நம் நாடு முழுவதும் 28 மாநிலங்கள் 9 யூனியன் பிரதேசங்களிலும் உள்ள 672 மாவட்டகளில் உள்ள எரிவாயு முகமைகளின் மூலம் நாடு முழுவதும் 25 கோடிக்கும் மேற்பட்ட எரிவாயு இணைப்புக்களுக்கு எரிவாயு உருளைகள் சப்ளை செய்யப்படுகிறது
இந்த எரிவாயு உருளைகள் சப்ளை செய்ய எண்ணை நிறுவனங்கள் முகமைகளுக்கு ஒரு உருளைக்கு 26 ரூபாய் 50 காசு டெலிவரி கட்டணமாக செலுத்துகின்றன
ஆனால் டீலர்கள் இந்த கட்டணத்தை டெலிவரி செய்யும் நபர்களுக்கு தருவதில்லை
முறையாக பார்த்தால் டீலர்களே வாகனம் ஆட்களை வைத்து டெலிவரி செய்ய வேண்டும் ஆனால் ஒப்பந்த அடிப்படையில் வாகனத்துடன் பேசி ஆட்களை வேலைக்கு அமர்த்திகொள்கின்றனர் வண்டி வாடகையும் இல்லை ஆட்கள் சம்பளமும் தருவதில்லை
எரிவாயு உருளைகள் சப்ளை செய்பவர்கள் மக்களிடம் 30 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை வசூலித்து தங்களது சம்பளத்தையும் வாகன வாடகையையும் எடுக்கின்றனர்
டீலர்கள் அவர்களிடம் ஒரு உருளைக்கு 26 ரூபாய் 50 காசு கணக்கிட்டு வவுசரில் கையெழுத்து பெற்றுக்கொள்கின்றனர் அதேபோல் அவர்சள் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பிய பில்லையும் வவுச்சரில் கையெழுத்து வாங்கிக்கொண்டு வாங்கிவிடுகின்றனர்
எண்ணை நிறுவனங்கள் சோதனைக்கு வந்தாலும் தங்களிடம் கணக்கை முறையாக பராமரிப்பதால் இது தெரிவதில்லை
எரிவாயு உருளைகள் சப்ளை செய்பவர்களும் தங்களது குடும்பசூழலை கருத்தில் கொண்டும் வாகனக்கடனை கருத்தில் கொண்டும் இப்பணியை செய்கின்றனர்
ஒரு மாதத்திற்கு 25 கோடி எரிவாயு உருளைகள் என்றால் ஒரு உருளைக்கு 30 ரூபாய் கணக்கிட்டால் குறைந்தபட்சம் 75 கோடி ரூபாய் மாதத்திற்கு எரிவாயு டீலர்களால் மக்களின் பணம் கையாடல் செய்யப்படுகிறது
நான் போட்ட தோராய கணக்கே குறைந்த பட்ச கணக்கு கிட்டத்தட்ட 100 கோடி ரூபாயை தாண்டும்
இந்தியாவில் எல்பிஜி விலை நிர்ணயிக்க ஒரு சூத்திரத்தின் அடிப்படையில் செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் எல்பிஜி விலைகளின் அடிப்படையில் ஐபிபி தீர்மானிக்கப்படுகிறது, சவுதி அரம்கோவின் எல்பிஜி விலையை அடிப்படையாகக் கொண்ட ஐபிபி, FOB (போர்டில் இலவசம்) விலை, கடல் சரக்கு, காப்பீடு, தனிப்பயன் கடமைகள், துறைமுக நிலுவைத் தொகை போன்றவற்றை உள்ளடக்கியது. டாலர்களில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள இந்த விலை பின்னர் ரூபாயாக மாற்றப்படுகிறது. உள்நாட்டு சரக்கு, சந்தைப்படுத்தல் செலவுகள் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் வசூலிக்கும் ஓரங்கள், எரிவாரு நிரப்பும் கட்டணம், டீலர் கமிஷன் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றின் விலை இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இது இந்திய வாடிக்கையாளருக்கு மானியமில்லாத எல்பிஜி சிலிண்டரின் சில்லறை விற்பனை விலையை வழங்குகிறது. இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர்களின் விலை மாதாந்திர அடிப்படையில் மீட்டமைக்கப்படுகிறது.
வாடிக்கையாளர் தங்கள் புகார்களை / கேள்விகளை கட்டணமில்லா எண் 18002333555ஐ தொடர்புகொள்ளலாம் .
புகார்களுக்கு +919443389183 திரு.தியாகராஜன் அவர்களை தொடர்புகொள்ளலாம்
apni property bechna chahte hain to Propman visit Karen thank you very much
பதிலளிநீக்குEkta Bhoomi Gardens III is the new Residential Projects In Borivali by Ekta World. These luxury flats in Borivali are located near the Borivali railway station, shopping malls and the Western Express Highway
பதிலளிநீக்கு