
என்ன தான் ஒரு கம்பியூட்டரை ஹேக் செய்ய தெரிந்த கில்லாடிக்கு கூட, அவங்களோட அன்றாட
வாழ்க்கைக்கு தேவையான சின்ன சின்ன விஷயங்களை செய்துக் கொள்ள தெரியாது.
கடைக்கு போய் காய்கறி வாங்கிட்டு வர சொன்னால், பழைசும் , கெட்டுப்போனதுமாக
வாங்கி வருவார்கள்.
அலுவலகத்தில் ஒரு சின்ன மீட்டிங் என்றால் கூட டை கட்ட தெரியாது, வெளியூர் செல்வதாக இருந்தால் பெட்டி
படுக்கை எடுத்து வைக்க அம்மாவின் உதவி வேண்டும், தினமும் ஆபிஸ் செல்லும்
முன்னர் மனைவி துணியை இஸ்திரி செய்து வைத்திருக்க வேண்டும். ஆனால், ஆண்
மகன் என்ற கர்வம் மட்டும் இருக்கும். ஏன், ஆண்மையுடன் இருக்கும் ஆண்களை
விட, ஆணி அடிக்க/ புடுங்க தெரியாத ஆண்களின் எண்ணிக்கை அதிகம்.
குறைந்தபட்சம் 30 வயதை தாண்டுவதற்குள் உங்களுக்கு இந்த 21 சிறு சிறு விஷயங்களையாவது தனியாக செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்னு ஒரு செய்தியை பார்த்தேன்.. நமக்கு அப்படி என்ன தெரியாமல் போய்விட்டது என்று தான் இன்றைய அலசல்…
எதிர்நீச்சல்!
எதிர்நீச்சல்னு சொன்னதும் பலருக்கு நினைவில் வருவது நடிகர் சிவகார்த்திகேயன் தான். ஒருவேள இவன் எல்லோரையும் மராத்தான் போட்டில ஓடணும்னு சொல்லுவானொனு நினைக்காதிங்க.... நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். 2012, 2014 2015 தொடர்ந்து
அடுத்து 2050-களில் உலகமே இருக்காதுனு சொல்லுறாங்க. எனவே, கடலில் இல்லைனாலும், நாம் இருக்கும் வீதிகளில் நீர் புகுந்துவிட்டால், அதிலிருந்து தப்பிக்க நமக்கு நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். எங்க ஊர்ல 1500 அடிக்கு கீழ தண்ணி போய்டுச்சு அதனால எப்போ தண்ணி வரும்னு எதிர்பாக்குறோம்.. அப்படி தண்ணி வந்ததும் முதல் வேலையா இந்த எதிர்நீச்சல் புதிர் நீச்சல் எல்லா நீச்சலும் கத்துக்கணும்.
வித்துவான்!
பைக் அல்லது கார் டயர் ரிப்பேர் ஆகிவிட்டால், தவிக்காமல், நம்மாலே கழற்றி மாற்றும் அளவுக்கு பக்குவம் பெற்றிருக்க வேண்டும். இதுவரைக்கும் நான் ஒரு நாலு தடவ சைக்கில் டயர், 3 தடவ பைக் டயர் கலட்டியிருப்பேன்.
டிக்கெட்!

பேருக்கு தான் MBA டிகிரி படிச்சிருக்குறேன், ரயில்ல ரிசர்வு அன்ரிசர்வு டிக்கட் மற்றும் பஸ்ல ஆன்லைன் ஆப்லைன் டிக்கட் எல்லாம் எடுத்தாச்சு இன்னும் இந்த
விமான டிக்கெட் மட்டும் பதிவு செய்ததில்லை. ஒருநாள் அதையும் முயற்சிக்கணும்.
சமையல்!
ஊர் புகழும் அளவிற்கு இல்லை என்றாலும், நான் சாப்பிடும் அளவுக்கு கொஞ்சம் சமையல் தெரியும். இப்ப இருக்குற பேச்சுலர் பசங்க பலருக்கு சமையல் ஒரு கைவந்த கலை தான். என்ன இருந்தாலும் இந்த விஷயம் கட்டிக்கபோற பொண்ணுக்கு தெரியாம காப்பாத்தனும் இல்லினா அவங்க கைல டிவி ரிமோட்டும் நம்ம கைல தோச கரண்டியும் தான் இருக்கும்.
வரி!
ஒரு முறையாவது யாருடைய உதவியும் இல்லாமல் நம் வரியை ஃபில் செய்து முடிக்க வேண்டும். அதுக்கு மொதலல்ல நம்ம வரி கட்டுற அளவுக்கு சம்பளம் வாங்கணும். இந்த வருஷமாவது அப்ரைசலில் கொஞ்சம் பாத்து பண்ணுங்க மேனஜர் சார்.
எந்த பயமும் இல்லாமல், கூகுள் இருக்கிறது என்ற தைரியத்தில், கூகிள் மேப் உதவியோடு பல பயணங்கள் போயாச்சு. என்ன பல பகுதியில் நெட் கிடைக்காது இல்லன அங்க ரோடு இருக்காது. ஹீட்போனுல பாட்ட போட்டுட்டு இந்த கூகிள் மேப்ப நம்ம நம்பி போன அது நம்ம தப்பான வழியில போன கூட அது சொல்லவே சொல்லாது. புதுசா ஏதாவது வழியிருக்கான்னு தேடிட்டு இருக்கும்.
டை!
சிலரை நீங்கள் பார்த்திருப்பீங்க ஏதாவது மீட்டிங் என்றால் டையை
எடுத்துக் கொண்டு அவரது நண்பரிடம் ஓடுவார்கள். இந்த ஓட்டம் இல்லாமல் சரியாக
டை கட்ட தெரிந்திருக்க வேண்டும். நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது யார் எனக்கு டை கட்டி பலக்குனதுனு தெரியல எப்படி முயற்சித்தலும் அது தலைகீழாக இருக்கும்.
பார்ட்டி!
பார்ட்டி கீட்டி சென்று வந்தால், போனோம் வந்தோம் என்றில்லாமல், புதிய நட்பு, அல்லது அனைவருடன் பேசி மகிழ்ந்து வர வேண்டும். போன்ல எத்தன வாட்ஸ்ஆப் குருப்பத்தான் இருக்குனு தெரியல.
அபாயம்!
ஏதேனும் ஒரு விஷயத்திலாவது அபாயத்தை எட்டிப்பார்த்து, தப்பித்து உங்கள்
தன்னம்பிக்கை பறைசாற்றும் படி ஒரு செயலை செய்து திரும்ப வேண்டும். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியிலிருந்து ப்ளாக் தண்டர் தீம் பார்க் போனோம் எனக்கு நீச்சல் தெரியாது. நீச்சல் நண்பர்கள் ஓரிடத்தில் இருந்து சரிக்கி வந்து பத்தடி ஆழ தொட்டியில் விழுந்து நீந்தி கடந்தார்கள். பார்க்க சுலபம் என்று நினைத்து கொண்டு நானும் எனக்கு நீச்சல் தெரியும் என் சொல்லி இறுதியில் சென்று மாடிக்கொண்டேன். தண்ணிக்குள் விழுந்தது தான் எனக்கு ஞாபகம். கண் திறக்கும்போது என் வயிற்றில் ஒருவர் கைவைத்து அழுத்திக் கொண்டிருந்தார். 2016ரில் மீண்டும் அதே சறுக்கில் பயணம் ஆனால் பாக்கிகள் தொட்டியின் ஆழத்தை நாலடியாக மாற்றிவிட்டார்கள்.
பேக்கப்!

வெளியூர் செல்லும் போது அம்மாவின் உதவியின்றி என் உடைகளை, உபகரணங்களை நானே பேக்கில் சரியாக, ஒழுங்காக எடுத்துவைத்து விடுவேன். செலவு பணம் போக அவசர தேவைக்கு என்று ஒரு தொகை தனியாக வைத்துக் கொள்வேன்.
அலாரம்!
அலாரம் அடிக்கும் முன்னர் எல்லாம் வேண்டாம், அலாரம் அடித்தவுடன் எந்த
சோம்பேறித்தனமும் இல்லாமல், உடனே படுக்கையில் இருந்து எழுந்திருக்கும்
மனப்பக்குவம் உண்டாகியிருக்க வேண்டும். அதற்குத்தான் நான் இரண்டு அலாரம் வைக்கிறேன்.
காயம்!
ஏழு கழுதை வயதானாலும், காயத்திற்கு மருந்து, கட்டு போட தெரியாமல்
சுத்தும் நபர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கிராமத்தில் வளர்ந்த எல்லாருக்கும் முலிகை மருத்துவம் சிறிது தெரியும். தோட்டம், வயக்காடுகளில் விளையாடும் பொழுது காயம் ஏற்பட்டால் கண்கள் தேடுவது நீளமான காம்புள்ள இந்தக் கள்ளிப்பூட்டாஞ்செடியை தான் அதன் தழையை கசக்கி அதன் சாற்றை காயத்தில் வைத்தால் பொதும். இந்தக் கள்ளிப்பூட்டாஞ்செடி பூவினை சின்னப்பசங்க
ஒரு பாட்டுப் பாடியவாறே, வெடுக்வெடுக்-னு பிடுங்கிப் போடுவாங்க.
ஸோ...வெட்டுக்காயம் எதுவும் ஆகலன்னா, நீங்களும் இந்தப் பூவை
ரசிங்க..குழந்தைத்தனமான மனமிருந்தா இந்த பாட்டையும் முயற்சி செய்யுங்கள்..
என்று பாடியவாறே பூவைப் பிச்சுப் போடுங்க. ;)
" தாத்தா...தாத்தா...காசு குடு!
குடுக்க மாட்டேன்.
குடுக்கலன்னா தலய வெட்டுவேன்! "
குடுக்க மாட்டேன்.
குடுக்கலன்னா தலய வெட்டுவேன்! "
சட்டை பட்டன்!
சட்டை அல்லது பேன்ட் பட்டன் அறுந்துவிட்டால், அதை உடனே அம்மா அல்லது
டைலரிடம் எடுத்து செல்லாமல், நீங்களாக ஊசி நூல் எடுத்து உட்கார்ந்து தைக்க
வேண்டும்.இந்த அனுபவம் எல்லாம் எனக்கு கிடைத்தது என் பள்ளி விடுதியில்தான்.
பல்பு!
பெரிய எலக்டிரிக் மெக்கானிக்காக இல்லாவிட்டாலும், குண்டு பல்பு ஃபியூஸ் போனாலாவது, அதை மாற்ற தெரிந்திருக்க வேண்டும். நாங்க எல்லாம் அப்பவே ஏசி கரண்டுல டீசி பல்ப மட்டுனவங்க.
முடிவு!
பதிவோட முடிவு இல்ல்லீங்க... யாருடைய உதவியும் இல்லாமல், ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கலாக ஒரு சரியான
முடிவை எடுக்க கற்றுகொண்டிருக்க வேண்டும். அதற்கு பாராட்டு
வாங்கியிருந்தால், உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் போட்டுக் கொள்ளலாம். எனக்கு எது சரின்னு தோணுதோ அத செய்வேன்.
படுக்கை!
தூங்கி எழுந்தவுடன், படுக்கையை அலங்கோலமாக விட்டு செல்லாமல், ஐந்து
நிமிடம் ஒதுக்கி, அதை மீண்டும் சரி செய்துவிட்டு கிளம்ப வேண்டும் என்ற
மனநிலை ஏற்பட்டிருக்க வேண்டும். இது நான் தங்கிருக்கும் ரூமில் பொருந்தும். வீட்டில் இந்த பழக்கம் எப்ப வருமோதெரியல.
ஆணியே புடுங்க வேண்டாம்!
ஆண்மையுடன் இருக்கும் ஆண்களை விட, ஆணி கூட அடிக்க தெரியாத ஆண்களின்
எண்ணிக்கை அதிகம். எனவே, இதுபோன்ற பல்பு ஆளாகாமல், டமால், டுமீல்
என ஆணி அடிக்க கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
காய்கறி, பழங்கள்!
காய்கறி, பழங்கள் என உணவுப் பொருட்களை சரியாக பார்த்து வாங்க
தெரிந்திருக்க வேண்டும். அழுகியது, கெட்டுப் போனவற்றை ஏமாந்து வாங்கி வரக்
கூடாது. பேச்சுலர் பசங்களுக்கு இது கைவந்த கலை தான். நானும் பேச்சுலர் தான் நம்புங்க.
இஸ்திரி!
நீங்கள் அணியும் உடைகளையாவது சரியாக, நீட்டாக இஸ்திரி செய்ய தெரிந்திருக்க வேண்டும். இஸ்திரி பெட்டி இருக்கு எப்பத்தான் கரண்ட வரும்னு பாத்துட்டு இருக்குறோம்.
வரவு, செலவு!

மற்றவர்கள் ஏன்டா வீண் செலவு செய்யிற என அறிவுரை கூறாத வண்ணம், சரியாக வரவு, செலவை பின்பற்றும் வாடிக்கை, பழக்கம் இருக்க வேண்டும். நம்மதான் வாரிவழங்கும் வள்ளலாச்சே சம்பளம் வருதோ இல்லையோ கடன் கேட்டக ஏகப்பட்டபேர் ரெடியா இருப்பாங்க.
அறிவு!
எல்லாவற்றுக்கும் மேலாக காமன்சென்ஸ் எனப்படும், இது செய்தால் என்ன
நடக்கும், இதை நாம் ஏன் செய்ய வேண்டும், இது தவறு இதை செய்ய கூடாது எனும்
காமன்சென்ஸ் இருக்க வேண்டும். அந்த காமன் சென்ஸ் இருந்திருந்தா இந்த பதிவுக்கு நான் ஏன் இவ்ளோ நேரம் செலவு பண்ணனும்.
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்கு