மே 1, 1776 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட ஒரு ரகசிய இயக்கம் இன்றும் நம்ம ஊர் போட்டி கடைகள் வரைக்கும் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டது. இந்த இயக்கம் இங்கோல்ஸ்டாட் இல் (மேல் பவரியா) மே 1, 1776 அன்று ஜீசிச-போதகர் ஆடம் வெய்ஷாப்ட் (இ. 1830) மூலமாக நிறுவப்பட்டது. இது நிழலான "ஆற்றலாக அதிகாரவர்க்கத்துக்கு பின்னால்" இல்லுமினாட்டி (லத்தின் வார்த்தையான இல்லுமினட்டஸ் இன் பன்மை, "தெளிவூட்டுதல்" என்று பொருள்) என்பது வரலாறு சார்ந்த உண்மையான மற்றும் கற்பனையான குழுக்களை குறிப்பிடும் பெயர் ஆகும். வரலாற்று ரீதியாக இது, பவரிய இல்லுமினாட்டி குழுவை குறிக்க பயன்படுகிறது. இந்தக் குழுவின் ஆதரவாளர்கள் "இல்லுமினாட்டி" என்ற பெயர் கொடுத்திருந்தனர். எனினும் அவர்கள் தங்களை "பெர்ஃபக்டபிலிஸ்டுகள் " என அழைத்தனர்.
நம்ம கிட்ட இருக்குற செல்வத்தை அபகரிக்க முதல்ல இவுங்க நம்ம ஆசைகளை தூண்ட வைப்பாங்க. நம்ம வரலாற்றை மறக்கடிப்பாங்க, நம்ம பழக்கவழக்கத்த மாத்துவாங்க.
நம்ம நாடு "பாரதநாட்டை" "இந்தியா"னு பெயர மாத்துனாங்க, இந்திய கல்வி முறையை மாத்தி அங்கிலேயர் கல்விக்கு மாத்துனாங்க. நம்ம வரலாற்றை மறக்கடிச்சு நாம் எப்படி அடிமை பட்டோம்னு பாடம் கொண்டுவந்தாங்க.
காலைல பழையசோறு குடுச்சிட்டு இருந்தவங்கள டீ காப்பி குடிக்க சொன்னீங்க
அப்பறம் அதுல பால் ஊத்தி குடிக்க சொன்னிங்க.
ராகி, கம்பு, சோளம் சப்பட் எங்கள அரிசி சோறு சாப்பிட சொன்னீங்க.
அப்புறம் அரிசிச்சோறு சாப்பிட்டா சர்க்கரை ஏறும்னு சொல்லி சப்பாத்தி சாப்பிடச் சொன்னாங்க.
அப்புறம் அரிசியும் கோதுமையும் ஒண்ணுதான், ஓட்ஸ் சாப்டா கொழுப்பு குறையும்னு சொன்னங்க,
அப்பறம் ஒட்ச்சவிட பழம் காய்கறி நிறைய சாப்பிடுங்கன்னு சொன்னாங்க.
சரின்னு காய்கறி சாப்பிட ஆரம்பிச்சா
அதையும் ரசாயனம் போட்டு பதப்படுத்தி கொடுத்தாங்க.
அப்பறம் இதுல ரசாயனம் இருக்குனு பூச்சிமருந்து தெளிக்கறாங்க ஆர்கானிக் காய் சாப்பிடுங்கன்னு கூவினாங்க.
போய்ப் பார்த்தா ஆனை விலை, குதிரை விலை. இருந்தாலும் ஆரோக்கியம் பெரிசுன்னு கேட்ட காச கொடுத்தோம்.
இப்ப என்னடான்னா ஆர்கானிக் எல்லாம் டுபாக்கூர், வாடின, வதங்கிய காய்தான் ஆர்கானிக்ன்னு ஏமாத்துறாங்கன்னு துப்பு சொல்றாங்க.
உப்பையும், சாம்பலையும் வேப்பங்குச்சியையும் வச்சு பல் விளக்கினோம்.
இல்ல இல்ல அப்படி பல் விளக்கினா எனாமல் தேஞ்சி போயிடும் பல் கூச்சம் வரும். அதனால பேஸ்ட் தான் நல்லதுன்னு சொன்னாங்க.
அதையும் நம்பி பேஸ்ட் யூஸ் பண்ணுனா அவங்க சொன்ன எல்லாமே இப்ப வந்துடுச்சி.
கேட்டா உங்க பேஸ்ட்டுல உப்பு இருக்கா? கரி இருக்கா? வேம்பு மற்றும் இலவங்க எண்ணெயின் ஆற்றல் இருக்கான்னு கேக்குறான்.
டேய் பல் கூச்சம் வர வைக்கிறதும் நீங்க தான். அதுக்கு பேஸ்ட் விக்கிறதும் நீங்கதானே ?
அதைவிடக் கொடுமை ஒண்ணு இருக்கு.
நாட்டுச்சக்கரையை/வெல்லத்தை/கருப்பட்டியை விட சீனி (அஸ்கா) தான் சுத்தமானது சுவையானதுன்னு சொன்னீங்க...
இப்ப அதுல ஊர்ல இருக்குற எல்லா கெமிக்கலும் இருக்கு. இப்ப அந்த சீனி மாதிரி விஷம் எதுவும் இல்லைனு சொல்லுறீங்க.
என்னடா இது அக்கப்போருன்னு வெறும் பச்ச தண்ணி குடிக்கலாம்னா, அது ஆபத்து.. R.O டெக்னாலஜில சுத்தம் பண்ணின தண்ணி குடிங்கன்னு சொன்னாங்க. ஒரு மெசினை வாங்கி மாட்டினோம் உடனே VU டெக்னாலஜி இருக்குறத வாங்குயங்கனு சொன்னதும் அதுல சத்து இல்ல, எலும்பெல்லாம் உடைஞ்சு போகும்னு இன்னொரு குரூப் பயம் காட்டுது.
மறுபடியும் பச்ச தண்ணிய அப்படியே குடிக்கச் சொல்றீங்க.
மனசு நொந்து போய் உட்காந்தா வந்தது இன்னொரு குரூப் வந்து
மாடில தோட்டம் போட்டு நாட்டுக் காய்கறி விதைகளைப் போடு, பொடக்காலியில செடி நடு, ஆபிஸ் (ஹைபிரிட்) விதைகள் வேண்டாம், மரபு மாற்றப்பட்ட விதைகள் வேண்டாம்... உனக்குத் தேவையான காய்களை நீயே வளர்த்து சாப்பிடு, நாட்டுக் கோழி வளர்த்தா முட்டையும் சிக்கனும் கிடைக்கும... தண்ணிய கொதிக்க வச்சு செப்பு அண்டாவுல ஊத்தி குடி, ஒரு நோயும் வராதுன்னு சொல்றாங்க....
அடப்பாவிகளா முப்பது வருசத்துக்கு முன்னாடி இப்படி தானடா நாங்கள் எல்லோரும் வாழ்ந்தோம்,....
பட்டணத்துக்கு வா பக்கவா வாழலாம்னு சொல்லி வரவச்சுட்டு, பொய்யான தகவல்களைச் சொல்லி இப்ப திருப்பி எங்க முன்னோர்கள் சொன்னது எல்லாம் சரி, அவங்க செஞ்சது எல்லாம் சரினு சொல்றாங்க. அதையும் பாகிட்போட்டு தான் கொடுப்போம் அத்தான் வாங்கனும்னு நம்ம அரசாங்கத்தையே சொள்ளவைப்பங்க இந்த பெர்ஃபக்டபிலிஸ்டுகள் என்னும் இல்லுமினாட்டிகள்.
சமையல் அறையிலிருந்து எங்க அம்மாவின் அழைப்பு
நான் சொல்லறதை எல்லாம் லிஸ்ட்ல எழுதி அந்த சாமானம் எல்லாம் வாங்கிட்டு வா
அந்த லிஸ்டை பார்த்ததும் தலை சுத்தியது கார்ப்ரேட் உலகிற்குள் எப்படி நாம் சிக்கியுள்ளோம் என்று..
1. Colgate - Paste
2. oral B - Brush
3. Rin - Washing Soap
4. Areal - Machine wash
5. Dove - Shampoo
6. Cinthol - Bath Soap
7. Harpic - Toilet wash
8. Laisol - Floor cleaner
9. Colin - Glass Cleaner
10. Vim gel - Vessel cleaner.
11. Parachute - Hair oil
12. All Out - Mosquito Repellent
13 Tata - Salt
14. Amul - Cheese
15. Horlicks - Health Drink
16. Pond’s - Powder
17. Parrys - Sugar
18. Annapurna - Atta
19. GRB - Ghee
20. 3 Roses - Tea powder
21 . Bru - Coffee powder
22. Sakthi - Masalas
23. Udhaiyam Dhall
24. Arokya - Milk
25. Milky Mist - Paneer
கருத்துரையிடுக