1) குறை கூலி மனித வளம்:
குறைந்த கூலிக்கு, சொன்னதை அடிமை போலச் செய்யும் உழைப்பாளர்களை தொடர்ந்து உருவாக்கி(பெற்றெடுத்து வளர்த்து) செய்வதற்க்கு கிராம உற்பத்தி உறவுகளை நிரந்தரமாக பாதுகாப்பது அவசியம்.

Related image

விவசாயத்தை சுதாட்டம் போல மாற்றி, விவசாயியை நிலத்தை விட்டு ஒரு பக்கம் விரட்டுகிறது இந்த பொருளாதாரம். இதன் மூலம் நகரங்களில் குறைந்த கூலிக்கு சுரண்ட தொடர்ந்து மனித வளம் கிடைப்பதை உத்திரவாதப்படுத்துகிறது.


இன்னொரு பக்கம் அவனது வாழ்வை நகரங்களில் உத்திரவாதப்படுத்தாமல் கிராமம் பாதி நகரம் பாதி என்று அவனை அலைக்கழிக்கிறது. இதன் மூலம் அவன் நகரத்தில் குறை கூலிக்கு சம்பாதித்து அதை கிராமத்தில் மீண்டும் முதலிடுகிறான். அந்த முதலீட்டில் உற்பத்தியாகும் விவசாய பொருளை மிக குறை கூலிக்கு இந்த சமுகமே நுகர்கிறது. இங்கு கிராம நகர(Cost of Living) வேறுபாடு கிராமத்து கூலி தொழிலாளியை எப்படி ட்புள் சுரண்டலுக்கு உட்படுத்துகிறது என்பது புலனாகும். நகரத்திலோ அவனை தற்காலிக தொழிலாளியாக சிறு அளவிலும், சிறு பட்டறைகளில், கட்டுமான இடங்கள், ஹோட்டல் முதலான இடங்களில் உதிரி தொழிலாளியாக பெரும் எண்ணிக்கையிலும் வைத்து சுரண்டுகிறது. அவனை ஜனநாயகப்படுத்தாமல் மிக கவனமாக இந்த சமூக அமைப்பு கையாளுகிறது.
Related image
2) மலிவு விலை மூல வளங்களும், மலிவு விலை சந்தைக்கான உற்பத்தி பொருட்களும்:
Related image
அ) சிறுவீத உற்பத்திகளான பட்டறை முதலாளிகளின் வளர்ச்சியை தடுப்பது. திருப்பூர் பனியன் பட்டறை முதலாளியால் திருப்பூரை தாண்டி சென்று விட முடியாது ஏனேனில் சந்தை ஒரு MNC கையிலோ அல்லது தரகு முதலாளி கையிலோ உள்ளது, இதன் மூலம் அவை காலாகாலத்தும் MNC, தரகு கம்பேனிகளுக்கு உற்பத்தி செய்யும் ஒரு தொங்கு சதையாகவே தேங்கி விடுவது.
Related image
சிறு முதலாளி, சுதந்திரமான தனது சந்தைகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டு, இன்று MNC, தரகு கம்பேனிகளிடம் தமது பொருளை விற்க்கிறான். ஒரு விவசாயியின் நிலையைப் போலவே அவனும் தான் உற்பத்தி செய்யும் பொருளுக்கு விலை வைக்க வக்கின்றி இருக்கிறான். ஏனேனில் உற்பத்தி நடந்தால்தான் அவனுக்கு சோறு, உற்பத்திக்கு MNCயும், தரகு முதலாளியும் காண்ட்ராக்ட் தர வேண்டும், அப்படி அவன் காண்ட்ராக்ட் தருவதற்க்கு அவன் சொன்ன விலைக்கு விற்க்க தயாராக இருக்க வேண்டும். இந்த கந்து வட்டி போன்ற விசச் சூழல் மலிவு விலையில் MNC, தரகு முதலாளிகளுக்கு சந்தைக்கான பண்டங்களை உற்பத்தி செய்து கொடுக்கிறது. இது ஓரளவு IT தொழிலாளிக்கும் பொருந்தும்.
Related image

ஆ) விவசாயத்தின் நவீன உற்பத்தி முறைகளை தடுப்பது - அதாவது பெரும் விவசாய கூட்டுப் பண்ணைகள், மையப்படுத்தப்பட்ட சந்தை, மையப்படுத்தப்பட்ட விவசாய உற்பத்திக்கான திட்டம் போன்றவற்றை தடுப்பது - இதன் மூலம் சிறுவீத உற்பத்தி மூறையால்(Ex: காண்ட்ராக்ட் Farming) தொடர்ந்து தனது தேவைகளுக்கு மட்டும் இந்திய விவசாயம் சேவை செய்வதை நிரந்தரமாக்குவது.
Related image
இதற்க்கு உதாரணம்தான் பூ விவசாயம், இறால் பண்ணைகள் etc. லாபம் எந்த பொருளுக்கு உள்ளது என்பதை ஒருவன் நிர்னயிப்பதன் மூலம் அதனை நாம் உற்பத்தி செய்ய வைக்கிறான். ந்மது தேவைக்கு உற்பத்தி செய்வதை விடுத்து அடுத்தவன் சந்தை தேவைக்கு உற்பத்தி செய்வதன் மூலம் பாரம்பரியமான நமது சுயசார்பு பொருளாதார வலைப்பின்னல் சின்னாபின்னமாகிவிட்டது. இந்தியாவின் சுயசார்பை இப்படி அடித்து நொறுக்குவதன் மூலம், அந்த சந்தையையும் எவனோ ஒருவன் கைப்பற்றிக் கொள்கிரான்.

3) சந்தை:
சுயசார்பை உடைத்தெறிவதன் மூலமும், இந்திய தொழில் துறையின் வளர்ச்சி என்பது தனது வளர்ச்சியாக மட்டுமே இருக்கமாறும் பார்த்துக் கொள்வதன் மூலமும் இந்த பெரிய சந்தையை தன் இஸ்டம் போல சுரண்டுவது.

Image result for BT crop mnc
(எ-கா: பசுமைப் புரட்சி காலத்தில் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தமது காலவதியான ஆயுத மருந்துகளை பூச்சிக் கொல்லியாக உரமாக கொடுத்தது, தற்போதைய BT விதைகள், விதை நெல் சீர்திருத்தம், ரீட்டையல் பிசினெஸில் FDI, சுதந்திரம் அடைந்த குறுகிய காலத்திலேயே அம்பலமான 'கோக்'கின் ஆதிக்கம், பேட்டண்ட்ஸ் ரைட்ஸ் மூலம் மருந்து சந்தைய முழுமையாக கபளீகரம் செய்துவிட்டது etc).

Related image
ஆக,
மலிவு விலையில் கூலி,
மலிவு விலையில் வளங்கள்,
மலிவு விலையில் உற்பத்திப் பொருட்கள்,
உற்பத்தியின் ஒரு பெரும் பகுதியையும் கூட சிறு முதலாளி எனும் விவசாயி பார்த்துக் கொள்வது,

இவையெல்லாம் போக அவன் எதை உற்பத்தி செய்தாலும் வாங்கிக் கொள்ள அவனது வர்க்கத்தின் ஆதிக்கம் மட்டுமே உள்ள மிகப் பெரிய சந்தை. இவற்றை மீறி அவனுக்கு உள்ள பிரச்சனையெல்லாம் அவனிடையே உள்ள போட்டி போறாமைதான். 
Related image
ஆக, நாம் உற்பத்தி செய்யும் பொருளை அவன் வந்து இஸ்டம் போல விலை வைத்து வாங்கிச் செல்ல வாய்ப்பார்த்து காத்துக் கொண்டிருப்போம், அதே நேரத்தில் நமக்கு தேவையான பொருளை அவன் இஸ்டம் போல விலை வைத்து விற்று செல்வதையும் நாம் வாய் பார்த்துக் கொண்டிருப்போம்.

Image result for indian road market cartoon

இதனைத்தான் நாம் இழிச்சவாயத்தனம் என்போம். சில, தொந்தி வளர்க்கும் அடிமைகள் இதனை வளர்ச்சி, வல்லரசு என்றும் சொல்லுவர். இந்த மேற்சொன்ன சூழல்தான் இன்று நிலவுகிறது. ஒரு பக்கம் கோதுமையை அவன் கேட்ட விலைக்கு விற்று இழிச்சவாயர்களான விவசாயிகள், இன்னொரு பக்கம் கோதுமை விலை ஆறு மாதத்தில் ஆறு ரூபாய் ஏறி நாம் அவனை வாய் பார்த்துக் கொண்டிருப்பது. இந்த சூழல் இன்னும் வெகு துலக்கமான வடிவத்தை பெறவில்லை ஆயினும் அப்படி வரும் வரை காத்திருக்க வேண்டும் எனும் முட்டாள்களுக்காக இந்த பதிவு அல்ல.


இந்த மூன்று காரணத்திற்க்காத்தான் சிதறிய சிறுவீத கிராம விவசாய உற்பத்தி முறையையும், சிறு தொழில் பட்டறை முறையையும் இந்த ஆளும் வர்க்கம் பேணி பாதுகாக்கிறது. ஒரு வேளை விவசாயத் துறையிலொ அல்லது சிறு தொழில் துறையிலோ செய்யப்படும் எந்த மாற்றமும் இந்த மூன்று காரணங்களுக்கு குந்தகம் வாராத வடிவத்திலேயே நடைபெறும். எடுத்துக்காட்டுகள்: காண்ட்ராக்ட் விவசாயம், ஊக வணீகத்தில் விவசாய பொருட்கள், சிறு தொழில் துறையின் வளர்ச்சி.


இந்த பாணி உற்பத்தி முறையின் விளைவு என்ன?

பெரும்பான்மை மக்கள் இத்தகைய சிதறிய சிறு வீத உற்பத்தி முறையிலேயே, வளர்ச்சியின்றி தலைமுறை தலைமுறையாக பினைந்திருப்பது ஒரு சமூகத்தின் ஒட்டு மொத்த அறிவு, பண்பாட்டு வளர்ச்சியை தடுக்கிறது.

அவனை ஜனநாயகமில்லாதவனாகவே வைத்து சுரண்டுகிறது. இதன் பொருளாதார அம்சம் - அந்த சமூகத்தில் மிக பெரும் தொழில்புரட்சி என்றுமே நடந்து விட விடாமல் செய்கிறது.
Image result for corporate slave
ரோட்டில் எச்சில் துப்புவது, ஒன்னுக்கடிப்பது, சிக்னலை மதிக்காமல் அவனவன் இஸ்டம் போல நடந்து கொள்வது, சிறு பட்டறை முதலாளியின் வீட்டு வேலைகளையும் சேர்த்தே செய்வது, போலிஸ், நீதிபதி இவர்கள் எல்லாம் ஏதோ வானத்து தேவர்கள் போல நடந்து கொள்வதும் சாதாரண கிராமத்து ஏழை அவர்களுக்கு அது போன்றே மரியாதை கொடுப்பது - இவை எல்லாம் ஜனநாயகமின்மையின் அறிகுறிதான்.

Related image

சமூகம் எனபது சக மனிதர்கள் இயைந்து பழகும் ஒரு அமைப்பு, இதில் அனைவருக்கும் உரிமை, பொறுப்பு உள்ளது என்ற புரிதலெல்லாம் பெரும்பாலானவர்களுக்கு இல்லையென்பதுதான் - இது போல பிறர் உரிமையில் தலையிடும் நடவடிக்கைகளையும், பிறரிடம் அடிமை போல நடந்து கொள்ளும் நடவடிக்கைகளையும் ஒருங்கே மேற்கொள்ள செய்கிறது.


அராஜகமும், அடிமைத்தனமும் ஒரே பொருளாதார அமைப்பு பெற்றெடுக்கும் பிள்ளைகள்தான். இதுதான் இயங்கியலின் விதி. இதைத்தான் ஜனநாயகமின்மை என்கிறோம்.

இது ஏன் இப்படி உள்ளது எனில் தனிப்பட்ட உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒரு சிறுபட்டறை தொழிலாளி, ஒரு விவசாய கூலிக்கு இந்த சமூகம் இயைந்து இயங்குவது போன்ற ஜனநாயக அடிப்படைகளை புரிந்து கொள்ளும் உற்பத்தி முறை கிட்டவில்லை. பெரும் தொழிற்சாலை பாணி உற்பத்தியில் ஈடுபடுபவர்களிடம் இந்த பண்பாட்டை நாம் பெரும்பாலும் காணாலாம்(Exceptions இருக்கும்).

ஏனேனில் அவனது ஒவ்வொரு உற்பத்தி உறவிலும் அவன் கூட்டு உழைப்பினை உணர்கிறான். கூட்டு உழைப்பின் காரணமாக கட்டுப்பாடான தனது பங்களிப்பை செய்யும் கடமையை உணர்கிறான். எனவே தனது உரிமையையும், பிறரின் உரிமையையும் உணர்கிறான். உரிமைகளை மீறப்படும் போது உற்பத்தியில் ஏற்ப்படும் பிரச்சனைகளைப் பார்க்கிறான். ஒரே இடத்தில் தொழிலாளர்களை இணைத்து முதலாளியே அவனை அமைப்பாக ஆக்குகிறார். எனவே ஒற்றுமையின் வலிமையை உணர்கிறான். அவனிடம் இருந்து அடிமைப் புத்தி காணமல் போகிறது.

வேலை முடிந்தால், போட்டுக் கொண்டுள்ள சட்டையைத் தவிர வேலை சார்ந்த எந்த பொறுப்பும் கிடையாது என்பது அவனை சுதந்திர மனிதனாகாவும் - தான் வேறு தனது தொழிற்சாலை வேறு எனபதனையும் - தான் உண்மையில் அந்த தொழிற்சாலையின் பரந்த தொழிலாளர்கள் எனும் பெரும் அமைப்பின் அங்கத்தினன் என்பதையும் உணர வைக்கிறது.
Related image
மாறாக, சிறுவீத உற்பத்தியில்(சிறு பட்டறை தொழிற்சாலை, விவசாயம்) விடிந்தால், பட்டறை முடிந்தால் படுக்கை என்று நாள் முழுவது கட்டுண்டு கிடக்கிறான். சுதந்திரம் தவிர்க்கிறான். கூட்டு உழைப்பின் பிரமாண்டத்தையும், முதலாளியே உருவாக்கிக் கொடுக்கும் ஒற்றுமையையும் அனுபவிக்கும் வாய்ப்பின்றி தான் பிறந்து வளர்ந்த நிலபிரபுத்துவ அடிமைத்தனத்தை பேணிக் காக்கும் நிலைக்குத் தள்ளப்படுகீறான். சமூகம், அரசு, வர்க்கம் என்பனவற்றைப் பற்றி சிந்திக்கவே நேரமில்லை என்பதிருக்க, அவனது உற்பத்தி முறைகளும் அதனை உணரவிடாமல் அவனை தொடர்ந்து ஏமாற்றியே சுரண்டுகின்றன.
Related image
இந்தியாவின் மிகப் பெரும்பான்மையினர் இது போன்ற உற்பத்தி முறையில்தான் ஈடுபட்டுள்ளனர். எனவேதான் இந்தியாவை ஜனநாயகம் இல்லாத நாடு என்கிறோம்.

ஜனநாயகம் என்பது சட்டத்திருத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விசயமா?, இல்லை. அது சமூக பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டம். அது சமூகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியின் அலகு.

இந்தியாவில் பெரும் தொழிற்சாலைகள் ஒரு சிறு அளவிலான பிரிவினைரை மட்டுமே இது போன்ற தொழிற்சாலை பாணி ஜனநாயக உற்பத்தி முறைகளில் வைத்துக் கொண்டு, வாய்ப்புள்ள இதர பிரிவுகளையெல்லாம் சிறு பட்டறை முதலாளிகளிடம் காண்ட்ராக்ட் கொடுத்து விடுகிறார்கள். இதன் மூலம் இயல்பான முதலாளித்துவ வளர்ச்சி சமூகம் மொத்தத்திற்க்கும் பரவலாகிவிடாமல் தடுக்கப்பட்டு சமூகம் அழுகத் துவங்குகிறது.


இதை தடுக்க என்ன செய்யலாம்?

- இந்தியாவின் விவசாயத்தை ஏகாதிபத்தியங்களின் சந்தைக்காக உற்பத்தி செய்யும் பின்நிலங்கள் என்ற அளவைத் தாண்டி இம்மிகூட முன்னேற விடாமல் தடுக்கும் அரசையையும், அதிகாரிகளையும் என்ன செய்யலாம்?

- இந்தியாவின் சிறு தொழில் துறையையும் இதே நிலைமையில் வைத்து இந்தியா முழுமைக்குமுள்ள நடுத்தர வர்க்கத்தின் கையிலுள்ள சிறு மூலதனத்தின் சுதந்திரத்தையும், அவர்களின் இயல்பான சாதிக்கும் தாகத்தையும் முடக்கிப் போட்டு , அவற்றையும் தனது சந்தைக்காக உற்பத்தி செய்யும் பின் நிலங்களாக வைத்திருக்கும் இவர்களை என்ன செய்யலாம்?

- இந்தியனுக்கு ஜனநாயகத்தை மறுக்கும் இவர்களை என்ன செய்யலாம்?

கருத்துரையிடுக

 
Top