1
image2
மச்சான். பீர் மட்டும் குடி. நீ வேற எதுவும் குடிக்க வேண்டாம். அது உடம்புக்கு நல்லதுடா.

பீர் குடிக்கிறதுனால நீ குடிகாரன் கிடையாதுடா. எதையும் அளவோடு சாப்பிட்டா நல்லது தாண்டா மச்சான். போன்ற நண்பர்களின் அறிவுரைகளை கேட்காத நபர்களே இருக்க முடியாது. உண்மையில் பீர் (அ) பியர் குடிப்பது உடம்புக்கு நல்லதா?

ஒரு மண்ணும் கிடையாது!.
Image result for beer aculiate and uric acid
பீரில் அதிகமாக ஆக்ஸிலேட் மற்றும் யூரிக் ஆஸிட் அமிலங்கள் உள்ளன. சிறுநீரக பாதிப்புகள் உள்ள ஒருவர் பீர் குடிக்கும்போது இவை அதிகமாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால், மிகப்பெரிய பாதிப்புகள் உண்டாகும். 'வயிறு தொடர்பான தொந்தரவு உள்ளவர்கள் பீர் குடித்தால் சரியாகிவிடும்' என்று தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. குடல் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் கண்டிப்பாக பீர் அருந்தவே கூடாது. மேலும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோய்கள் உள்ளவர்கள், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எப்போதும் சூடான சூழலில் வேலை செய்யும் டிரைவர்கள், மெஷினில் வேலை பார்ப்பவர்கள், அல்சர் பாதிப்பு உள்ளவர்கள், கல்லீரல் பாதிப்புகள் உள்ளவர்கள் அனைவருமே பீரைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

Image result for aculiate and uric acid

ஆல்கஹால் குடித்தால் விபத்துக்களை சந்திப்பீர்கள், நிலை குலைந்து போவீர்கள், புற்றுநோய் வரும், கல்லீரலில் இழைநார் வளர்ச்சி ஏற்படும் மற்றும் இன்னும் பல கொடிய ஆபத்துக்களை சந்திக்க நேரிடும்.

பீரை தொடர்ச்சியாக குடித்து வருபவர்களுக்கு யூரிக் ஆசிட் கற்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் உண்டு. ஏற்கனவே கல் இருப்பவர்களுக்கு, அதிகமாகவும் வாய்ப்புண்டு. 'பீர் குடித்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்துவிடும்' என்று இனி யாராவது உங்களிடம் சொன்னால் நம்ப வேண்டாம்.

பீர், பல பிரச்னைகளுக்கு தீர்வு என்றும், பல நோய்களைத் தீர்க்கும் என்றும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. 'பீர் மதுவே அல்ல' என்ற பிம்பமும் ஏற்படுத்தப்படுகிறது. இவற்றுக்கு பின்னால் ஒரு கார்ப்பரேட் மூளையே இருக்கிறது. உண்மையில், பீர் குடிப்பதால் உடலுக்கு பல்வேறு தீமைகளே உண்டாகின்றன. தொடர்ந்து குடித்து வருபவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு. மது ஒருபோதும் எந்த நோய்க்கும் மருந்தாகாது. அது சமுதாயத்தில் மனிதனுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், உடல் நலத்தையும் பாதிக்கும் என்பதே நிதர்சனமான உண்மை!.

image2 (2)
எந்த வகை மதுவானாலும் தயாரிப்பு முறை என ஒன்றுண்டு. திராட்சையில் தயாரானால் ஒயின், பிராந்தி… கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் தயாரானால் விஸ்கி; அரிசியில் தயாரானால் சாக்கே; முந்திரிப்பழத்தில் அல்லது தேங்காய்த் தண்ணீரில் தயாரானால் ஃபென்னி என்பது போல்; இங்கே அனைத்து வகை மதுபானத்துக்கும் அடிப்படை, சர்க்கரைத் தொழிற்சாலைகளின் உப பிறப்பான மொலாசஸ் மூலப்பொருளாகக் கொண்ட ‘ஸ்பிரிட்’ என்கிறார்கள். பிராந்தி, விஸ்கி, ரம், வோட்கா, இவற்றுக்கான வாசம், நிறம், சுவை ஏற்றப்படுகிறதாம். யாவற்றிலும் ஸ்பிரிட்டின் அளவு 42.8 சதவிகிதம்தான்.

image1 (2)
கள் என்பது மருந்து, கள் என்பது உணவு, கள் என்பது மிதமான போதை. அதிலும் பேட்டரிக் கட்டைபோடுகிறார்கள், யானை மயக்கி மாத்திரை போடுகிறார்கள், ஊமத்தங்காய் போடுகிறார்கள் எனில் நிர்வாகம் செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு. ெசாந்தத் தோட்டத்தில் கள் இறக்கி விற்கும் விவசாயி எவனும் அந்த மாபாதகங்களைச் செய்வானா? அவனுக்கு ஹெலிகாப்டரில் வந்து தனது மாளிகை மொட்டை மாடியில் இறங்கும் சாத்தியமுண்டா? அவன் கள் விற்க ‘சியர் கேர்ள்ஸ்’ வைத்துக்கொள்ள இயலுமா?
தமிழரின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் கள் முக்கியத்துவம் பெறுகிறது. கள்ளின் மருத்துவப் பயன்களை தெளிவாக பதிவு செய்து சென்றுள்ளனர் சித்தர்கள். சித்தர் பாடல்களின் பல இடங்களில் கள்ளின் மருத்துவ மகத்துவங்களை அறிந்துகொள்ள முடிகிறது. 

பனை மரத்து கள்ளால் ஆண்களுக்கு உடல் வலிமையையும், விந்து சக்தியும் அதிகரிக்கும் என அகத்தியர் குணப்பாடம் கூறுகிறது.
பனை மரத்தின் பால் தெளுவு அல்லது தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும். காலையில் வெறும் வயிற்றில் இந்த பாலை100-200 மி.லி.  அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் ஆறிவிடும். புளிப்பேறிய கள் மயக்கம் தரும். அறிவை மயக்கும் ஆனால்  உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினால் இனிப்பான கருப்பட்டி  கிடைக்கும்.


தென்னைக் குருத்தினை சீவினால் பால் சொட்டுச் சொட்டாக வடியும், அந்தப் பாலை ஒரு சின்ன முட்டியின்(கலயம், சிறு பானை) வாயில் வெள்ளைத்துணிப் போட்டுச் சேகரிப்பார்கள். (சிறிய பானை)

ஒரு நாள் முழுவதும் இறங்கியப் பால் இதில் இருக்கும்.

இந்தப் பாலை அடுத்த நாள் கலயத்தில் இருந்து மறுபடி வடிகட்டிக் குடிக்க உபயோகிப்பார்கள்.

வெள்ளைத்துணியில் வண்டுகள், சிறுபூச்சிகள் முதல் நட்டுவாக்கழி என்னும் தேள்வகைகளும் இருக்கும். மிகச் சிறிய பூச்சிகள் துணியில் தங்காமல் கள்ளின் உள்ளே இறங்கி இருக்கும். அவற்றை காலையில் வடிகட்டிப் பிரிப்பார்கள்.

கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். புளிப்பாகவும் இருக்கும். 

கள்ளில் சுண்ணாம்பு சேர்ப்பதால் கள் வெள்ளை நிறத்தில் இருந்து தெளியும். இதைத் தெளுவு, பதநீர் எனச் சொல்வார்கள். இது கள்ளின் புளிப்புத் தன்மையைக் குறைத்து இனிப்புச் சுவையைத் தரும். போதை அளவு குறையும்.

கள்ளில் சர்க்கரைச் சத்து மிக அதிகம். கொழுப்புச் சத்தும் உண்டு.

கள் உடலுக்கு நல்லது என்பது செவி வழிச் செய்தி. கள் குடிப்போர் உடலுழைப்பாளராய் இல்லாத பட்சத்தில் கள் கெடுதியானது.

கள் காலை வேளையில் அருந்தி விட்டு, உழைக்க வேண்டும். குடித்து விட்டுப் படுத்து விடுதல் கெடுதியானது.

கருத்துரையிடுக

 
Top