நம்ம ஊற பொருத்தவரைக்கும் பாம்ப பாத்தா ஓடிடுனு சொல்லி ஒரு பயத்தோட வளத்திடுவாங்க.. பாம்ப பாத்து பயகுற பசங்கள ஓடுற பாம்ப புடிக்கிற வயசுல ஏண்டா பயக்குறனு சொல்லுவாங்க. எந்த பாம்பும் பொதுவாக மனிதர்களை/ விலங்குகளை தேடித் போய் தாக்குவதில்லை. தான் தாக்கப்படும்./ பாதிக்கக்கபடும் நிலை ஏற்பட்டாலேயே, பிறர் மேல் தாக்குதல் நிகழ்த்துகின்றன. பாம்பின் விடம் என்பது தன் இரையை, உணர்விழக்கச் செய்வதற்காக, இயற்கை அளித்த சொத்து. ராஜ நாகத்தின் இயற்கை எதிரி கீரிதான். இதற்கு பாம்பின், நரம்பு நஞ்சை முறிக்கும் தன்மை இயற்கையாகவே அமைந்துள்ளது.
உலகின் உயிரினங்கள் ஒன்றிரண்டில் விஷம் ஊட்டும் வகைகளும் உண்டு என்பதால் அவற்றைப் பற்றி அறிந்து கொள்ளுதல் அவசியமாகும்! ஊர்வன வகையினைச் சார்ந்து.. மனிதர்களைப் பற்றிக் கொள்ளும் (கொல்லும்) பயத்தை ஊட்டிடும் பாம்புகளை அடையாளம் காண்பது எப்படி? அதிலே எந்தப் பாம்பு நல்ல பாம்பு? படியுங்களேன்.. பாம்புகளைப் பற்றி அறியுங்களேன்..
மனித இனத்திற்கு முன்பே தோன்றியவை பாம்புகள். இவைகள் பெரும்பாலும் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். ஆனால், கண்ணாடிவிரியன், பச்சை பாம்பு போன்ற சில வகைகள் குட்டி போடும். நல்ல பாம்பு முட்டையிட்டு குட்டிகள் வெளி வரும் வரை பாதுகாக்கிறது. பாம்புகள் சுற்றுப்புறத்தில் உள்ள வாசனைகளை உணரவே நாக்கை அடிக்கடி வெளியில் நீட்டும். பாம்புகளால் ஒலி அலை உணர இயலாது. அதற்கு வெளிக்காது மற்றும் நடுக்காது அமைப்புகள் இல்லை. அதன் உடல் வளர்ச்சி காரணமாகவே அதன் மேற்தோல்களை உரித்துக் கொள்கின்றன.
வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன் படி பாம்புகள் அனைத்தும் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்டுள்ளன. அரசின் அனுமதி மற்றும் உரிமம் இல்லாமல் அவற்றை பிடித்தலோ, அடித்து கொன்றாலோ அல்லது ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு சென்றாலோ அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
பாம்புகள் தங்கத்தை விட விலை மதிப்பு மிக்கது. அவைகள் மனிதர்களுக்கு பெரும் உதவிகளை செய்து வருகின்றன. பாம்பு விஷம் மருத்துவ துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு கிராம் நல்லபாம்பு விஷம் 28 ஆயிரம் ரூபாய்; கட்டுவிரியன் விஷம் 30 ஆயிரம் ரூபாய்; கண்ணாடி விரியன் விஷம்40 ஆயிரம் ரூபாய், சுருட்டை விரியன் 45 ஆயிரம் ரூபாய் என விற்பனை செய்யப்படுகின்றன அப்படி என்று சொல்லவதை எல்லாம் நம்பாதீர்கள்.
பாம்பு வளர்த்து பணத்தை அள்ளலாம்!
பிரேசிலில் உள்ள ஒரு தீவிற்கு மக்கள் செல்வதே இல்லை. அங்கு ஐந்து மீட்டர் தூரத்திற்கு ஒரு பாம்பு இருக்கும் அது காரணம் காரணம்.
பாம்ப பத்தி நம்ம ஊர் பெருசுக தப்பு தப்பா கட்டு கதைகள் கட்டியிருப்பாங்க நல்ல பாம்பு மகுடியின் இசைக்கேற்ப படம் எடுத்து ஆடும்னு சொலுறாங்க.. பாம்புக்கு காதே இல்லையாம அது டிஜே பாட்டுக்கு டான்ஸ் ஆடுமா பாம்பாட்டி மகுடியை அப்படியும் இப்படியும் அசைத்து ஆட்டும் போது பாம்பும் தன் பார்வையை மகுடி மீது செலுத்தி அதற்கேற்றவாறு அசைவதைத்தான் “மகுடியின் இசையில் தான் பாம்பு ஆடுகிறது” என்று தவறாக சொல்லி விட்டனர்.
பாம்புகளால் அதன் வாயை 150 டிகிரி அளவிற்கு திறக்க முடியும்.
நல்ல பாம்பும், சாரைப் பாம்பும் ஒரே இனத்தை சேர்ந்த ஆண், பெண் பாம்புனு சொல்லுவாங்க. ஆனால், நல்ல பாம்பும், சாரைப்பாம்பும் தான் இணைகின்றன என்ற தவறான கருத்தினைக் கூறி வருகிறார்கள். பறக்கக் கூடிய பறவைகள் எல்லாம் ஒரே இனத்தைச் சேர்ந்திருப்பதால் கோழி, கொக்குடன் இணையுமா? கழுகு, வவ்வாலுடன் இணையுமா? காக்கை குயிலுடன் இணை யுமா? குருவி, கரிச்சானோடு இணையுமா? வாத்து வான்கோழியுடன் இணையுமா? இவை எப்படிச் சாத்தியமில்லையோ அப்படித் தான் பாம்பின் சேர்க்கையும் ஆகும்..
டைட்டானோபோ எனும் பாம்பு தான் உலகிலேயே பெரிய, நீளமான, எடை அதிகமான பாம்பாகும். இது 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம் ஆகும்.
நல்ல பாம்பு மிகவும் வயதானவுடன் தன் தலையில் மாணிக்ககல் வைத்திருக்கும் இது கொஞ்சம் ஸ்வாரசியம்மாக ஒரு கதை சொல்லுவாங்க இது சார்ந்த மடமை எண்ணங்கள் நம்ம ஆளுகளுக்கு கொஞ்சம் அதிகம் தான். நூறு வருஷம் மேல் வாழும் பாம்பு ஒரு ஜான் அளவாக சுருங்கிப்போகும்; அதன் உடலில் சிறகு முளைத்துவிடும். அதன் வாயில் நஞ்சு சுண்டி மாணிக்கமாக மாறிவிடும். இரவு நேரத்தில் தன் வாயிலிருக்கும் மாணிக்கம் கக்கிவைத்து, அந்த மாணிக்க ஒளியின் வெளிச்சத்தில் இரைதேடும். அந்த மாணிக்கத்தை யாராவது எடுத்தால் பறந்துவந்து கொத்தும். உடனே அவர் இறந்துபோவார். பதுங்கியிருந்து, ஒளிவீசும் மாணிக்கத்தின் மீது சாணி உருண்டையை போட்டு மூடினால் பாம்புக்கு கண் தெரியாமல் போகும். உடனடியாக சென்று மாணிக்கத்தை எடுத்துக் கொள்ளலாம். அப்படித்தான் மாணிக்கம் எடுக்கப்படுகிறது என்று மாணிக்கம் உருவாவது பற்றியும், எடுக்கப்படுவது பற்றியும் நம்ம தலைய தலைய ஆட்டி கதை கேப்போம்.
பாம்புகளுக்கு கண்ணிமைகள் இல்லை.பாம்புகள் திறந்த கண்களுடன் தான் உறங்கும்.
ஆனால், இதில் எதுவும் உண்மை இல்ல பாம்பின் நஞ்சு அதன் நச்சுப்பையில் திரவ வடிவத்தில் இருக்கும் நச்சுப்பை துளையுள்ள பல்லுடன் இணைந்திருக்கும். பாம்பு கடிக்கும் போது தன் தலையைத் திருப்பி நச்சுப்பையைச் சுருக்கி அமுக்கும்போது, அதிலுள்ள நஞ்சு பல்லில் உள்ள துளைவழியே வெளிவரும். பாம்பு கடிக்கும் போது அது கடிக்கும் உடலில் நஞ்சு ஏறிவிடும். அப்படியிருக்க பாம்பு தன் நஞ்சைக் கக்க முடியாது. 100 ஆண்டுகளுக்கு மேல் வாழும் பாம்பின் நஞ்சு கெட்டியாகி மாணிக்கமாவது இல்லை. பாம்பு உயிருடன் இருக்கும்வரை பாம்பின் நச்சுப்பையில் உள்ள நஞ்சு திரவமாகவே இருக்கும். எப்போதும் கெட்டியாகாது. நஞ்சு கெட்டியானால், அது பல்லின் ஓட்டை வழியே வெளிவராது. சரி நீங்க வேணா ஒரு மாணிக்க கள்ள முழுங்கி பாருங்க என்ன ஆகும்னு பாப்போம்.
பாம்பு பெண்ணாக மாறும் என்ற கருத்தும் தவறானது. அப்படி வரும் திரைப்படங்கள் கற்பனையானவை. பாம்புக்கு சிறகும் முளைக்காது, பறந்தும் வராது. பறந்துவந்து கொத்தும்போது மனிதன் உடனே இறப்பான் என்பதும் தவறு-. காரணம், பாம்பின் விஷம் மாணிக்கமாகக் கக்கப்பட்டபின் பாம்பின் உடலில் நஞ்சு எங்க இருக்கும்? பின் எப்படி மனிதன் சாவான். பிள்ளைகள் சிந்திக்க வேண்டும். மாணிக்கம் என்பது ஒருவகைக் கல். அது தீட்டத் தீட்ட ஒளிவிடும். மாறாக, பாம்பின் நஞ்சு அல்ல.
நல்ல பாம்பையோ அல்லது வேறு வகை பாம்பையோ கொன்றுவிட்டால் அதன் ஜோடி கொன்றவரை பழி வாங்கும். அது என்ன மெகா சிரியளிலா நடிக்குது பழிவாங்கும் குணம் மனிதர்களுக்கு மட்டுமே சார்ந்த ஒரு குணம்..
பாம்புகள் பாலை விரும்பி குடிக்கும். பாம்புகளுக்கு நாக்கு பிளவுபட்டு கம்பிகள் போல் இருக்கும். எனவே, பாம்பு பாலையோ நீரையோ நக்கிக் குடிக்க முடியாது. கிண்ணத்தில் பாலை வைத்தால் பாம்பு உறிஞ்சிக் குடிக்கிறது என்று பக்தர்கள் கூறுகிறார்கள். இது மிகவும் அறியாமையாகும். பாம்புக்கு அதன் தலையின் நுனிப் பகுதியில் மூக்கு உள்ளது. அது நீர்மப் பொருளில் வாயை வைக்கும்போது முதலில் நுழைவது மூக்காகத்தான் இருக்கும். மூக்கை நீரிலோ, பாலிலோ நுழைத்தாலே பாம்பு மூச்சுத்திணறிச் செத்து விடும். இதை தெரியாதவர்கள் தான் பாம்பு பால் குடிக்கிறது என்று தவறாகச் சொல்லி வருகின்றனர்.
பாம்புகள் தங்களது நாக்கை வைத்து தான் நுகரிக்கின்றன.
அடுத்தது பாம்பு முட்டையைக் கூட உடைத்து உறிஞ்சிக் குடிக்கும் என்று சரடு விடுகிறார்கள். பாம்பு இரையை (எலி, தவளை போன்றவற்றை) அப்படியே விழுங்குமேயன்றி மென்று சாப்பிடக் கூடிய அமைப்பு கிடையாது. எனவே முட்டையையும் பாம்பு விழுங்குகிறதேயன்றி உடைத்து உறிஞ்சிக் குடிக்காது. முட்டையை உடைத்து அது என்ன அம்ப்ளேட், ஆப்பாயிலா போடபோகுது.
பாம்புகளும் இரண்டு தலைகளுடன் பிறக்கும் வாய்ப்புகளை உண்டு. இதில், வேடிக்கை என்னவென்றால், இரண்டுமே உணவு உண்ணச் சண்டைக்குட்படும்.
மண்ணுளிப் பாம்புகளுக்கு இரண்டு தலைகள் உண்டு. அவைகள் கடித்தால் தொழுநோய் வரும். "மண்ணுளிப் பாம்பு, மண்புழு குடும்பத்தைச் சேர்ந்தது. அது மண்ணில் இருப்பது, மண் வளத்தை பாதுகாக்கும். அதை வாஸ்து பாம்பு எனச் சொல்லி வீட்டில் அடைத்து வைத்து வளர்ப்பது நல்லதல்ல. அதனால் எந்தப் பலனும் நிச்சயம் கிடைக்காது.
பாம்புகளைவிட தேனீகளால் தான் மனிதர்கள் அதிகளவில் கொல்லப்படுகிறார்கள்.
பச்சைப் பாம்பு கண்களை கொத்தும். அப்படி என்றால் இன்று அதிக மக்கள் கண் இல்லாமல் தான் இருக்க வேண்டும். பச்சைப் பாம்பு (Masticophis) என்பது ஒரு நஞ்சற்ற பாம்பு இனம் ஆகும். செடி, கொடிகள் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கிறது. பூச்சி, சிறு தவளை, எலி, ஓணான், பல்லி ஆகியவற்றை பிடித்துதின்னும்.இது 5 அடி வரை வளரும் தன்மை கொண்டது. இப்பாம்பின் கூரான முகம் வளையும் தன்மை கொண்ட மென்மையான ரப்பர் போன்றது.ஆகவே இதை கண்கொத்தி பாம்பு என்றும் அழைப்பர். ஆனால் இதற்கு கண்களை கொத்தும் குணம் இல்லை. சாட்டை போன்ற இப்பாம்பினம் இடத்திற்கு தக்கவாறு இளம்பச்சை,கரும்பச்சை ,மஞ்சள் மற்றும் சாம்பல் ,பழுப்பு வண்ணங்களில் காணப்படுகின்றது.
பிளாக் மாம்பா எனும் பாம்பு கடித்து உயிர் பிழைத்தவர்கள் யாரும் இல்லை.
கொம்பேறி மூக்கன் மனிதனை கடித்து கொன்று விட்டு, மரத்தில் ஏறி அந்த மனிதன் உடல் எரிப்பதை பார்க்கும். கொம்பேறி மூக்கனுக்கு விஷத்தன்மையே கிடையாது. தவறான தகவல்களால்தான் பாம்புகளைக் குறித்து ஒரு பீதி நமக்குள் உள்ளது.
அதிர்வுகளை வைத்து பாம்பு மற்ற விலங்குகளின் வருகையை உணர்கிறது.
இந்தியாவில் 230 வகையான பாம்பு இனங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 இனங்களே நாச்சுந்தவை. சில வகையான பாம்புகளின் விஷத்தன்மை, நரம்பு மண்டலத்தை நேரடியாக தாக்குகிறது.
சில வகை பாம்புகள் இரண்டு ஆண்டுகள் கூட உணவின்றி உயிரிர்வாழும் திறன் கொண்டிருக்கிறது.
இந்த வகையை சேர்ந்ததே நாகபாம்பு, பவளப்பாம்பு, கட்டுவிரியன் போன்றவை. மற்ற சில பாம்புகளின் நஞ்சு இரத்தக் குழாய்களையும் இரத்த அணுக்களையும் தாக்கி அழித்து இரத்தத்தை உறைவதுவும் நிறுத்த வல்லது. கண்ணாடி விரியன் பாம்பு இந்த வகையை சேர்ந்தது.
உலகின் முதல் பத்து விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளும் ஆஸ்திரேலியாவில் காணப்படுகிறது.
பாம்பிற்கு முட்டை வைப்பதும், பால் ஊற்றுவதும் எதற்காக தெரியுமா ?
விஞ்ஞான ரீதியில் சொல்லப்போனால் நிஜமாகவே பாம்புகள் முட்டையையும், பாலையும் குடிக்காது. அப்படி இருக்க நம் முன்னோர்கள் எதற்காக இந்த வழக்கத்தை கொண்டுவந்தனர் என்பதன் உண்மை நோக்கத்தை இங்கு காண்போம், பழங்காலங்களில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்,மனித நடமாட்டம் மிக மிக குறைவு.மனிதனை விட பாம்புகள் எண்ணிக்கையில் அதிகம் காணப்பட்டது. ஒரு உயிரினத்தை கொள்ளும் உரிமை தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்த அன்றைய தலைமுறையினர். பாம்புகளை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர். பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும். அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும். பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது .ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. இதற்காகத்தான் நாம் பாம்புகளுக்கு பாலும், முட்டையும் வைக்கிறோம்.
விஷமுள்ள, விஷமற்ற பாம்புகள் கண்டறிவது எப்படி:
* பாம்பின் வால் குறுக்கு வாக்கில் தட்டையாக அமைந்து இறுதியில் அகன்று இருந்தால் அது விஷமுள்ள கடற்பாம்பு வகையாகும்.
* பாம்பின் வால் பகுதி உருளை வடிவில் அமைந்து, வயிற்று புற செதில்கள் விரிந்து காணப்பட்டு,தலையில் சிறு சிறு செதில்கள் இருந்தால் அது விஷமுள்ள விரியன் பாம்பு வகைகள்.
* கண்ணுக்கும், மூக்கு துவாரத்திற்கும் இடையே சிறு குழி காணப்பட்டால் அது விஷமுள்ள குழிவிரியன் வகையாகும்.
* பாம்பின் முதுகின் நடுவில் உள்ள செதில்கள் அறுங்கோண வடிவில் அமைந்து, பிற செதில்களை விட பெரியதாக இருந்து, கீழ் உதட்டு செதில் பெரியதாக இருந்தால் விஷமுள்ள கட்டுவிரியன் வகையை சேர்ந்ததாகும்.
* வயிற்றுபுறம் விரிந்து காணப்படாமல் இருந்தால் அது விஷமற்ற பாம்புகளாகும்.
* தலைப் பகுதியில் பெரிய கவசத்தால் தகடுகள் அமைந்து சாதாரணமாக காணப்பட்டால் அவைகள் விஷமற்றவைகள்.
பாம்பு கடி முதலுதவி:
பாம்புகளில் நச்சு சுரப்பி, உமிழ்நீர் சுரப்பியிலிருந்து தோன்றியதாகும். விஷமுள்ள பாம்புகளின் கடி அனைத்துமே உயிரிழக்க செய்வதில்லை. விஷப் பாம்பு கடியின் பாதிப்பு உடலில் செல்லும் விஷத்தின் அளவைப் பொருத்தே அமையும். பாம்புக் கடியால் ஏற்படும் பல மரணங்கள் விஷத்தினால் ஏற்படுவதில்லை. அதிர்ச்சியினால் ஏற்படுவதாகும். எனவே, பாம்பு கடி பட்டவரை அதிர்ச்சியடையாமல் பார்த்து கொள்ள வேண்டும். கடிபட்ட இடத்திற்கு மேல் ரத்த ஓட்டம் தடைபடாத வகையில் கட்டு போட வேண்டும். பாம்பு கடிபட்டவரை விஷமுறிவு சிகிச்சையளிக்கு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும்.
good...nice...
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு