0
Image result for funny wedding with banana tree
மணமகன் தேவை விளம்பரங்களைவிட, மணமகள் தேவை விளம்பரங்களே அதிகம் இடம் பெறுகின்றது. குறிப்பிட்ட ஜாதியில் உள்ள உட்பிரிவுகள் எதையும் கணக்கில் பார்க்காமல் பெண் கிடைத்தால் போதும் என்ற நிலைக்குப் பிள்ளையைப் பெற்றவர்கள் வந்துவிட்டார்கள். இது ஒரு நல்ல மாற்றம்தான் என்றாலும், அப்போதும் பெண் கிடைத்தபாடில்லை. ஜாதக ரீதியாக தடைப்பட்ட திருமணத்தை, வருமானம், வசதி என்று பெற்றோர்கள் திருமணத்தை தள்ளிப் போடுகிறார்கள்!

இப்போதைய நிலைமைக்கு கல்யாணத்துக்கு தயாராக உள்ள ஆண் மற்றும் பெண் ஆகியோரின் விகிதாசாரத்தைக் கணக்கெடுத்தாள், பெண்களைவிட ஆண்களே அதிக எண்ணிக்கையில் திருமணத்திற்கு சரியான வயதையும் தாண்டி காத்திருக்கின்றனர்.

திருமணத் தடை போக நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாகப் பரிகாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வகைப் பரிகாரங்களில் முக்கிய இடத்தைப் பிடிப்பது, வாழை மரத்திற்குத் தாலிகட்டி பிறகு அதனை வெட்டிவிடும் சடங்கு. இந்த சடங்குகளைச் செய்வதால் திருமணத்தடை நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கை!

திருமணம் தள்ளிபோகும் ஒவ்வொரு வாலிபனும் சந்திக்கும் பொதுவான நிகழ்வுகள்.
நண்பன் : ஜி கல்யாணம் ஆய்டுச்சா?

நான் : ம்ம் பாத்துட்டு இருக்காங்க ஜி...

நண்பன் : சீக்கிரம் விருந்து போடுங்க....

2 வருஷம் முடிந்து 

நண்பன் : ஜி எனக்கு கல்யாணம் மறக்காம நீங்க குடும்பத்தோட வரணும். நீங்க உங்க கல்யாணத்துக்கு என்ன கூப்பிட மறந்துடீங்களா?

நான் : ஜி உங்களுக்குக்கு சொல்லாமலையா. இன்னும் எதுவும் செட்டாகள..

நண்பன் : இதை எல்லாம் தள்ளி போடாதிங்க சட்டுபுட்டுன்னு பாருங்க.

1 வருஷம் முடிந்து 

நண்பன் : இந்தாங்க ஸ்வீட் எடுத்துக்குங்க ஜி.. எனக்கு பொண்ணு பொறந்திருக்கா..

நான் : வாழ்த்துக்கள்

நண்பன் :  என்ன ஜி இன்னுமா செட் ஆகல?

நான் : நானும் பாக்குறேன் பாக்குறேன் ஏதாவது தடங்கல்ல நின்னு போகுது

நண்பன் : எனக்கு என்னவோ உங்க ஜாதகத்தில் தான் பிரச்சனைன்னு.. எதுக்கும் ஒரு நல்ல ஜோசியர்கிட்ட காமிங்க.

Image result for களத்திர தோஷம்
சரின்னு ஒரு ஜோசியர பாத்தா சுலபமா சொல்லிடுவாங்க உங்க ஜாதகத்துபடி இன்னும் திருமணம் நடந்திருக்காது. நீங்க பொருத்தம் பாக்கும் பெண் ஜாதகம் அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நடந்திருக்குமே என நம் அனுபவம் அனைத்தையும் புட்டு புட்டு வைப்பாங்க நாமும் நல்ல தலைய தலைய ஆட்டுவோம்.

உங்களுக்கு தோஷம் இருக்கு அத நிரவேத்தினா அடுத்த மாதமே திருமணம் நடக்கும்னு. இதற்க்கு நான் காசு வாங்குவது இல்ல என சொல்லிவிட்டு ஜாதகம் பார்த்த சார்ஜ் னு ஒரு 300 வாங்கிடுவாங்க

இந்த சார்ஜுக்கும் கூட ஒரு ஸ்லாப் இருக்கு நீங்க சுமாரான உடையில் இருந்த கொஞ்சம் கம்மியாகவும் கார்ல போனா அதிகமாகவும் இருக்கும். ஒரு விசிடிங் கார்டு உங்களுக்கு தருவாங்க இவர போய் பாருங்க எல்லாம் நல்லபடியா முடியும்னு சொலுவாங்க.

Image result for கொடுமுடி

நம்ம போய் அந்த எஜன்ட பாக்குற கேப்ல ஜோசியருக்கும் எஜண்டுக்கும் ஒரு டீலிங் நடக்கும்.
Related image
குறிப்பிட்ட கோவில் வந்ததும் நமக்கு பெரும் வரவேற்ப்பு இருக்கும். ஆத்துல மூணு தடவை தலை முழுகி ஒன்பது குடம் விநாயகர்க்கு தண்ணீர் உத்தனும். பிறகு அந்த எஜன்ட் ஒரு தோஷம் கழிக்கும் ஒரு குருக்களிடம் விடுவார். முதலில் பார்த்த ஜோசியர் சொன்ன அதையே திரும்ப நமக்கு ஒப்பிப்பார். பிறகு தோஷம் மற்றும் அதற்க்கு என்ன பரிகாரம் என ஒரு லிஸ்டு போடுவார்.

தோஷத்தில் பல பேக்கேசுகள் அவர்களிடம் தயாராக இருக்கும் அதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே இருக்கும்

திருமண தோஷங்கள் 
Image result for திருமண தோஷங்கள்

செவ்வாய் தோஷம்:

ராகு-கேது தோஷம்:

சூரிய தோஷம்:

களத்திர தோஷம்:

புத்திர தோஷம்.

மாங்கல்ய தோஷம்,

களத்திர தோஷம்
Related image

வாழைமரத்திற்கு தாலிகட்டி பின்பு வெட்டிவிடுவதால் களத்திர தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்று பரிகாரச் சடங்கு நடத்த வேண்டும். இரு தார யோகம் உள்ளோருக்காக அறிமுகப்படுத்தப்பட்ட சடங்கு என்றும் சொல்வார் அதாவது, ஜாதகத்தில் இரு மனைவிகளை உடையவர் என்ற அறிகுறி இருந்தால் முதல்மனைவியாக வாழைமரத்திற்கு தாலிகட்டிவிட்டு அதனை வெட்டியபிறகு இரண்டாம் தாரமாக பெரியவர்கள் பார்த்துவைத்திருக்கிற பெண்ணை மணமுடித்துக்கொள்ளலாம்,

பித்ரு தோஷம்
Related image

பெற்றோருக்கு திதி கொடுக்காதவர்கள், திதி கொடுப்பதே என்ன என்று தெரியாமல் இருப்பவர்கள், வாரிசு இல்லாதவர்கள், விபத்து, தற்கொலை, அகால மரணமடைந்தவர்கள்… இவர்களின் ஆத்மாக்களுக்கு சாந்தி ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில் தோஷம் ஏற்படும். இவை காலம் காலமாக தொடர்வதால் பித்ரு தோஷம் ஏற்பட்டு கால சர்ப தோஷமாக மாறும் என இரண்டு தோஷத்திற்கும் ஒரு இணைப்பு கொடுப்பார்கள்.

போன்ற தோஷங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படியே அமைந்து விட்டாலும் அதே போன்ற தோஷமுள்ள வரனாக பார்த்து ஜோடி சேர்த்தால் தான் வாழ்க்கை மகிழ்ச்சியளிக்கும். இல்லையென்றால் வாழ்க்கையே போராட்டமாகிவிடும்னு சொல்லுவாங்க...

Image result for பசு தானம்

நவகிரக ஹோமம், கணபதி ஹோமம், பசு தானம். அன்னதானம் இது எல்லாம் ஏடான் ஆக சேர்த்துக்கொள்வார்கள்..        

Image result for ஒருதலைக் காதல் திருமணம்

மேலே சொன்ன பூஜைகள், சடங்குகள் எல்லாம் நடக்கும்போது இடையில் காணிக்கை என்ற பெயரில் ஒரு வசூல் நடக்கும். எல்லாம் முடிந்ததும் பேமென்ட் உங்களுக்காக ஸ்பெசல் டிச்கௌன்ட் என் சொல்லி தலை சுத்தும் அப்போது ஜோசியரிடம் இருந்து ஒரு அழைப்பு வரும் ரெண்டு ஜாதம் இப்போ வந்துச்சு அது உங்க ஜாதகத்தோடு நல்லா பொருந்துதுன்னு. நாமும் ஆஹா பூஜை முடிந்ததும் நல்ல தகவல் வருதுன்னு அவங்க சொல்லும் பேமன்ட் பேரம் ஒரு முடிவிற்கு வரும்.

Image result for கொடுமுடி தோஷம்

மூன்று தினம் போனதும் அந்த ஜோசியரை போய் பார்த்தல் அவர் கூலா சொல்லுவார் அந்த ஜாதம் செட் ஆகாதுன்னு அதற்க்கு ஒரு காரணமும் சொல்லுவார் பிற்கால பலன் இல்லைன்னு.

Image result for ஒருதலைக் காதல் திருமணம்

இதனால் பலன் பெறுபவர்களை விட எமாருபவர்களே அதிகம். அனால் இவ்ளோ செலவு பண்ணுனதுக்கு ஒரு மன திருப்பி என்னனா வாழை மரத்துகாவது  தாலி கட்டிவிட்டோம்மென்று.  
  

கருத்துரையிடுக

 
Top