0


உறவுகளில் அழிக்க முடியாத உறவு "தாய்மாமன்". தாய் மாமன் தமிழர் பண்பாட்டில் இருக்கும் ஒரு முக்கிய உறவு முறையாகும். இது தாயின் உடன் பிறந்தவரைக் குறிக்கும். பெரும்பாலான தாலாட்டுப் பாடல்களில் மாமன் பெருமையைக் கூறும் பாடல்களே அதிகம். 

உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் உடனே சொல்வார்கள் தாய்மாமன் உறவு என்று தான். பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய் என்ற படிக்கும் பசங்களிடம் ஒரு காலத்தில் (தற்போது அல்ல) எங்க மாமா வீட்டுக்க போனேன் என்று தான் சொல்வார்கள். புதிதாக விளையாட்டுப்பொருள் வைத்திருந்தாள் யாருடா வாங்கிக்கொடுத்தா என்று நண்பனிடம் கேட்டால் எங்க மாமா என்பான் அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் அது தாய்மாமா தான்.


எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே வாழ்வாங்கு வாழ்வான்என்பது சொல்வடை. உறவுகளில் ஆகச் சிறந்தது தாய்மாமன் உறவு. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, தம்பி இவற்றை விட சிறந்தது தாய்மாமன் உறவு. தந்தையின் உறவு என்பது வேறு வகையானது. ஆனால் தாய் மாமன் உறவு என்பது எந்த வித முன் தொடுப்பும் இல்லாது வருவது.



தொட்டிலிடுதல்

குழந்தை பிறந்ததும் தாய் மாமன் தொட்டில் கம்பு, தொட்டிற் சீலை அல்லது தொட்டில் முண்டு போன்றவற்றைக் கொண்டுவந்து தொட்டில் கட்டி குழந்தையைக் கிடத்தி மூன்றுமுறை ஆட்டிவிடும் வழக்கம் பல குடும்பங்களில் உண்டு.

காது குத்துதல்

காது, மூக்கு ஆகிய பகுதிகளில் துளையிட்டு உலோக ஆபரணம் பூட்டுவதற்கு தாய் மாமன் மடியில் குழந்தையை அமர வைத்துக் காது குத்துதல் என்பது மாறாத வழக்கமாக இருந்து வருகிறது.

பாடல் வரிகள்;
கண்ணான அம்மாளுக்கு - ஏனம்மா
காதுகுத்தப் போறாகன்னு கிண்ணியில் சந்தனமும் கிளிமூக்கு வெத்தலையும் தங்கத்தினால் ஆபரணமும் - ஏனம்மாளுக்கு
கொண்டு வந்தார் தாய்மாமன்

பூப்புச் சடங்கு
ஒரு பெண் குழந்தை பருவம் அடைந்து விட்டால் தாய் மாமன் சீர் கொண்டு வந்து பூப்படைந்த பெண்ணிற்குப் பச்சை ஓலைகளால் குச்சில் கட்டுதல் அல்லது குடிசை கட்டும் வழக்கமும் தமிழகத்தில் உள்ளது.

தாய்மாமன் சீர்" தங்கை மகள் பூப்பெய்திய(வயதுக்கு வந்ததும்) தாய் வீட்டுசீர்வரிசையாக(மஞ்சள், குங்குமம்,வெற்றிலை பாக்கு, பச்சை ஓலை குச்சில் கட்டுவது, பட்டுச்சேலை, பூ, மாலை, பாத்திரம், மேளதாளம், வானவேடிக்கைகள் மேலும் பலசகல பொருட்கள் அன்றயதினம் தேவையான) தாய்மாமன் உறவு வழங்குவது தமிழர் மரபுவழி வாழ்வியல் பண்பாட்டு கலாச்சார சடங்கு சம்பிரதாய வழக்கம் இதுவே.

மருமகள் பூப்பெய்திய புனித நீராட்டு விழா எடுப்பது தாய்மாமன்முறை என்பது எம் தமிழர் மரபின் வழிசம்பிரதாயம்...!!


பட்டம் கட்டுதல்

திருமணத்தில் தாலி கட்டிய பிறகு தாய் மாமன் திருமணப் பெண்ணுக்கு நெற்றிப் பட்டம் கட்டுவார். பட்டம் கட்டுதல் என்பது உரிமை கொடுப்பதைக் குறிக்கும் சொல்லாகும்.



தங்கைக்கு தகப்பனாய், அவள் பெறும் குழந்தைகளுக்குப் உற்ற பாதுகாவலனாய், நண்பனாக அந்த குழந்தை கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுத்து அதன் முகத்தில் அதிக மகிழ்ச்சியை பார்ப்பது தாய்மாமன் தான். இன்றும் நான் வார விடுமுறைக்கு வீட்டிக்கு போனால் வாசலில் மாமா வந்தாச்சுனு என் தங்கை குழந்தையின் சந்தோசத்தை சொல்லிமாளது.

 தன் தங்கையின் குழந்தைகளை தன் குழந்தைகளைப் போல கவனிப்பான். அக்குழந்தைகளின் ஒவ்வொரு நல்லதுக்கும் தாய்மாமனே முக்கியம் என்று தமிழர் பண்பாடு சொல்கிறது. காது குத்துவதிலிருந்து, திருமணத்திற்கு மாலை எடுத்துக் கொடுப்பது வரையிலும் இன்னும் அனைத்து நல்லதற்கும், கெட்டதற்கும் தாய்மாமனே முன்னிற்பான்.

 தங்கையின் அல்லது அக்காவின் கணவருக்கு அதிக  உதவிகள் செய்வது எங்கள் மாமா என்று உரிமையோடு அவருக்கு துணையாக செல்வது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

  தன் குடும்பத்தைக் கவனிப்பதை விட தங்கையின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றுபவன், அண்ணன் தனக்காக தன்னை வருத்திக் கொள்கிறானே என்று அண்ணன் நன்றாக வாழ வேண்டும் என்று ஒரு நொடி அத்தங்கை நினைத்தால் என்றால் அண்ணன் மாடி மீது மாடி கட்டி வாழ்வான்.

எவனொருவன் கூடப் பிறந்தவர்களை அழ விடுகின்றானோ அவன் எந்தக் காலத்தும் சிறந்து வாழ முடியவே முடியாது. சில ஊர்ப்பக்கம் தங்கையின் மகளோ அல்லது அக்காவின் மகளோ இயற்கை குறையோடு இருந்தால் தாய்மாமனுக்குத் தான் கட்டி வைப்பார்கள். தாய்மாமனுக்கு வயதாகி விட்டால் அவனின் மகனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். 

 

தாய் மாமன் உறவென்பது தியாகத்தின் உருவம். இந்த தியாகத்தை  தந்தையோ, தனயனோ செய்ய முடியுமா?  

அப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து வாழ வைப்பவன் கடவுளுக்கும் நிகரனாவன் அல்லவா? உறவுகளில் மிகச் சிறந்த உறவு தாய்மாமன்என்று அடித்துச் சொல்லலாம்.


ஆனால் இன்று குழந்தைகளின் பெற்றோர் தனது வேலை காரணமாக வெளியூர்களில் இருப்பதால் குழந்தைகளும் அவர்களுடனே இருக்கும் அதனால் இப்போதெல்லாம் தாய்மாமன் உறவு முறை சிறிது சிறிதாக குறைந்து வருகிறது.


குழந்தையும் தாய்மாமனை மாதம் ஒரு முறை என்று பார்த்து மாமாவின் முகம் மறைகிறது என்பதுதான் இன்றைய நிதர்சன உண்மை.


நமக்கும் தாய்மாமன்கள் நிச்சயம் இருப்பர் ஆனால் நாம் நமது வேலைப்பளுவாலும், கால ஓட்டத்தாலும் நாம் நம் தாய்மாமனை நிச்சயம் மறந்திருக்க மாட்டோம் அது போல் நம் குழுந்தைகளுக்கும் மாமாவின் அருமை பெருமைகளை சொல்லி வளர்க்க வேண்டும் என்பது என் விருப்பம்.
கிழக்குச் சீமையிலே
ஏ ஆர் ரஹ்மான்
(1994)


பாடல்:மானுத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
குரல்:எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்:வைரமுத்து

மானுத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே
தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி - அவன்
தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி
சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே (2)

(மானுத்து)

நாட்டுக்கோழி அடிச்சு நாக்குசொட்ட சமச்சி
நல்லெண்ண ஊத்திக் குடு ஆத்தா
வெள்ளக் கொடல் வலிச்சா வெள்ளப்பூண்டு உரிச்சி
வெல்லங்கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா
பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க
பிள்ளக்கி தாய்ப்பாலத் தூக்கிக் கொடுக்கச்சொல்லு
மச்சான திண்ணையில போத்திப் படுக்கச்சொல்லு

(மானுத்து)

ஆட்டுப்பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு
எருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு
காராம்பசு ஓட்டி வாராண்டி தாய் மாமன்
வெள்ளிச்சங்கு செஞ்சா வௌளக்கி வெக்க வேணுமுன்னு
தங்கத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய் மாமன்
பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க
ஈ எறும்பு அண்டாம எட்டி இருக்கச்சொல்லு
மச்சான ஈரத்துணி கட்டி இருக்கச்சொல்லு

(மானுத்து)

 

கருத்துரையிடுக

 
Top