கான குயிலின் குரல் கொண்டு..., காலை பொழுதினில் என்னை நீ எழுப்பிட...,
கலையா என் தூக்கத்தில்..., கலை கொண்ட உன் முகத்தை பார்த்திட வேண்டும்..!
உணவு ஊட்டி விடுகையில்..., குழந்தையாய் மாறி..., உன் விரலினை கடித்திட வேண்டும்....!
புன்சிரிப்பு தான் வைத்து...., வேலைக்கு என்னை வழி அனுப்பிட வேண்டும்...!
மாலை நான் வருகையில்...., அதே சிரிப்பை திரும்பி நான் பார்த்திட வேண்டும்...!
சின்ன சின்ன விளையாட்டுகள் விளையாடிட..., செல்லமாய் நீ சிணுங்கிட வேண்டும்...!
மழை பொழியும் நேரத்தினில்...., இணைந்து நாம் நனைந்திட வேண்டும்....!
தலையணையிருந்தும்..., சில நேரம் நான் உன் மடியிலும்..., பல நேரம் நீ என் மார்பிலும் உறங்கிட வேண்டும்...!
சண்டைகள் போடுகையில் நீ கண்ணீர் சிந்திட..., என் கண்களும் கண்ணீர் சிந்தி விட வேண்டும்...! அக்கண்ணீரை துடைத்து..., உன்னை சிரிக்க வைத்திட வேண்டும்....!
என்னோடு என் வாழ்கை முழுவதுமாய்..., உன்னை அழைத்து சென்றிட வேண்டும்....!
நம் பிள்ளைகள் நீ சுமக்கையில்...., உன்னோடு சேர்ந்து..., அதன் வலியினை நான் பகிர்ந்திட வேண்டும்....!
நீ பிள்ளையை கண்டித்து வளர்க்கையில்...., நான் குறுக்கிட வேண்டும்....!
என் வாழ்க்கை வழியில்...., உன் உயிர் நிற்கும் இடத்திலேயே....., என் உயிரும் நின்றிட வேண்டும்"...!
வேரொன்றும் வேண்டாமடி....! இது போதுமே நம் தாம்பத்திய வாழ்க்கைக்கு....!!!
இப்படியெல்லாம் எழுதி குடுத்தா வேலையில்லாம வெட்டி வேலையானு தான் சொல்லுவாங்க
காதலை இரண்டடியில் அதிக அதிகாரத்தில் நம் உலகுக்கு சொன்ன வள்ளுவரும் தன் மனைவி வாசுகிக்கு நான்கடியில் பாட்டு பாடியுள்ளார்.
அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.
அவளுடைய கணவர் சாப்பிடும் போது, கையில் ஒரு ஊசி வைத்திருப்பார். கீழே விழும் சோரை எடுத்து தண்ணீர் உள்ள ஒரு கிண்ணத்தில் போடுவார். தண்ணீரை உடைத்து விட்டு, மீண்டும் அந்த சோறைப் சாப்பாட்டுடன் கலந்து கொள்வார். அந்த காரணத்திற்காக அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.
வள்ளுவரின் வீட்டுக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சப்பிட்டனர். வள்ளுவர் வாசுகிடிடம், சோறு சூடாக இருக்கிறது. விசும்பு, என்றார். பழைய சோறு எப்படி சுடும்? அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். கணவனுடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்போக்குவம் கொண்டிருந்தார்.
அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்து கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்புறமாக விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம். இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்தவன் தானே!
அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார். அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவளே, மனைவியின் பிரிவைத் தாளாமல்,
அடிசிப் கினிகே! அன்பை யாளே!
படிசொற் கடவாத பாவாய்! -அடிவருடிப்
பின்தூங்கி முன்னேழூஉம் பேதையே! போதியோ?
எந்தூங்கும் என்கன் இரா "
அடியிற்கினியாளே அன்படையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்பெற்றும் பேதாய்-
இனிதா (அ) ய் என் தூங் என்கண் இரவு
என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார். ஆடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதைகள் வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எத்தனினில் இரவில் தூங்கப் போகிறதுவோ! என்று பாட்டின் உருக்கமான பொருள். இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகள்களுக்கு கூட, நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா!
வணக்கம்,
பதிலளிநீக்குwww.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.
இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.
அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.
நன்றி..
Tamil US
www.tamilus.com
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்கு