1

ஆஹா இன்னிக்கு சம்சாரத்துக்கு பிறந்த நாள் ஆச்சே.. முதல் வேலையா ஒரு கேக் வங்கனும்.. ஆமா இந்த பிறந்தநாளுக்கு கேக் வெட்டும் பழக்கம் எப்படி வந்தது?

கேக்கு தம்பி பன்னுன்னு விவேக் சொல்லுவாரு ஆனா கேக்கு அண்ணன் பிரட். எகிப்தியர்கள் தான் பிரட் கண்டுபிடிச்சதா சொல்றாங்க. இந்த எகிப்திய பிரட் நம்ம ஊரு தோசை மாதிரி அன்றாட உணவு, வறுக்கி மாதிரி இருக்கும். 


இந்த பிரட் கிரேக்க நாட்டுக்கு போனதும் தோசை பான்கேக் ஆனா மாதிரி கூடுதலா இனிப்பு எல்லாம் சேர்த்து நல்ல புஸ்ன்னு உப்ப வச்சு  வட்டம், நிலா வடிவில் எல்லாம் போட்டு தேனை ஊத்தி ஒரு புது இனிப்பு பொருளா மாறிடுச்சு.
இந்த கேக்கை நிலவு வடிவில் செய்து மேல மெழுகுவர்த்தி வச்சு  Artemis என்னும் நிலா கடவுளுக்கு ஒரு வழிபடும் முறையா செய்துகிட்டு இருந்தாங்க. அம்மன் கோவில்ல நாம போடுற மாவிளக்கு மாதிரி. 


இந்த கேக்கு கீரீக் கிட்ட இருந்து ரோமன் கிட்ட போகுது. அவங்க சாமிக்கு படைக்கல ஆனா கல்யாணம் காட்சி விருந்து இந்த மாதிரி பெரிய விஷேசங்கள்ல அடுக்கடுக்கா மேல மேல நிறைய கேக் வச்சு அதை வெட்டி வர விருந்தாளிகளுக்கு தருவதை ஒரு சடங்கா வச்சு இருந்தாங்க.

15 ஆம் நூற்றாண்டு வரை திருமணங்களில் மட்டும் தான் கேக் வெட்டிக்கிட்டு இருந்தாங்க. அதுல மெழுகுவர்த்தி வைக்கல. 15 ஆம் நூற்றாண்டில் தான் ஜெர்மனியில் சின்னதா ஒரு கேக்கை பிறந்தநாளுக்கு என்று அறிமுகப்படுத்தினார்கள். 

17 ஆம் நூற்றாண்டில் பெரிய பெரிய பணக்காரர்கள் வீட்டில்  ரோமன் கல்யாணத்துக்கு வெட்டுற மாதிரி பெரிய அலங்கார கேக்குகளை பிறந்தநாளுக்கும் வெட்ட ஆரம்பித்தார்கள்.

18 ஆம் நூற்றாண்டில்  தொழில் புரட்சி வந்தப்புறம் ஜெர்மனியில் எல்லா தரப்பு மக்களும் கேக் வெட்ட ஆரம்பித்தார்கள்.


இந்த பழக்கம் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இந்தப்பக்கம் கீரீக் கிட்ட வரும்போது அவங்க பழைய மாவிளக்கு பழக்கத்தில் பிறந்தநாள் கேக் லையும் மெழுகுவர்த்தி ஏத்தி அதை ஊதி வெட்டி பிறந்தநாளை சிறப்பிக்க ஆரம்பித்தார்கள். 


இந்த யாகம் வளர்ப்பது அப்படின்றது pagan வழக்கம். எந்த சடங்கா இருந்தாலும் நெருப்பு வளர்த்து அதை சுற்றி வழிபடுவது pagan முறை. நெருப்பு என்பது நம்மை சுற்றி இருக்கும் தீய சக்திகளை விரட்டும் என்பது நம்பிக்கை. பிறந்தநாள் அன்று நம்மை தீய சக்திகள் நெருங்கும் என்பதும் நம்பிக்கை.

இப்போ கூட குழந்தைகளுக்கு பிறந்த நாள் அன்று உடல்நிலை சரியில்லாமல் போய்விடும் ன்னு சொல்லுவாங்க. அதனால அந்த தீய சக்தியை விரட்டும் விதமாகவும் மெழுகுவர்த்தி ஏற்ற ஆரம்பித்தார்கள். 


அப்புறம் காலப்போக்கில் வயதின் எண்ணிக்கைக்கு ஏற்ப மெழுகுவர்த்தி ஏற்றுவது, மெழுகுவர்த்தியை அணைப்பதற்கு முன் ஏதாவது வேண்டி கொள்வது, பாட்டு பாடுவது, கேக்கில் birthday கொண்டாடும் நபரின் மூஞ்சியை முக்கி எடுப்பது இதெல்லாம் சேர்ந்து கொண்டன. 

கருத்துரையிடுக

  1. Your website look is very beautiful. You work very hard in these website that's why these is a way of organic traffic. They show that you very intelligent and sharp. Thanks for sharing! To know about the Flats in Puzhal.Book Now!

    பதிலளிநீக்கு

 
Top