எனக்கு அரசியல் அறிவு இல்லை, அது இருந்தா இங்க எதுக்கு நான் இருக்கப்போறேன் ஆனால் Mr.பொதுஜனத்தை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
1.நூற்றைம்பது சவரன் போட்டு மகளுக்கு திருமணம் முடித்தவன் வீட்டில் கலைஞர் TV ஓடுகிறது.
2.ஊருக்குள் 30 வீடுகள் வாடகைக்கு விட்டவன்
பசுமை வீடு மானியத்தில் வீடு கட்டிக்கொண்டான்.
3.இரண்டு மகன்கள் அமெரிக்காவில் சம்பாதிக்கிறார்கள்.
ஆனால் அனாதைப் பணம் 1000 பெறுகிறார்கள்.
4.காரில் சென்று இலவச சேலை பெறுகிறார் ஒரு பெண்.
5.IT கம்பனில் லட்சத்தில் சம்பளம்,
ஆனால் ஜாதி படி ரேஷன்கார்டு படி தாலிக்கு தங்கம் பெறுகிறார் இன்னொருவர்.
6. 5000 சதுர அடியில் நீச்சல் குளத்துடன் வீடு. ஆனால்
வீட்டுவரி ரூ350. அதாவது 20 வருடத்திற்கு முன்இருந்த பழையவீட்டின் வரியே தொடர்கிறது.
7. இது போக ரேசன் பொருளை வசதியானவர்கள் வாங்கி, ஏழைகளுக்கு விற்பது.
மானிய சிலின்டர்களை கார் பார்டிகளுக்கு விற்பது.
8.பைனான்ஸ்+சீட்கள் நடத்தி கோடியில் விளையாடும் ஒருவர்
Income #Tax என்றால் என்ன? என்கிறார்.
9.ஷென்சஸ் எடுப்பவரிடம்.
மாதவருமானம் 4000,5000 என்றுதான் அத்தனை குடும்பமும் கூசாமல் பொய் சொல்கிறது. அப்பத்தான் சலுகைகள் கிடைக்குமாம்.
10.இதெல்லாமே என் தெருவில் நடக்கும் உதாரணங்கள்.
கடைசியாக 4 கட்சியிடமும் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுகிறார் Mr.பொதுஜனம்.
1) முறையாக வரி செலுத்தும், சலுகைக்காக பொய் பேசாத மக்கள்.
2) ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்யும் அரசியல் வாதி.
3) லஞ்சம் வாங்காது கடமையை செவ்வனே செய்யும் அரசு ஊழியன்.
நாடு உருப்பட இந்த மூவரும் வேண்டும்.
யார் முதலில் திருந்துவது. எப்படி திருத்துவது.
சட்டதின் வழியா?? சர்வாதிகாரமா?? கல்வியா??
ஆன்மீகமா?? எதைக்கொண்டு எதைத் திருத்துவது????
எனக்கு அரசியல் ஞானம் குறைவு.
எனவே நீங்கள் விடை சொல்லுங்கள்.
நாடும் மக்களும் ந.........ல்லா இருக்கட்டும்.
கருத்துரையிடுக
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.